சமயோசிதம்
“குட் ஈவினிங் குழந்தைகளா! எல்லாரும் வந்துட்டீங்களா?”
“குட் ஈவினிங் தாத்தா!”
“எல்லாரும் நல்லா இருக்கீங்களா? வீட்டுல அப்பா அம்மா எல்லாரும் நல்லா இருக்காங்களா??”
“இருக்கோம் தாத்தா”
“சரி! நான் இப்போ ஒரு கதை சொல்லப் போறேன்!.. கேக்கறீங்களா?”
“ஓ!! கேக்கறோம் தாத்தா!”
“ஒரு காட்டுல, ஒரு மான் குட்டி போட இடம் தேடிக் கொண்டிருந்தது.. அப்போ ஒரு குகையை பார்த்தது.. அது ஒரு சிங்கத்தோட குகை.. அந்த சிங்கம் குகையை விட்டு வெளியில போயி சில நாட்கள் ஆச்சு.. அதனால அந்த குகை உள்ள போயி மான் குட்டி போட்டுச்சு.. ஒரு நாள் வெளியில போன சிங்கம் திரும்ப வந்துச்சு.. சிங்கம் வரத மான் பார்த்துடுச்சு…. அந்த நேரத்துல மான் குட்டிகள் எல்லாம் கத்த ஆரம்பித்தது.. உடனே மான் பயப்படாம’குழந்தைகளே! பசிக்குதா? இருங்க வெளியில ஒரு சிங்கம் இப்பதான் வந்து இருக்கு.. அது அடிச்சு உங்களுக்குக்கு சாப்பிட தரேன்..”அப்படின்னு சத்தமா சொல்லுச்சு.. அந்த சத்தம் குகையிலை எதிரொலிக்க பெருசா கேட்டுச்சு.. சிங்கம் உடனே பயந்து போச்சு.. தன்ன விட ஏதோ ஒரு பெரிய மிருகம் தன்னோட குகைக்கு உள்ள வந்திருக்கு.. அப்படின்னு நெனச்சு வெளியில ஓடிச்சு..

வழியில ஒரு நரி அதை பார்த்துச்சு..” என்ன சிங்கமண்ணே? இப்படி பயந்து போய் வெளியில வரீங்க? என்ன ஆச்சு?”அப்படின்னு கேட்டுச்சு..
சிங்கம் அதுக்கு பதில் சொல்லுச்சு.. குகையில் அதனோட ஒரு பெரிய மிருகம் இருக்கு.. அது தன்ன சாப்பிடறேன் சொல்லிச்சு.. அப்படின்னு சொல்லிச்சு..
நரி அதைக்கேட்டு பெருசா சிரிச்சிட்டு..”என்ன சிங்கம் அண்ணே!! குகை உள்ள ஒரு மான் தான் இருக்கு.. குட்டிகளோட இருக்குது.. நீங்க என்னோட வாங்க.. பெரிய மானை அடிச்சி நீங்க சாப்பிடுங்க.. குட்டிகளை நான் சாப்பிடுகிறேன்..”அப்படின்னு சொல்லிச்சு..
சிங்கம் நரி கிட்ட” உன்ன நம்ப முடியாது.. ஏற்கனவே நீ என்ன பல பேரை ஏமாற்றி இருக்க.. அதனாலே உன்னோட வாலையும் என்னோட வாலையும் கட்டிகிட்டு போகலாம்”அப்படின்னு சொல்லி ரெண்டும் வாலை கட்டிக்கிச்சு.. இரண்டுமே குகைக்கு போச்சு..
நரியும் சிங்கமும் குகைக்கு வருவத பார்த்த மான் சமயோஜிதமா, இன்னும் பெரிய குரலில்..”வாங்க நரியாரே!!சொன்ன மாதிரியே சிங்கத்தை அழைச்சிகிட்டு வந்துட்டீங்களா.. ரொம்ப தேங்க்ஸ்!”அப்படின்னு சொல்லுச்சு..
இத கேட்ட சிங்கம், நரி தன்னை ஏமாத்திடுச்சுன்னு நெனச்சு வேகமா ஓடிச்சு.. இரண்டு வாலும் ஒண்ணா கட்டி இருந்ததுனால.. சிங்கத்தோட வேகத்துக்கு நரி யால ஓட முடியல.. அதனால அது கீழே விழுந்து.. கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு செத்துப் போச்சு.. சிங்கம் அத சாப்பிட்டுச்சு..”
“கதை நல்லா இருக்கா?.. இதுல இருந்து என்ன தெரியுது?.. எந்த ஒரு விஷயத்தையும் பயப்படாம பதட்டமில்லாமல் ஹேண்டல் பண்ணனும்.. அப்பத்தான் நாம ஜெயிக்க முடியும்.. புரிஞ்சுதா?”
“புரிஞ்சுதூ தாத்தா..”
“ஓகே! எல்லாரும் வீட்டுக்கு போயி தூங்குங்க.. குட் நைட்”
“குட்நைட் தாத்தா”