அரி என்னும் பேரரவம் (பகுதி 12)


ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 1000 பெயர்களில் ஒன்றாக ஜனார்த்தனன் என்ற பெயரில் கருதப்படுகிறது..இந்தப் பெயர் மகாபாரத போரின் முடிவில் கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தை பார்த்த பின் பிதாமகர் பீஷ்மர் அவரை ஆயிரம் நாமங்களால் ஸ்தோத்தரிக்கிறார்..அந்த ஸ்தோத்திரம் விஷ்ணு சகஸ்ரநாமம் என்ற பெயரில் வைணவர்களால் போற்றப்படுகிறது.. அந்த ஆயிரம் திவ்ய நாளங்களில் 128வது பெயராக ஜனார்த்தனன் என்ற பெயரில் ஸ்ரீமகாவிஷ்ணு துதிக்கப்படுகிறார்.. ஜனார்தனன் என்ற பெயருக்கு தீயவர்களை தண்டிப்பவர் என்றும், தன் மீது பக்தி கொண்டவர்களுக்கு பிறவிப் சுழற்சியிலிருந்து விடுதலை அளிப்பவர் என்றும் பொருள்படும்..
ஸ்ரீ விஷ்ணுசகஸ்ர நாமத்தில் உள்ள ஆயிரம் பெயர்களுக்கு பராசரபட்டர் எழுதியுள்ள பகவத் குண தர்ப்பணம் என்கின்ற உரையில் “ஜனார்தன:” என்ற பெயருக்கு பொருள் ஆக உரைத்துள்ளது என்னவென்றால்:-
தனது அடியார்களை வருத்துபவர்களை அழிப்பவன்.. தன்னுடைய அடியார்களை துன்புறுத்தபவர்கள் யாராக இருந்தாலும்அவர்களை யாருடைய உதவியுமின்றி அழிப்பதனால் ஜனார்தனன் என்ற திருநாமம் பெற்றான்.. மகாபாரதம் உத்யோக பருவம் (71-6)-“தஸ்யு த்ராணாத் ஜநார்தன” :-தீயவர்களிடமிருந்து காப்பதால் ஜனார்தனன் எனப்படுகிறான்-என்றது.. இதன் மூலம் யாருடைய உதவியுமின்றி எதிரியை அழிக்கும் வல்லமையான தேஜஸ் என்பது வெளிப்படுகிறது.. வாசுதேவன் உள்ளிட்ட வ்யூகங்களில் வெளிப்படும் குணங்களானவை, அவை மட்டுமே, அந்தந்த வ்யூகங்களில் வெளிப்படுகின்றன என்பதையும்,குணங்கள் மறைவாக உள்ளன என்பதையும் உணர்த்துகிறது.. ஆனால் அவனுடைய குணங்கள் எப்போதும் தடை படுவதில்லை..
மூலசம்ஹிதை- “ஞானேன ஐச்வர்யேண சக்த்யா இதி ஸர்வே பகவத்: அநூநா: பூர்ணா:” –ஞானம் ஐஸ்வர்யம் மற்றும் சக்தி ஆகிய அனைத்தும் பபகவானிடம்குறைவாக இல்லை.. பூரணமாக உள்ளது.. என்று கூறியது.. அந்தப் பரமாத்மா நான்கு நிலைகளில் உள்ளார்.. அவன் அனைத்தையும் அறிந்தவனாக உள்ளார்.. அனைத்தையும் பார்த்தபடி உள்ளான்.. அவன் பந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக ஏதும் தேவை இல்லாதவனாக உள்ளான்.. அனைவரின் நம்பத்தகுந்த நண்பன் ஆக உள்ளார்..அவன் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் யாருடைய கட்டுப்பாட்டிலும் தான் இல்லாதவனாகவும் உள்ளார்.. தொடக்க மற்றும் முடிவு அற்றவனாக உள்ளார்.. அவனுக்கு உறக்கம் பயம் கோபம் மற்றும் சோம்பல் போன்றவை ஏதுமில்லை.. அவன் அறியாமை ஆசை நோய்கள் போன்ற ஏதும் இல்லாதவன்.. தோற்றங்களுக்கு எதிர் தட்டாக உள்ளவன்..இப்படிப்பட்ட தன்மைகள் கொண்டவனாக எம்பெருமான் உள்ளார் என்பதை உணர்ந்தவர்கள் அவனை சரியாக புரிந்து கொண்டவர்கள் ஆவர்.. இதனை உணராதவர்கள் அவனை அறியாதவரே ஆவர்.. ஆக வாசுதேவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவன் ஆவான்.. இப்படியாக எல்லையற்ற தன்மையாலும் பந்தப்படாமலும் உள்ள தன்மையாலும் அனைத்தையும் விட உயர்ந்தவராக உள்ளார்..


ஸ்ரீமகாவிஷ்ணு ஜனார்த்தனன் என்ற திருப்பெயரில் கேரளாவில் உள்ள “வர்க்கலா” என்ற தலத்தில் கோயில் கொண்டுள்ளார்..வர்க்கலா என்ற திருத்தலம் கள்ளம்பலம் என்ற ஊருக்கு மேற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் NH66ல் கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது..வர்க்கலா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.. இந்தத் திருக்கோவிலை தென்னகத்து கயா என்று அழைப்பார்கள்..

இந்த திருக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது..
ஒருமுறை நாரத மகரிஷி பெருமாளை தரிசித்து விட்டு பிரம்மலோகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.. அவரது இசையில் மயங்கிய பெருமாள் அவர் பின்னாடியே அவருக்கு தெரியாமல் வந்து கொண்டிருந்தார்..அறிந்து அவருக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார்.. இந்த இக்கட்டான சூழ்நிலையை தவிர்க்க பெருமாள் மறைந்துவிட்டார்.. பிரம்மா தனது மகன் அவருக்கு வணக்கம் தெரிவிப்பதாக அதை பார்த்த பிரஜாபதிகள் தவறாக நினைத்து சிரித்து விட்டார்கள்.. அதனால் கோபம் கொண்ட பிரம்மா அவர்களை விட மானிடப் பிறவிகளான பிறந்து அல்லல் படுவதாக என சாபமிட்டார்.பிரஜாபதிகள் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கோர நாரத மகரிஷி அவர்களை தவம் செய்யுமாறு அறிவுறுத்தி அதற்கான இடத்தை தாமே தேர்ந்து எடுத்து தருவதாக கூறினார்.. அதன்படி அவர் தனது இடையில் கட்டியிருந்த மான்தோலை பூமியில் வீச அது விழுந்த இடம்தான் வர்க்கலா என்று பெயர் பெற்றது..வர்க்கலம் என்றால் மான் தோல்..அங்கே ஜனார்த்தனசுவாமி கோயில் எழுப்பி வழிபடுமாறு அறிவுறுத்தினார்..
ஒருமுறை பகவான் பிரம்மா பூமிக்கு வந்து வர்க்கலாவில் யாகம் செய்து கொண்டிருந்தார்.. யாகத்தில் மிகவும் ஈடுபட்டு விட்டதனால் தனது படைப்புத் தொழிலை மறந்தார்..மனிதர் ரூபத்தில் வந்து அங்கே உணவு உண்டார்.. பிரம்மாவின் உடனிருந்த அந்தணர்கள் அந்த வயது முதியவருக்கு உணவு அளித்தார்கள்..அவருக்குத் எவ்வளவு உணவு அளித்த போதும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என்று சொன்னார்.. அப்போது தான் பிரம்மா வந்திருப்பது மகாவிஷ்ணு என்று அறிந்து “இனி நீங்கள் மேலும் உணவு அருந்த வேண்டாம்..கையிலுள்ள தீர்த்தத்தை நீங்கள் ஆசமனம் செய்து விட்டால் இந்த பிரபஞ்சம் அழிந்து விடும்” என்று சொல்லி தடுத்தார்.. பகவான் விஷ்ணுவும் “நீங்கள் தவத்தை விட்டு படைப்புத் தொழிலை தொடருங்கள்..”என்று சொல்லி மறைந்தார்..
மூல விக்கிரகம் ஜனார்த்தன ஸ்வாமி.. நின்ற திருக்கோலத்தில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளார்.. வலது கை தீர்த்தம் எடுத்து ஆசமனம் செய்யும் நிலையில் உள்ளது.. இந்த திருக்கரம் சிறிது சிறிதாக மேல் நகர்ந்து செல்வதாக கூறப்படுகிறது…இந்தக் கரம் மேலும் நகர்ந்து பெருமாளின் வாய் அருகில் சென்று அவர் ஆசமனம் செய்து விட்டால் பிரளயம் ஏற்பட்டு இந்த பிரபஞ்சம் அழிந்து விடும்.. அது கலியுகத்தின் இறுதியில் நடைபெறும் என்று நம்பப்படுகிறது..
வாசகர்கள் திருவனந்தபுரம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள இந்த வர்க்கலா தலத்தில் உள்ள அரிய பெருமாளானஸ்ரீ ஜனார்த்தன சுவாமியை தரிசித்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன்..
இனி அடுத்த பதிவில் நாராயணன் என்ற திருப்பெயருக்கு உண்டான பெருமைகளை பதிவு செய்கிறேன்..
மீண்டும் சந்திப்போம்..


Dear readers
In this episode I am giving the the meaning of name Janardhana which is one among the 1000 names of lord Vishnu.. Janardhana means the God who punishes ill-humans who gives trouble to his bhaktas.. this name Janardhana comes in the place of 128 name in the Vishnu sahasranama pronounced by Bhishma during the Mahabharatha war..
Once sage Narada was going to brahmaloka after visiting vaikunda.. tempted by the music played by Narada, lord Vishnu followed him without his knowledge.. seeing lord Vishnu Brahma saluted him.. seeing a situation situation lord Vishnu disappeared.. Prajapatis who saw lord Brahma is saluting his own son Narada and bursted in laughter.. Brahma got angry and cursed them to born as humans.. realised their mistakes Prajapatis sought to excuse them.. Sage Narada adviced them to do penance in place where he selects.. saying this he threw his varkalam(deer’s skin) in the earth..The place where it fell is called the “Varkala”.. The Prajapatis were doing the penance before lord Janardhana who is is the almighty..
There is a temple for lord Janardhana in the place call Varkala near Thiruvananthapuram.. this temple is 2000 years old…there is a saying goes that lord Brahma was doing yaga in this place and forgot to do his routine work.. lord Vishnu appeared before him in the form of an old man and got offerings in the form of food.. He was not satisfied even after eating much.. lord Brahma recognise him and requested not to swallow water in his palm doing achchamana.. if you do achamana universe will be destroyed.. thereafter lord Vishnu advised him to continue his routine work and disappeared..
In this temple lord Janardhana is in standing posture facing East and his right arm is kept as doing achamana.. it is believed that once he finishes achamana the entire world will be destroyed and this will happen at the end of Kalyuga..
Dear readers,, whenever you find time to reach Trivandrum you can make a visit to this temple which is worth to seeing and have the blessings of lord Janardhana..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: