இந்த பகுதியில் இதுவரை நாம் பிரதமை மற்றும் த்விதியை ஆகிய இரண்டு திதிகள் பற்றி பார்த்தோம்.. இன்று நாம் பார்க்க இருப்பது திருதியை எனும் துதியை பற்றி.. வானியலின் விளக்கத்தின் படி அமாவாசை அல்லது பவுர்ணமி முடிந்த மூன்றாவது நாளை திரிதியை என்று அழைக்கின்றோம்.. இது மூன்றாவது திதியும்18 ஆவது திதியும் என்பதால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 24 டிகிரி யில் இருந்து 36 டிகிரி ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பக்ஷ த்ரிதியை என்றும் 204 டிகிரி யில் இருந்து 216 டிகிரி வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சத் திரிதியை என்றும் அழைக்கப்படுகிறது..

திரிதியை திதியை பற்றி வராக புராணத்தில் கூறியிருப்பது என்னவென்றால், இந்த திதி ருத்ரனுக்கு ஏற்ற நாள்..இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் திருமணமான தம்பதியருக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும்..
பிரம்மன் ருத்திரனை தோற்றுவித்து உற்பத்தி தொழிலை பார்த்துக் கொள்ளும்படி கூறினார்.. அவன் தன்னால் இயலாது என்று கூறி மறுத்ததும்,தியானம் செய்து சக்தியை பெருக்கிக் கொள்ளும்படி கூறி அனுப்பினார் பிரம்மன்.. ருத்ரனும் அவ்வாறே செய்ய நீரிலிருந்து ஒளியுடன் கூடிய உடம்புடன் வெளியே வந்தார்..
தட்சன் ஒரு யாகம் செய்து வந்தார் நீரில் இருந்து வந்தவுடன் இந்த யாகம் பற்றி கேள்விப்பட்டு சினம் கொண்டார் பிரம்மா என்னிடம் உற்பத்தி தொழிலை கொடுத்து அதற்காக ஆயிரம் வருடங்கள் தியானம் செய்து வருமாறு சொல்லி இருந்தார் நான் தவம் செய்துசக்தியை பெருக்கிக் கொண்டு என்னுடைய தொழிலை ஆரம்பிக்கும் முன்னால் இந்த யாகத்தை நடத்தியவர்கள் யார் அதில் கலந்து கொண்டவர் யார் இவர்கள் எல்லாம் யார் இவர்களை தான் அழித்தே தீருவேன் என்று கூறினார் அவனை சமாதானப்படுத்த தட்சன் தன் மகளாகிய தாட்சாயணியை ருத்ரனுக்கு மணம் செய்து கொடுத்தார்
தட்சனின் யாகம் பற்றிமற்ற புராணங்கள் கூறும் கதையில் இருந்து மாறுபட்ட கதையினை வழங்குகிறது வராக புராணம்
ருத்ரனை மணந்த தாட்சாயணி ருத்ரனுக்கு தன் தந்தை அவமானம் செய்துவிட்டார் என்பதை கருத்தில் கொண்டு இமயமலை சென்று கடும் தவம் புரிந்தாள் தட்சன் கொடுத்த அந்த உடம்பை நீத்தாள் தாட்சாயணி..இமவான் மகளாக பார்வதியாக மீண்டும் பிறந்தார் சிவனை அடைவதற்காக தவத்தில் ஈடுபட்டார் ஒருநாள் மெலிந்த தேகத்துடன் பிராமணன் ஒருவர் பார்வதிதேவியின் ஆசிரமத்திற்கு தானம் கேட்டு வந்தார் அவருக்கு பார்வதியும் சேர்ந்த உணவினை கொடுத்தார் உணவை உண்பதற்கு முன்பாக அந்த பிராமணர் ஆற்றில் குளித்து வரச் சென்றார் அவ்வாறு அவர் ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும்போதுஒரு முதலை அவர் காலை பற்றி கொண்டது பிராமணர் பெருங்குரலெடுத்து மற்றவர்களை உதவிக்கு அழைத்தார்
பார்வதிக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஏற்பட்டது அந்த பிராமணனுக்கு உதவி செய்தாக வேண்டும் ஆனால் அவர் தனது கணவரும் அல்லர் உறவினரும் அல்லர். அப்படிப்பட்ட ஒருவரை தொட்டு உதவி செய்தால்அது தவறாகும் அதே நேரத்தில் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி செய்யாமல் விட்டுவிட்டால் அந்த பிராமண இறந்துவிடுவார் பிறகு அந்த பாவம் தன்னை வந்து சேரும் அந்த பிராமணனுக்கு உதவி செய்ய அந்த பிராமணரை தொட்டவுடன் அவர் உருவம் கலைந்து உண்மையான சிவன் வெளிப்பட்டார்சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது தேவர்கள் முனிவர்கள் மற்றும் எல்லோரும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள்..

அந்த திருமணம் திரிதியை திதியில் நடைபெற்றது ஆகவே அந்த திதியில் ருத்ரனை வழிபடுவது சிறப்பாகும்
அட்சய திருதியை

அட்சய திருதியை என்பது இந்து மற்றும் சமணர்களின் புனித நாளாகும் இது சித்திரையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும்மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கருதப்படுகிறதுபகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதியை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வர வைத்தது இந்த நாளில் தான் என்று சொல்லப்படுகிறது
சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசப தேவரின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது
அட்சயா என்ற சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது என்னும் பொருளில் வழங்கப்படுகிறது மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறதுகுறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம் வெள்ளி அவற்றினால் செய்யப்பட்ட நகைகள் வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது மரபியல் வழிவந்தவர்கள் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்த ஒரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என கூறுகின்றனர் ஆகையால் ஒரு வணிகத்தினை துவங்குவதுகட்டடம் கட்ட பூமிபூஜை விடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்
ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயர் ஒளியுடன் விளங்குவார்கள் என நம்பப்படுகிறது அட்சய திருதியை நவன்ன பருவம்எனவும் அழைக்கப்படுகிறது ரோகிணி நட்சத்திரத்துடன் வரும் அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது..
அட்சய திருதியை நாளில் வேத வியாசர் மகாபாரதத்தை விநாயகரிடம் எழுதச்சொல்லி கட்டளையிட்டார்காசியில் அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தமது பிச்சைப்பாத்திரம் நம்பும்படி உணவைப் பெற்றுக் கொண்டதும் இந்த நாளில்தான் பாஞ்சாலியின் மானம் காக்க கண்ணன் அட்சய என்று கூறி ஆடையை வளரச் செய்வதும் இந்த நாளில்தான் வங்காளத்தில் அட்சய திருதியை நாளில் அல்கதா என்னும் விழாகொண்டாடப்படுகிறது அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிக கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாள் ஆகும் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றார்கள் இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாயச் சமூகத்துக்கும் மங்களகரமான நாள்..