கவனம் சிதறாமை

“என் அன்புக் குழந்தைகளே!! எல்லோரும் வந்துட்டீங்களா? நாம வழக்கமா செய்கிற எல்லா வேலையும் செஞ்சிட்டீங்களா?”
“ஆமாம் தாத்தா!! எல்லோரும் கையை சானிடைசர் போட்டு கழுவி விட்டோம்.. முகத்திற்கு மாஸ்க் மாட்டிகிட்டோம்.. நீங்க கதை சொல்ல ஆரம்பிக்கலாம்..”
“வெரி குட்!! இன்டல்லைஜன்ட் கிட்ஸ்.. சரி! நான் இப்போ ஒரு கதை சொல்கிறேன்.. அது வந்து மகாபாரதத்தில் இருந்து..”
“இன்டர்ஸ்டிங்.. சொல்லுங்க தாத்தா!!”
“மகாபாரதத்திலே பாண்டவர்களும் கௌரவர்களும் குருகுலம் படிச்சாங்க.. அதாவது ஸ்கூல்ல படிச்சாங்க.. அவங்களோட குரு யார் தெரியுமா? அதாவது டீச்சர்? அவர் பேரு துரோணாச்சாரியார்..சொல்லிக்கொடுத்து அஸ்திர வித்தைகளை சொல்லிக் கொடுத்தார்.. அஸ்திர வித்தைகள் சொன்னா.. வில்லெடுத்து அம்பு விடுவது.. வாள் சண்டை.. ஈட்டி எறியரது… மல்யுத்தம்.. கதை எடுத்து சண்டை போடுறது.. இப்படி எல்லாம்..இதுல வில்லு அம்பு எடுத்து அதுல பயிற்சி ரொம்ப செஞ்சது அர்ஜுனன்..”
“ஒரு நாள்.. துரோணர் எல்லோரையும் காட்டுக்கு கூட்டிக்கிட்டு போய் அங்க ஒரு மரத்தை காமிச்சார். அந்த மரத்து மேல ஒரு பறவை இருந்தது.. அது நிஜ பறவை இல்லை.. மரத்துல செஞ்ச ஒரு பறவை.. அது ஒரு கிளை மேலே இருந்தது..
துரோணர் தன்னுடைய சீடர்கள் அதாவது ஸ்டூடண்ட்ஸ் ஒவ்வொருத்தரா கூப்பிட்டு கேட்டார்.. வில்லெடுத்து அம்பு பொருத்தி.. ” மரம் தெரியுதா?”
“தெரியுது!”
“வேற என்ன தெரியுது?”
“குருவே!! மரம் தெரியுது.. அதோட கிளை தெரியுது.. அதுல ஒரு பறவை தெரியுது.. பக்கத்துல இலை, பழம் எல்லாம் தெரியுது.. தூரத்தில் போற இன்னொரு பறவையும் தெரியுது”
“அப்போ நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்ட..”அப்படின்னு சொல்லி ஒவ்வொருத்தரையா கழட்டி விட்டார்.. துரியோதனன் வந்தான்..”குருவே! எனக்கு அந்த பறவை மட்டும் தெரியுது..”
“வேறு என்ன தெரியுது?”
“வேறு ஏதும் தெரியவில்லை!! பறவை மட்டும் தான் தெரியுது”
“சரி!! நீ வீடு அம்பை”என்றார் துரோணர்.. அவன் அம்பை விட்டவுடன் அது குறி தவறி மரத்தின் கிளையில் குத்தி நின்றது.. அவன் குறியை சரியாக அடிக்கவில்லை.. அடுத்ததாக அர்ஜுனனை கூப்பிட்டார்..”அர்ஜுனா!! வில்லெடுத்து அம்பைக் கோர்த்து குறியை பார்.. என்ன தெரிகிறது?”

“குருவே!! எனக்கு பறவையின் கண் மட்டும் தான் தெரிகிறது!” என்றான் அர்ஜுனன்..
“சரி!! அம்பை விடு”என்றார் துரோணர்.. அவன் அம்பை விடவும்.. அது சரியாக பறவையின் கண்ணில் குத்தி அந்த பறவையை சாய்த்தது..
“சபாஷ் அர்ஜுனா! சபாஷ்.. நீ சிறந்த வில்வித்தைக் காரன்.. பிற்காலத்தில் வில்லுக்கு விஜயன் என்று பெயர் பெறுவாய்!”என்றார் துரோணர் அவனைப் பாராட்டினார்..
மற்றவர்கள் கண்ணுக்கு சுற்றியிருந்த எல்லாம் தெரிந்தது.. ஆனால் அர்ஜுனன் கண்ணீர்க்கு குரு சொன்ன அந்த ஒரு குறி மட்டுமே தெரிந்தது.. அதனால் அவன் வெற்றி பெற்றான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?… நாம் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்தி என்ன காரணத்திற்காக நாம் செயல்படுகிறோமோ அதுல கான்சன்ட்ரேட் பண்ணனும்.. அப்போ ஈசியா ஜெயிக்கலாம்.. நீங்களும் உங்க ஸ்கூல்ல டீச்சர் பாடம் நடத்தும்போது உங்களுடைய முழு கவனத்தையும் செலுத்தி டீச்சர் என்ன சொல்லித் தருகிறார்கள் அப்படின்னு கவனித்து படிச்சீங்களானா நீங்க ஈஸியா மார்க் எடுக்க முடியும்.. என்ன புரிஞ்சுதா? இதிலிருந்து நாம கத்துக்கிட்டது கான்சன்ட்ரேஷன்.. அது ரொம்ப முக்கியம்.. இப்போ நான் கதை சொல்லும் போது எவ்வளவு உன்னிப்பாக கவனிக்கிறீங்க.. அதேபோல ஸ்கூல்லயும் கவனிக்கணும்.. செய்வீர்களா?”
“ஓஓஓஓ! தாத்தா! கண்டிப்பா செய்கிறோம்!”
“ஓகே! இதோட இன்னிக்கு கதை முடிஞ்சது.. சிறிது காலம் பொறுத்து வேற ஒரு கதை சொல்றேன்.. இப்ப போய் எல்லோரும் தூங்குங்க.. குட் நைட்! குட் பை”
“ஓகே தாத்தா உங்களுடைய கதைகள் ரொம்பவும் இன்ட்ரஸ்டிங்கா உங்களுடைய கதைக்காகவும எங்கள் மேல் நீங்கள் காட்டிய அன்புக்காகவும் ரொம்ப தேங்க்ஸ் குட்நைட் தாத்தா!குட்பை”