இடங்கழியார்


திருச்சியிலிருந்து மதுரை செல்லும்வழியில் விராலிமலை அடுத்து புதுக்கோட்டையில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும் கொடும்பாளூர் என்ற ஊர் அமைந்துள்ளது..புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இவ்வூர் கொடும்பை நகர் என்று அழைக்கப்பட்டது..
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கொடும்பாளூர் நகரம் ராஜராஜ சோழனின் மனைவி வானதி பிறந்த ஊராகும்.. இந்த கொடும்பாளூரை தலைநகராகக் கொண்டு ஒரு சிறிய நாடாக நாடு என்கின்ற நாடு இருந்தது.. அந்த நாட்டினை ஆண்டு வந்தவர் இடங்கழி என்பவராகும்..இவரது காலத்தில்தான் சிவாலயங்கள் பல எழுதப்பட்டதாக வரலாறு கூறுகிறது. வழிபாட்டினை இவர் போற்றி வந்தார்..
அந்த ஊரில் இருந்த ஒரு சிவனடியார் வாழ்வதே சிவனுக்காக தான் என்று வாழ்ந்து வந்தார்..சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதைத் தவிர வேறு எந்த பணியையும் கொண்டிருக்காமல் வாழ்ந்து வந்தார்.. சிவநாமம் சொல்லி வரும் அடியார்கள் எல்லோருமே அவருக்கு சிவபெருமான் தான்..படைத்து அனுப்பி இன்புற்று வாழ்ந்து வந்தார்..செல்லும் இடமெல்லாம் இவரது புகழை பரப்பினார்கள்..இதனால் அந்த ஊருக்கு வரும் அனைத்து சிவனடியார்களும் இந்த அடியாரின் வீட்டில் அன்னதானம் உண்பதைப் பெரும் பேறாகக் கருதினார்கள்..சிவனின் மீது எவ்வளவு பக்தி இருந்தால் இத்தகைய பணிவிடையை இவர் செய்வார் என்று மகிழ்ந்து இருந்தார்கள் அவர்கள்.
சிவனடியார்களின் வருகையால் மூட்டிய அடுப்பு அணையாமலேயே அன்னங்கள் படைத்துக் கொண்டிருந்தது.. சிவனடியாரிடம் இருந்த செல்வம் சிறிது சிறிதாக கரைந்தது..சிவனடியார்களுக்கு அளித்து வந்த அன்னதானத்தினைஅடுப்பு அணையாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.. அவரது செல்வம் முற்றிலும் கரைந்து விட்டது..
அடியார்களுக்கு அன்னதானத்தை நிறுத்தக்கூடாது.. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணி சிவனடியார் அந்த நாட்டு அரண்மனை கருவூலத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தார்..நெல்மணிகள், ஆபரணங்கள், தங்க காசுகள் என்று கையில் அகப்பட்டதை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு எடுத்து வந்தார்.. அதனால் அன்னதானமும் குறைவின்றி தொடர்ந்து நடந்து வந்தது.. சிவனடியார்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்குவதை லட்சியமாக கொண்டு குறையில்லாமல் நடத்தி வருகின்றோம் என்ற உவகை அவருக்கு ஏற்பட்டது..
மற்றொருபுறம் அரண்மனையில் பொக்கிஷங்களிலிருந்து பணமும் பொருளும் குறைகிறது என்று அரசர் இடங்கழியாரிடம் புகார் அளிக்கப்பட்டது.. அவர் காவலை பலப்படுத்தினார்.. ஒரு நாள் அந்த சிவனடியார் பொருட்களை திருடிக் கொண்டு வரும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.. அரசரிடம் அவரை அழைத்துச் சென்றார்கள்..


“சிவனடியாராக இருந்து கொண்டு இத்தகைய செயலை செய்யலாமா? எதற்காக திருடினீர்கள்?” என்று இடங்கழியார் மன்னர் கேட்டார்..
அதற்கு அவர்” சிவனடியார்களுக்கு தான் அன்னதானம் செய்து வந்ததாகவும், அவரது பொருள் முழுவதும் மறைந்து விட்டதாகவும், அன்னதானத்தினை நிறுத்த அவரது மனம் இடம் கொடுக்கவில்லை” என்றும் சொல்லி “அதன் காரணமாகத்தான் தான் கருவூலத்தை திருடினேன்” என்று சொன்னார்..அதைக் கேட்டதும் அரசர் இடங்கழியார் சிவனடியாரின் அருகில் வந்து அவரது காலில் விழுந்து வணங்கினார்..
“எவ்வளோ பெரிய செயல்..சிவனை வணங்கும் நான்கூட அடியார்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளவில்லை.. அவ்வளவு செல்வம் என்னிடம் இருந்தும் என்ன பயன்? இனி என்னிடம் உள்ள அனைத்து செல்வங்களும் சிவபக்தியில் சிறந்தவரான உங்களிடம் தான் இருக்க வேண்டும்” என்று கூறி தன்னிடம் இருந்த அனைத்து செல்வங்களையும் அடியாருக்கு வழங்கினார்..
இதுதவிர சிவனடியார்களுக்கு எல்லோருக்கும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதி பண்டங்களையும் கவனித்துக் கொள்கிறேன் என்று எங்கும் பறை அறிவித்தார்.. இவர் அதன்பின் நெடுங்காலம் ஆட்சி செய்து சிவபதம் அடைந்தார்..
இவரது சிவதொண்டின் காரணமாக இவர் இடங்கழி நாயனார் என்ற பெயருடன் 63 நாயன்மார்களில் ஒருவராக கருதப்படுகிறார்..
இவருக்காக சில ஆண்டுகளுக்கு முன்பாக கொடும்பாளூரில் கோயில் கட்டப்பட்டது.. தொடர்ந்து புனரமைப்பு செய்துசுற்றுச்சுவர் எழுப்பி குருபூஜையும் செய்யப்பட்டது. இவரது கோயிலுக்கு அருகில் முசுகுந்தேஸ்வரர் கோயில் உள்ளது..
இவரது குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் நடக்கிறது..
“மடல் சூழ்ந்த தான் நம்பி இடங்கழிக்கும் அடியேன்

Dear readers
I am giving the synopsis of the above Tamil version for the benefit of people who don’t know tamil..
During the the ancient times a king called idankazhi was ruling over a country called konadu with kodumbalur as the capital.. the town kodumbalur is situated near viralimalai on the route of Madurai to Trichy.. Kodumbalur Princess Vanathi was the wife of King Rajaraja Cholan. In the town,one person was doing annadhanam to all the sivites who worshipped EASA.. all his wealth drained out.. he does not want to to stop the the annadhanam.. so he thought of stealing gold coins diamonds and also rice from the treasury and godown of the palace.. he stole as planned and continue to do annadanam.. one day he was caught red handed and was produced before the king…the king idankazhi asked that gentleman who stole the treasury as to why why did he Steal.. that person replied that he was doing annadhanam and he lost all his money. he wanted to continue Annadhanam sivanadiyars and hence he stole the treasury.. hearing this the king got surprised and said the doing by the gentleman is a good cause and noble and even he has not done that noble thing though hewas having vast money.. so the king allowed that gentleman to go with the money and all other valuables and to continue Annadhanam.. he also announced that those who are doing more noble thing for the sivanadiyars can come and take money from the treasury and also rice from the the godown.. he ruled over the country for several more years and attained the lotus feet of lord Shiva..
By this act of noble doing he was considered as one among the 63 Nayanmars and was called Idankazhi Nayanar..
The birth star of Idankazhi Nayanar is Karthigai in in the month of Aypasi.. A temple was constructed for him and renovations were done recently.. Guru Puja is being done on the birthday of the Nayanar.

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: