தாவர ஜங்கமமாக விளங்கும் இந்த பிரபஞ்சம் எல்லாம் எந்த பிரக்ருதி தேவியைஆதாரமாகக் கொண்டு இருக்கிறதோ அந்த தேவியின் கலைகளில் தோன்றிய கலாதேவிகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிவிக்கிறேன்..

சுவாகா தேவி என்பவள் அக்னியின் மனைவி.. இந்த தேவி இல்லாவிடில் ஹோமம் செய்யும் அவிசை தேவர்கள் பெறுவதற்கு வலிமை இருக்காது..
தக்ஷிணா தேவி தீக்ஷா தேவி என இரண்டு தேவிகள் உண்டு.. அவர்கள் யக்ஞ பத்தினிகள்.. இவர்கள் பூஜிக்க படாவிட்டால் உலகில் உள்ள எல்லா செயல்களும் வீணாகிப் போகும்..
தர்ப்பண காலத்தில் உச்சரிக்கும் சுவதாதேவி என்பவள் பித்ருக்களின் பத்தினியாவாள்.. இவளை பூஜைக்காவிடில் பித்ருக்களின் பூஜை வீணாகும்.. சுவஸ்தி தேவி என்பவள் வாயுவின் பத்தினியாக கருதப்படுகிறாள்.. தானம் வாங்கும்போதும் கொடுக்கும் போதும் இந்த தேவி போற்றி துதிக்கப் படுகிறாள்..
புஷ்டி என்பவள் கணேசரின் பத்தினியாக திகழ்கிறாள்..இவள் இல்லாவிடில் எல்லோரும் பலஹீனம் அடைந்து நலிந்து விடுவார்கள்.. இந்த தேவிக்கு உத்தரகாண்ட் மாநிலம் ஜாகேஷ்வர் என்ற இடத்தில் கோயில் உள்ளது..
துஷ்டி தேவி என்பவள் ஆதிசேடனின் பத்தினியாக விளங்குகிறாள்.. இவள் இல்லா விட்டால் யாரும் ஆனந்தம் அடைய முடியாது..சம்பத்துதேவி என்பவள் ஈசான பத்தினியாக இருக்கிறாள்.. இவள் இல்லா விட்டால் யாரும் வறுமை அடைவார்கள்..திருதி தேவி என்பவள் கபிலரின் தனியாக இருக்கிறாள்.. இவள் இல்லாவிட்டால் தைரியமும் இல்லாமல் போகும்.. சதி தேவி என்பவள் சத்திய பத்தினியாக திகழ்கிறாள்.. இவள் இல்லா விட்டால் உறவினர்களும் இருக்க மாட்டார்கள்…தயா தேவி பதிவிரதா தேவி என்பவர்கள் மோகப் பத்தினிகள் இவர்கள் இல்லாவிட்டால் யாரும் ஒரு பயனும் அடைய முடியாது.. பிரதிஷ்டை என்பவள் புண்ணிய பத்தினி.. இவளை வழிபடாத மனிதர்கள் நடை பிணங்களுக்கு ஒப்பாவார்கள்..
சம்சித்தி தேவி கீர்த்தி தேவி என்பவர்கள் சுகர்மத்துக்கு பத்தினிகள்.. புண்ணிய சீலர்களால்இந்த தேவிகள் போற்றி துதிக்கப்படாவிட்டால் உலகமெங்கும் புகழ் நசித்துப் போய் விடும்.. கிரியை என்னும் தேவி உத்தியோக பத்தினியாக இருக்கிறாள்.. இவள் இல்லாவிட்டால் உலகம் சோம்பலுற்றுவிடும்.. மித்தியா தேவி என்பவள் அதர்ம பத்தினியாக இருக்கிறாள்.. இவள் துஷ்டர்களால் போற்றப்படுகிறாள்.. இவள் இல்லாவிட்டால் உலகம் பாழ் வெளியாகிவிடும்.. இவள் கிருதயுகத்தில் உருவமற்றவர் ஆகவும் திரேதாயுகத்தில் நுண்ணுருவினளாகவும் துவாபர யுகத்தில் பூரண உருவம் உடையவளாகவும் இருப்பாள்.. தன் வலிமையினால் எங்கும் வியாபித்து தன் சகோதரனான கபடனோடு வீடுகள் தோறும் சஞ்சரித்துக் கொண்டு இருப்பாள்.. சாந்தியும் லஜ்ஜையும் சுசீல பத்தினிகளாக இருக்கிறார்கள்.. இவர்கள் எல்லோராலும் ஆராதிக்கப் படுகின்றார்கள்..
இவர்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் பித்து பிடித்தது போல் மாறிவிடும்.. தியான பத்தினிகளாக புத்தியும் மேதையும் திருதியும் விளங்குகிறார்கள்.. இவர்கள் இல்லாவிட்டால் உலகம் அறிவிழந்து சித்த பிரமை பிடித்தது போல் ஆகிவிடும்.. காந்தி என்பவள் தர்ம பத்தினியாக இருக்கிறாள்.. இவள் இல்லாவிட்டால் பிரபஞ்ச வடிவான பரமாத்மாவுக்கு ஆதாரம் இருக்காது.. சோப ஒளி உருவான லட்சுமி என்பவள் மதி பத்தினி.. இவள் பெண் உருவமாகவும் உடல் உருவமாகவும் தானியம் முதலானவற்றின் உருவமாகவும் போற்றி வழிபாடு செய்யப் படுகிறாள்.. காலாக்னி தேவி மற்றும் சித்தயோ கினியான நித்திரா தேவியும் ருத்ர பத்தினிகளாக இருக்கிறார்கள்.. இவர்கள் உலக முழுவதும் வியாபித்து இருக்கிறார்கள்.. இவர்கள் இல்லாவிடில் நான்முகப் பிரம்மனாலும் காலத்தை கணிக்க இயலாது..
மற்ற தேவிகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்