சென்ற பதிவுகளில் பஞ்சப் ப்ரகுருதிகளின் சிறப்புகளை பற்றிப் பார்த்தோம்.. அடுத்து அந்த தேவிகளின் பிரதான அம்ச ரூபங்களை பற்றி பார்த்து வருகிறோம்.. அவர்களில் கங்கா தேவி துளசி தேவி மற்றும் மானசாதேவி பற்றி கூறியிருந்தேன்..இனி அடுத்தது சஷ்டி தேவி மங்கள சண்டிகா தேவி மற்றும் பூதேவி ஆகியோரைப் பற்றி இந்த பதிவில் கூறுகிறேன்
சஷ்டி தேவி
சஷ்டி தேவி என்பவள் ப்ரக்ரு தேவியின் பிரதான அம்ச ஸ்வரூபிணியாக விளங்குகிறாள்.. இவள் தேவசேனையாகவும் மாத்ருகா கணங்களில் பூஜிக்கப்பட்டவள் ஆகவும் சிறந்து விளங்குகிறாள்.. இவள் ரதிதேவியின் ஆறாவது அம்சமாகும்.. மூன்று உலகிலும் வாழ்பவர்களுக்கு புத்திரர் பேரர் முதலான சம்பத்துக்களையும் வழங்குபவர்.
இந்த தேவியை ஆறினி என்றும் அழைப்பார்கள்.. குழந்தைகளைக் காக்கும் தெய்வமாகவும் வடநாட்டில் போற்றப்படும் தெய்வம் ஆவாள்.. நிறைகுடம் ஒன்றாகவும் ஆலமரத்தடியில் ஒரு செந்நிறக் கல்லாகவும் அவளை உருவகித்து வழிபடுவது உண்டு.. மாதமொன்றின் இரு சஷ்டிகளின் போதும் இவளை வழிபட வேண்டும்..நிறைமாத கர்ப்பிணிக்கு அழும் குழந்தை பெற்ற பசும் மேனி பெண்டிரும் தாய் சேய் நலத்திற்காக இந்த அன்னையை வழிபடுவர்..பழங்காலத்திலிருந்தே ஆல மரமாகவும் ஆல மரக் கன்று ஆகவும் ஆலமரத்தடி செந்நிறக் கல்லாகவும் ஆறினி அம்மையை அமர்த்தி வழிபடுவது கீழை இந்தியாவில் வழக்கில் இருந்து வருகிறது.
அன்னையைத் தெய்வமாக சித்தரிக்கப்படும் ஆறினி பூனை மீது அமர்ந்தவளாய் எட்டு குழந்தைகள் சூழ காட்சி தருவதாக சித்தரிக்கப்படுகிறாள். பொதுவாக பொன்வண்ணம் கொண்டவளாக இந்த தேவி அணிமணிகள் அலங்கரிக்கப்பட்டு மடியில் ஒரு தெய்வீக மரக் கன்று ஒன்றினை கிளையை வைத்திருப்பாள்.. ஆரம்பகால சிற்ப இலக்கணங்கள் இவள் பூனை முகம் கொண்டவள் என்கின்றனர்..இதனாலேயே பிற்காலத்தில் அவர் பூனையை வாகனம் கொண்டவளாகமாறி இருக்க வேண்டும்..
முருகனைப் போல ஆறுமுகமும் திருக்கரமும் கொண்டு விளங்கும் இந்த தேவியை குசாணர் காலச் சிற்பங்கள் காட்டுகின்றன..யௌதேய நாணயங்களிலும் இந்த தேவியின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது.. மேலும் அகித் சாத்திரா என்னும் இடத்தில் குப்தர் காலத்தை(320-550 பொ.ஆ) சேர்ந்த சுடுமண் கொண்டு செய்யப்பட்ட இந்த தேவியின் சிற்பங்கள் கிடைத்துள்ளன..
ஆறனியைபோற்றிப் புகழும் நூல்கள் ஒருபுறம் அவளை எதிர்மறையாக கருதி புனையப்பட்ட நூல்கள் இன்னொருபுறம் எழுந்துள்ளன.. பொ.பி 5ஆம் நூற்றாண்டு காசியப சங்கீதை அவளை “ஜடா ஹாரிணி” அதாவது பிறவியைக் கவர்பவள் என்று அழைக்கிறது.. அதனாலேயே குழந்தை கொல்லபப்படக் கூடிய அதிகபட்ச எல்லையான ஆறாம் நாளன்று இவளைப் போற்ற சொல்கிறது..குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி பண்டைக் காலங்களில் குறைவாக இருந்தது என்பதே இந்த சஷ்டி தேவி சுட்டிக் காட்டுபவர்கள் மூலம் மறைகுறியாக தெரியவருகிறது
எனினும் கடந்த ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளாக ஆறினி அன்பான தெய்வமொன்றாகவே வளர்ந்து வந்திருக்கிறாள்.. ஏழாம் நூற்றாண்டு “கர்ச சரிதம்” காதம்பரி நூல்கள் இந்த தேவியை முறையே “ஜடா மாத்ரு”(சிசுவின் அன்னை) “பாகு புத்திரிகா”(பல குழந்தைகளைப் பெற்றவள்) என்று போற்றுகின்றன..
முருகனைப் போலவே சஷ்டிதேவியும் பழங்குடி வழிபாட்டில் இருந்து பெருமத நெறிக்குள் நுழைந்த தெய்வமாக இருக்கலாம்..குழந்தை பிறந்த ஆறாம் நாளன்று சஷ்டி தேவியை வணங்குவது இன்றும் வடநாட்டில் பொதுவாக காணப்படுகிறது..பொ.மு.2ஆம் நூற்றாண்டு நூலான கிருகய சூத்திரம் அழகும் வளமும் நல்கும் திருமகளை ஒத்த தெய்வம் என்று இந்த தேவியை கூறுகிறது..
தேவி பாகவதத்தில் இவள் பராசக்தியின் ஆறாவது அம்சமாக கூறப்படுகிறது..தேவி பாகவதத்தில் காணப்படும் சஷ்டி தேவி உபாக்கியானம் என்னும் பகுதி ஸ்வயம்பு மனுவின் மகன் பிரியவிரதனுக்கு அவன் மனைவி மாலினியிடம் இறந்து பிறந்த குழந்தை ஒன்றை சுடலையில் சஷ்டி தோன்ற உயிர்பித்த அற்புதத்தை விவரிக்கின்றது உயிர்ப்பித்த அற்புதத்தை விவரிக்கின்றது.. இவ்வாறு தன் மகன் சுவவிரதன்நாடெங்கும் கட்டளையிட்டால் அது மேலும் வருணிக்கிறது.!
ஒரு குடும்பம் ஒன்றில் 7 மறுமகள்களில்இளையவள் விருந்து ஒன்றில் பேராசைப்பட்டு உணவெல்லாம் உண்டுவிட்டு கரும்பூனை ஒன்றை காட்டி அது தான் குற்றம் செய்தது என்றாள்.. அந்த வீட்டார் அந்த பூனையை கடுமையாக தண்டித்தார்கள்..அதனால் கோபம் கொண்ட பூனை அவள் பெற்ற ஏழு குழந்தைகளையும் பிறந்த உடனேயே கவர்ந்து சென்றது..போது அதனுடன் போராடி அதன் பின்னால் ஓடினாள்.. அந்தப் பூனை சஷ்டி தேவிதவற்றுக்கு வருந்தி சஷ்டி தேவியை போற்றினாள்..”ஜமை சஷ்டி”எனும் இந்த சஷ்டி கான நோன்பை அந்தப் பெண்ணை முதன் முதலில் வங்கத்து நாட்டார் கதை ஒன்று சொல்கிறது..
மாதம்தோறும் இரு சஷ்டி திதிகளில் இவளை நோக்கி நோர்க்கப்படும் சஷ்டி கல்ப விரதம் கோரியது எல்லாம் தரும்.. ஒவ்வொரு மாதமும் சிந்தனை, ஆரணி, கர்த்தமை, உலுந்தனை,சவேதி, துர்க்கை, நதி,மூலிகை, அன்னை, சீதளை, கோரூபிணி, அசோகை என்ற பெயர்களில் வழிபடப்படுகிறாள்..
நிறைமாத கர்ப்பிணிகள் ஒரு அறையில் பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதனையே சஷ்டிதேவியாக வழிபடும் வழக்கம் பீகாரில் இன்றும் உண்டு.. ஆடி மாத வளர்பிறை ஆறாம் நாள் வங்கத்திலும், தென்னகத்திலும்” ஆரணிய சஷ்டி நோன்பு” அல்லது “ஜமை சஷடி நோன்பு”என்று நோர்க்கப் படுவதுண்டு..இந்த பூஜையின் போது குழந்தை பெற்றிருக்கும் அன்னையர்கள் தன்னுடைய குழந்தைகள் நலத்திற்காகவும் நோன்பு செய்கிறார்கள்.. ஆறின் எண்ணிக்கையிலேயே இதன்போது பழம் மலர்கள் அவளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது..
சென்னை போரூரில் டிஎல்எப் ஐடி பார்க் அருகில் சஷ்டி தேவி கோயில் கட்டப்பட்டுள்ளது
மங்கள சண்டிகை மற்றும் பல தேவிகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்