இதுவரை பிரகிருதி தேவியின் அம்சங்களைக் கொண்ட மற்ற தேவிகளைப் பற்றி பார்த்து வருகிறோம்.. அந்த வகையில் நாம் பார்க்க இருப்பது மங்கள சண்டிகை தேவி..
மங்கள சண்டிகை

இந்த தேவி பிரக்ருதிதேவியின் முகத்திலிருந்து தோன்றி எப்பொழுதும் சர்வ மங்களத்தையும் கொடுப்பவன் ஆவாள்.. ஸ்ருஷ்டி காலத்தில் மங்கள ஸ்வரூபிணி ஆகவும் சங்கார காலத்தில் கோப உருவினளாகவும் இருப்பதனால் இவளை மங்கள சண்டிகை என்று கூறுகிறார்கள்.. இவள் மங்களவாரம் என்று சொல்லப்படுகின்ற செவ்வாய்க்கிழமை தோறும் பூஜிக்க படுகிறார்.. புத்திரன் பேரன் செல்வம் புகழ் முதலியவற்றை பெண்களுக்கு வழங்கி மகிழ்வூட்டுகிறாள்..
காளிகா தேவி

இந்த சக்தி கோபத்துடன் சகல பிரபஞ்சம் களையும் ஒரே நேரத்தில் அளிக்க வல்லவள்.. இவள் பிரக்ருதியானமுகத்திலிருந்து பகுதி அம்சமாக சும்ப நிசும்பர்களை அழிக்கத் தோன்றியவள்.. தாமரை மலர் போன்ற விழிகள் வாய்ந்தவள்.. தேஜஸினாலும் குணத்தினாலும் துர்கா தேவிக்கு சமமானவள்..கோடிச் ஊழியர்களுக்கு ஈடாக பிரகாசிக்கும் உட்காந்தி கொண்டவள்.. மிகவும் வலிமை வாய்ந்தவள்.. சகல சித்திகளும் கொடுப்பவள்.. கிருஷ்ணரிடம் பக்தி உள்ளவள்.. கிருஷ்ணருக்கு சமமான தேஜஸ் விக்ரமகுணங்கள் பாவனைகள் நிறம் முதலியவற்றை கொண்டவள்.. ஒரே மூச்சில் சகல பிரமாண்டங்களையும் அளிக்கக் கூடியவள்.. தன் ஆற்றலின் பெருமையால் உலகிற்கு உணர்த்துபவள்..அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கையும் விரும்புகின்றவர்களால் ஆராதனை செய்யப்படுகிறாள்…
பூதேவி அல்லது பூமாதேவி

இந்த சக்தி பிரம்மன் தேவர்கள் முனிவர்கள் மனிதர்கள் ஆகியோரால் போற்றி துதிக்கப்படுகிறாள்.. இவள் பிரகிருதி தேவியின் முக்கிய அம்சங்களால் பிறந்தவள்.. எல்லாவற்றுக்கும் அடிப்படையானவள்.. எல்லா ஔஷத ரூபிணியும் இவளே ஆவாள்.. இவள் ரத்தினங்களுக்கு ஸ்தானம் ஆவாள்.. ரத்தின கர்ப்பிணி.. சமுத்திரங்களுக்கு எல்லாம் ஆதாரமானவள்.. மக்களாலும் மன்னர்களாலும் போற்றி பூஜிக்கப்படுபவள்.. அனைவருக்கும் ஜீவனோபாயரூபிணியாகவும் சகல சம்பத்தையும் தந்து அருள்பவளாக விளங்குகிறாள்..
அடுத்து நாம் பார்க்க இருப்பது தாவர ஜங்கம மாக எல்லாம் எந்த பிரகிருதி தேவியை ஆதாரமாககொண்டு இருக்கிறதோ அந்த தேவியின் கலைகளினால்தோன்றிய கலா தேவைகள் பற்றியும் அவர்கள் யார் யாருக்கு பத்தினிகள் என்பதையும் பற்றி பார்க்கலாம்..