சைவ அடியார்கள் ஆன நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்.. ஆர் பாடிய நாயன்மார் 60 பேர் மட்டுமே 63 பேர்கள் அல்ல.. சுவாமிமலைக்கு படி 60.. தமிழ் ஆண்டுகள் அறுபது.. மனிதனுக்கு மணிவிழா செய்வதும் 60வது வயதில்.. ஒரு நாளைக்கு நாழிகை 60.. ஒரு மணிக்கு நொடிகள் 60 ஒரு நொடிக்கு வினாடிகள் 60.. இப்படி எல்லாமே 60 தான்.. இவர்கள் பற்றி பாடிக்கொடுத்த சுந்தரமூர்த்தி நாயனாரை பெற்றவர்கள் அப்பா அம்மா சடையனார், இசைஞானியார் ஆகியோர் சேர்ந்து 63 ஆக ஆக்கினார்.. அந்த வழியில் வந்த ஒரு நாயன்மார் இயற்பகையார்..
இவர் சோழ வளநாட்டில் காவேரி சங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்தார்.. இவர் பிறப்பிலேயே பெரும் செல்வந்தராக விளங்கினார்.. இல்லறத்தின் பெரும்பேறு இறை அடியார் தம் குறை முடிப்பது என்பது அவரது கொள்கையாக இருந்தது.. ஆகையினால் சிவனடியார் யார் வந்தாலும் அவர் வேண்டுவதை இல்லை என்று இல்லாது கொடுக்கும் உயர் பண்பு கொண்டவராய் வாழ்ந்து வந்தார்..
ஒருநாள் சிவபெருமான் தூய திருநீறு பொன் மேனியில் அணிந்து ஒரு அந்தணர் வேடத்தில் இயற்பகையார் வீட்டினை அடைந்தார்..அந்த அடியார் தனது வீட்டிற்கு எழுந்தருளியது தனது பெரும் தவம் என்று வழிபட்டு வரவேற்றார்.. வந்த வேதியர் அன்பரை நோக்கி” சிவனடியார்கள் வேண்டுவனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காத உன்னிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன்.. அதனை நீர் தருவதற்கு இணங்குவீர்கள் என்றால் அது என்ன என்று சொல்வேன்” என்று கூறினார்..அதனைக் கேட்ட இயற்பகையார் “என்னிடம் இருக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை.. இதில் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டாம்…நீர் விரும்பிய அதனை கேட்டுப் பெறுங்கள்” என்று கூறினர்..
அதனைக் கேட்ட வேதியர்” உன்னுடைய மனைவியை எனக்கு பணிபுரிய அனுப்பி வைக்க வேண்டும் அதனை விரும்பியே வந்தேன்” என்று கூறினார்..
நாயனார் முன்பு இருந்ததைவிட மிக மகிழ்ந்து” எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயன் ஆகும்” என்று கூறி வீட்டிற்கு உள்ளே புகுந்து கற்பிற் சிறந்த அவரது மனைவியாரை நோக்கி” பெண்ணே! இன்று உன்னை என்னைப் படைத்தவர்க்கு நான் கொடுத்து விட்டேன்”என்றார்.. அது கேட்ட அவரது மனைவியார் முதலில் கலங்கினார்.. பின்னர் தெளிவு பெற்று தன் கணவரை நோக்கி” என் உயிர் தலைவரே! எனது கணவர் ஆகிய நீர் எமக்கு பணித்து அருளிய கட்டளை இதுவே ஆகின் நீ கூறியதைத் தவிர நான் வேறு என்றும் செய்ய எனக்கு உரிமை உள்ளதா?” என்று சொல்லி தன் பெரும் கணவராகிய இயற்பகையை வணங்கினார்.. பின்னர் அந்த வேதியரின் சேவடி பணிந்து திகைத்து நின்றார்..
அதற்குப் பின்னர்” இது தவிர நான் தங்களுக்கு வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று இயற்பகையார் அந்த வேதியரை கேட்டார்..
அதற்கு அவர் மறுமொழியாக” இந்த நங்கையை நான்தனியே அழைத்துச் செல்வதற்கு உமது அன்புடைய சுற்றத்தாரையும் இந்த ஊரையும் கடப்பதற்கு நீ எனக்கு துணையாக வருதல் வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்..
அது கேட்ட இயற்பகையார்” நானே முன்னிருந்து செயற்கரிய இப்பணியைச் செய்து காப்பேன்” என்று சொல்லி, போர்க்கோலம் பூண்டு வாளும் கேடயமும் தாங்கி வந்தார்.. வேதியரை வணங்கி அந்த மாதினையும் அவரையும் உன்னை போகச் சொல்லி அவர்களுக்கு துணையாக பின் தொடர்ந்து சென்றார்..
இந்த செய்தியை கேட்ட அவரது மனைவியாரின் சுற்றத்தாரும், இயற்பகையாரின் சுற்றத்தாரும்,” இயற்பகை என்ன பித்தனா? என்று வெகுண்டெழுந்து அவர்களை வளைத்துக் கொண்டனர்.. இயற்பகையாரிடம் இது இயற்கைக்கு மாறான செயல்.. தகாத செயல் என்று பலரும் கூறி சண்டையிட்டனர்.. அது கேட்ட இயற்பகையார் அவர்களுடன் சண்டையிட்டு வேதியரையும் அவருக்கு துணையாக தான் அனுப்பிய மாதினையும் பத்திரமாக திருச்சாய்க்காடு வரை உடன் சென்று அனுப்பிவைத்தார்.. பின்னர் தனது ஊருக்கு திரும்பினார்..
மனைவியாரை உவகையுடன் அளித்து திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார்..அவருக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.. நாயனார் தன்னை சோதித்தது எம்பெருமான் தான் என அறிந்து மிகவும் மகிழ்ந்தார்.. உலகத்திற்கு அரிய இயற்கைக்கும் மீறிய செயலினை செய்ததனால் இன்று முதல் நீ இயற்பகையார் என அழைக்கப்படுவாய் என்று சிவபெருமான் அவரை வாழ்த்தினார்.. இந்த திருத்தொண்டரும் அவரது மனைவியும் இறைவனைக் கும்பிட்டு சிவலோகத்தில் உடன் அடையும் பெருவாழ்வு பெற்றனர்.. அவர் தன் சுற்றத்தார் போரில் உயிர் துறந்தவர்கள் யாவரும் வானுலகமடைந்து இன்புற்றனர்..
இவரது குருபூஜை திருச்சாய்க்காடு என்று சொல்லப்படுகின்ற பூம்புகாரில் சாயாவனேஸ்வரர் திருக்கோயில் மார்கழி உத்திரம் நன்னாளன்று அனுசரிக்கப்படுகிறது..
“இல்லையே எனாத இயற்பகைக்கும் அடியேன்”என்று திருத்தொண்டத் தொகை வருணிக்கிறது.. இயற்கைக்கு மீறிய செயலால் செய்த இயற்பகை என்ற பெயர்பெற்ற இவரது இயற்பெயர் என்னவென்றே தெரியவில்லை..
நாயனார் என்பவர் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..
இவர் சோழ வளநாட்டில் காவேரி சங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்தார்.. இவர் பிறப்பிலேயே பெரும் செல்வந்தராக விளங்கினார்.. இல்லறத்தின் பெரும்பேறு இறை அடியார் தம் குறை முடிப்பது என்பது அவரது கொள்கையாக இருந்தது.. ஆகையினால் சிவனடியார் யார் வந்தாலும் அவர் வேண்டுவதை இல்லை என்று இல்லாது கொடுக்கும் உயர் பண்பு கொண்டவராய் வாழ்ந்து வந்தார்..
ஒருநாள் சிவபெருமான் தூய திருநீறு பொன் மேனியில் அணிந்து ஒரு அந்தணர் வேடத்தில் இயற்பகையார் வீட்டினை அடைந்தார்..அந்த அடியார் தனது வீட்டிற்கு எழுந்தருளியது தனது பெரும் தவம் என்று வழிபட்டு வரவேற்றார்.. வந்த வேதியர் அன்பரை நோக்கி” சிவனடியார்கள் வேண்டுவனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காத உன்னிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன்.. அதனை நீர் தருவதற்கு இணங்குவீர்கள் என்றால் அது என்ன என்று சொல்வேன்” என்று கூறினார்..அதனைக் கேட்ட இயற்பகையார் “என்னிடம் இருக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை.. இதில் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டாம்…நீர் விரும்பிய அதனை கேட்டுப் பெறுங்கள்” என்று கூறினர்..
அதனைக் கேட்ட வேதியர்” உன்னுடைய மனைவியை எனக்கு பணிபுரிய அனுப்பி வைக்க வேண்டும் அதனை விரும்பியே வந்தேன்” என்று கூறினார்..
நாயனார் முன்பு இருந்ததைவிட மிக மகிழ்ந்து” எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயன் ஆகும்” என்று கூறி வீட்டிற்கு உள்ளே புகுந்து கற்பிற் சிறந்த அவரது மனைவியாரை நோக்கி” பெண்ணே! இன்று உன்னை என்னைப் படைத்தவர்க்கு நான் கொடுத்து விட்டேன்”என்றார்.. அது கேட்ட அவரது மனைவியார் முதலில் கலங்கினார்.. பின்னர் தெளிவு பெற்று தன் கணவரை நோக்கி” என் உயிர் தலைவரே! எனது கணவர் ஆகிய நீர் எமக்கு பணித்து அருளிய கட்டளை இதுவே ஆகின் நீ கூறியதைத் தவிர நான் வேறு என்றும் செய்ய எனக்கு உரிமை உள்ளதா?” என்று சொல்லி தன் பெரும் கணவராகிய இயற்பகையை வணங்கினார்.. பின்னர் அந்த வேதியரின் சேவடி பணிந்து திகைத்து நின்றார்..
அதற்குப் பின்னர்” இது தவிர நான் தங்களுக்கு வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று இயற்பகையார் அந்த வேதியரை கேட்டார்.. அதற்கு அவர் மறுமொழியாக” இந்த நங்கையை நான்தனியே அழைத்துச் செல்வதற்கு உமது அன்புடைய சுற்றத்தாரையும் இந்த ஊரையும் கடப்பதற்கு நீ எனக்கு துணையாக வருதல் வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்..