சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்கள் பற்றி பதிவு செய்து அந்த வகையில் மற்றுமொரு நாயன்மார் பற்றி பதிவு செய்ய இருக்கிறேன்..

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிறந்த மாறனார் உழவுத்தொழிலில் வந்த பெருஞ்செல்வமும்சிவனடியார் இடத்து அன்புள்ளம் உடையவராய் சிவனடியார் தம் இல்லத்திற்கு வந்தால் எதிரே சென்று கைகூப்பி வணங்கி இனிய மொழிகளைக் கூறி வரவேற்று அவர்களுக்கு உணவு அளிப்பார் நாள்தோறும் செய்த மகேஸ்வர பூஜை என்னும் சிவ புண்ணியத்தால் அவரது செல்வம் நாளுக்கு நாள் வளர்ந்து பெருகி குபேரன் போன்ற பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்தார்..
அடியார்க்கு திருவமுது அளித்தலாகியஇந்தத் திருப்பணியை செல்வ காலத்தில் மட்டுமின்றி வறுமையுற்ற காலத்திலும் செய்து வந்தார் என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்த இறைவன் திருவுள்ளம் கொண்டார்.. இதனால் மாறனாரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது இவ்வாறு செல்வம் சுருங்கினாலும்தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும் கடன் வாங்கியும் அடியார்க்கு அமுது அளிக்கும் பணியை விடாது செய்து வந்தார்..
செல்வம்தான் சுருங்கிக்கொண்டே வந்ததே தவிர அவரது உள்ளம் மட்டும் சுருங்காமல் நிறைவு பெற்றிருந்தது விற்று விற்று கைப்பொருள் யாவும் தீர்ந்த போதும் கையில் இருந்த சொற்ப பணத்திற்கு சிறிதளவு நிலத்தை குத்தகைக்கு வாங்கினார் அதில் சிறிதளவு விதை நெல்லை விதைத்தார் வீணாகிவிடுமே என்று கவலைப்பட்டார் மாறனாரும் அவரது மனைவியும் பசியாலும் குளிராலும் வாடினர்.. இவ்வாறு இருக்கும்போது, தாம் உணவின்றிப் பசியால் வாடிய போதும் இரவு வெகுநேரம் வரை சிவனடியார்கள் யாரும் வராமை கண்டு மனம் வருந்தி கதவை பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார் நள்ளிரவு ஆனபோது சிவபெருமான் அடியார் கோலம் கொண்டு மாறனாரின் வீட்டிற்கு எழுந்தருளி கதவைத் தட்டி அழைத்தார் மாறினார் கதவை திறந்து அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்று அவர் அமர்வதற்கு இடம் கொடுத்தார்..அடியார்க்கு உணவளிக்க வீட்டில் ஏதும் இல்லையே என்ற வருத்தம் மிகுந்திருந்தது இருந்தபோதிலும் அன்றைய பகல் பொழுதில் விதைக்கப்பட்ட நெல் மணிகளை சேகரித்து வந்து கீரைகளைப் பறித்துஅடுப்பெரிக்க விறகு இல்லாமல் வீட்டில் சிதிலமடைந்த கூரையில் இருந்த மரக்கட்டைகளை பயன்படுத்தி உணவு சமைத்து மாறனாரும் அவரது மனைவியும்சிவனடியாருக்கு உணவு படைத்தனர் அப்போது அடியாராக வந்த சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய் எழுந்து தோன்றினார் அதுகண்டு மாமனாரும் அவரது மனைவியும் திகைத்து நின்றனர் சிவபெருமான் உமாதேவியாருடன் ரிஷபத்தின் மேல் தோன்றி “அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ உன் மனைவியோடும் என் பெரும் உலகம் ஆகிய சிவலோகத்தை அடைந்து பேர் இன்பம் அனுபவித்து இருப்பாயாக”என்று அருள் செய்து மறைந்தருளினார்..

“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்”என்று திருத்தொண்டத் தொகையில் இவரது சிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
இவரது குருபூஜை ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது..