அருள்மிகு கரிகிருஷ்ண பெருமாள் கோயில் பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம்

கரிகால சோழ மன்னனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சௌந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் திருக்கோயில் ஒன்று உள்ளது.. இந்த திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ளது.. இந்தத் திருக்கோயிலை இந்த வருடம் ஜனவரி மாதம் நான் சென்று தரிசித்தேன்..

ஆயர்பாடியில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகிருஷ்ண பெருமாள்..கரிகிருஷ்ண பெருமாள் என்று திருப்பெயர் ஆயிற்று.. ஒரு காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த மகிழம்பூ வனமாக இருந்ததாம்..இங்கிருந்த புற்று ஒன்றில் பெருமாளின் விக்ரகம் கிடைக்க அதனை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு உள்ளனர் இந்த ஊர் மக்கள்.. பிறகு கோயில் அமைந்துள்ளது..

இங்கு அருள்பாலிக்கும் பெருமாள் வலது புறம் சற்று சாய்ந்தது போல் காட்சியளிக்கிறார்.. விக்கிரகத்தை கண்டெடுத்த போதே இப்படி சாய்ந்துதான் இருந்ததாம்..நின்ற திருக்கோலத்தில் சற்றே வலதுபுறம் சாய்ந்தபடி காட்சி தரும் கரிகிருஷ்ண பெருமாள் கொள்ளை அழகு.. தாயாரின் திருநாமமோ ஸ்ரீ சௌந்தர்ய வல்லி.. பின் அவரது அழகுக்கு கேட்கவா வேண்டும்?..

கோயிலின் 16 கால் மண்டபத்தில் உள்ள தூண்களில் சற்றே சாய்ந்தபடி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..

ஆலயத்தில் தனி சன்னதியில் காட்சி தருகிறார் ஸ்ரீராமர்.. இவருக்கு வலது பக்கத்தில் ஸ்ரீ சீதாதேவி.. இடது பக்கம் கை கூப்பியபடி லக்ஷ்மணன்.. இந்த கோவிலில் தீர்த்தம் சந்தான புஷ்கரணி, கோயிலுக்கு பின்புறம் உள்ளது..ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளன..

ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் மற்றும் ஸ்ரீராமர் சன்னதிகளுக்கு தனித்தனியே துவஜஸ்தம்பம் உள்ளது.. அதனால் ராமநவமி உற்சவத்தில் ராமபிரானுக்கும்,சித்திரை மாதத்தில் ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாளும் என வருடத்திற்கு இரண்டு முறை 2 பிரம்மோற்சவம் நடக்கிறது..

ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் வரப்பிரசாதி..பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்..

பொன்னேரியில் அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இரண்டு ஆலயங்கள் மற்றும் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் ஆகியவை உள்ளன..அகஸ்தியரும் பரத்வாஜரும் சிவனையும் பெருமாளையும் ஒருசேர தரிசிக்க வேண்டும் என்று தவம் இருந்தார்களாம்.. இதில் மகிழ்ந்த சிவபெருமானும் பெருமாளும் ஒன்று சேர வந்து காட்சி தந்தார்களாம்.. இதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் ஹரியும் மற்றும் சந்திக்கும் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது..இதனை உற்சவ சந்திப்பு என்று அழைக்கின்றனர்..அப்போது கருட வாகனத்தில் கரிகிருஷ்ண பெருமாளும் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரரும் சந்திக்கின்றனர்..பிறகு அகஸ்தியர் மற்றும் பரத்வாஜர் ஆகியோருக்கு காட்சி தரும் வைபவம் சிறப்புற நடைபெறும்..

Dear readers

I visited in the last January the temple of Sri Kari Krishna Perumal situated in ponneri town of Thiruvallur district.. this temple has been built by Karaikal chola and hence it is called kari Krishna temple.. in those days it was forest and the Vigraha was found in the termite hole where snakes will live.. while it was taken out the Perumal came out in a leaning position.. hence depressant Perumal is also standing in a leaning posture.. the Mandapam with 16 pillars is also slightly leaning.. there are sannathis for lord Rama,sitha and lakshmana besides Anjaneya..

Since there are two dwajasthambas Kari Krishna Perumal and Rama two brahmotsavams are celebrated every year.. 1 during Sri Rama Navami and another in Chaitra month.. once agastya and bharadwaja prayed to lord Shiva and Perumal to see them both.. lord Shiva and Perumal appeared before them on stage together..To demark this incident every year Perumal will come in garuda vahana and and lord Shiva I will come in in Rishabha vahana and meet each other..

There is a saying that, Bakthas who pray to lord Krishna will offer twin Bananas, butter, and sweet candy as naivedhyam and eat to get child..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: