திதிகளைப் பற்றிய விவரங்களை இந்த பகுதியில் விவரித்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் ஆகும்.. அந்த வகையில் இதுவரை பிரதமையில் தொடங்கி திருதியை வரை பார்த்துள்ளோம்.. இன்றைய பதிவில் சதுர்த்தி திதி பற்றி பதிவு செய்கிறேன்.. அம்மாவாசை நாளையும் பூரணை நாளையும் அடுத்து வரும் 4வது திதி சதுர்த்தி ஆகும்..அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி சுக்லபக்ஷ சதுர்த்தி என்றும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தி கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி என்றும் சொல்லப்படுகிறது..சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 36 பாகையில் இருந்து 48 பாகையாகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச சதுர்த்தி திதியும் 216 பாகையில் இருந்து எனக்கு 228 பாகை வரை செல்வதற்கான காலம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது..
இந்து சமயத்தின் அவருக்கு உரிய சிறப்பு நாட்களில் சதுர்த்தியில் வரும் பண்டிகைகளும் விரதங்களும் பின்வருமாறு:
விநாயகர் சதுர்த்தி:-ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தி அதாவது வளர்பிறை சதுர்த்தி திதி..
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படும் திதி சுக்லபட்ச சதுர்த்தி ஆகும்.. ஆயினும் அதன் தொடக்கம் ஆவணி தேய்பிறை சதுர்த்தியில் இருந்து ஆரம்பிக்கிறது..
சதுர்த்தி திதி பற்றி வராக புராணத்தில் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்..
இந்த சுக்லபக்ஷ சதுர்த்தி விரதம் விநாயகருக்கு அனுஷ்டிக்கப்படுகிறது.. இந்நாளில் எள்ளினை உண்ணுவது புண்ணியத்தைக் கொடுக்கும்.. தொடக்கத்தில் தகுதியை அடிப்படையாகக் கொண்டே எல்லா காரியங்களும் நடந்தன..காலப்போக்கில் நேர்மைக்கு இடம் குறைந்து கொண்டே வர தேவர்கள் இந்த முட்டுக்கட்டைகளை நீக்கி நல்ல காரியங்கள் நடைபெற ஒரு தேவனை உருவாக்கும்படி ருத்ரனை வேண்டினர்.. இதைக் கேட்ட ருத்ரன் விநாயகன் என்ற பெயரில் ஒரு உருவத்தை தன் வாயிலிருந்து தோற்றுவித்தார்.. அது தவிரயார் என்று தெரியாமல் தேவர்கள் குழம்பினர்.. பிரம்மன் தலையிட்டு ருத்ரனின் கோபத்தை அடக்கி விநாயகனுக்கு கணபதி என்ற பெயர் கொடுத்தார்..சதுர்த்தி சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.. விநாயகர் பிறப்பு பற்றி மற்ற புராணங்கள் வெவ்வேறு விதமாக கூறுகின்றன..
இனி அடுத்த தீவுகளான பஞ்சமி மற்றும் சஷ்டி ஆகியவைகளைப் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்..