ஜகத்காரணி (பகுதி-11)


இதுவரையில் பரிபூரணமான ஐந்து தேவிகளின் சிறப்புகளைப் பார்த்தோம்.. முதன்மையான அம்ச ரூபங்களாகவும், கலை உருவங்களாகவும், அந்த கலைகள் பலவற்றில் ஒரு பாகமாகவும், விளங்கும் அந்த தேவிகளிடம் இருந்துதான் உலகத்தில் உள்ள சாதாரண பெண்களும் உற்பத்தியானார்கள் என்றும் பார்த்தோம்.. இனி அவர்களுக்கு உள்ள பிரதான அம்ச ரூபங்களைப் பற்றிப் பார்ப்போம்..

கங்கா தேவி


உலகங்களை எல்லாம் தூய்மை செய்ய வல்ல கங்காதேவி பிரக்ருதி தேவியின் பிரதான அம்சம் ஆவாள்.. அந்த கங்காதேவி விஷ்ணுவின் தேக அம்சத்தில் இருந்து நீர் வடிவமாக பிறந்தவள்.. பாவம் செய்பவர்களின் பாவம் எனப்படும் பாழும் காட்டை சுட்டெரிக்கும் அக்னியை போல் திகழ்பவள்.. நோய்மை நதிகளில் எல்லாம் அதி உன்னதமானவள்.. ஸ்நான பானங்களால் ஆனந்தமாக ஸ்பரிசிக்க உகந்தவள்.. மோக்ஷத்தை வழங்குபவள்.. பரமேஸ்வரனின் விரி சடையான மேருவில் முத்துப்போல் ஒளி வீசுபவள்.. பாரத தேசத்தில் தவம் செய்பவர்களுக்கு தவத்தின் பயனை வழங்குபவள்..


இனி துளசி தேவியை பற்றி பார்ப்போம்..

சந்திரன் வெண்தாமரை பால் ஆகியவற்றை போல பிரகாசிக்கும் சுத்த தத்துவ சொரூபிணியாகவும் அழுக்கற்றவளாகவும் அகங்காரம் அற்றவளாகவும் பதிவிரதையாகவும் நாராயணருக்கு பிரியையாகவும் துளசி தேவி விளங்குகிறாள்.. அவள் பிரக்ரிதி தேவியின் பிரதான அம்ச வடிவினள்.. இலை வடிவானவள்.. விஷ்ணு பிரியை, விஷ்ணு பூஷண சொரூபிணி.. திருமாலின் திருப்பாதத்தில் இருப்பவள்.. தவம் சங்கல்பம் பூஜை முதலியவற்றை விளைவிப்பவள். மலர்களில் சிறந்த மலர் உருவம் கொண்டவள்.. எப்போதும் புண்ணியம் தருபவள்.. தரிசனத்தாலும் ஸ்பரிசத்தாலும் தென்திசையில் ஊத்தி கொடுப்பவள்.. கலியுகத்தில் பெரும் பாவத்தை அக்னி போல எரித்து ஒழிப்பவள்.. பூமி தேவியை தனது பாத ஸ்பரிசத்தால் தூய்மைப்படுத்துபவள்.. மேலோர் செய்யும் தவம் தரிசனத்தினாலும் ஸ்பரிசத்தாலும் சித்தியாவதற்கு தீர்த்த சொரூபிணியாக இருப்பவள்.. எல்லாக் கர்மங்களையும் வீணாகாமல் பயனடைய செய்பவள்…பாரத தேசத்தில் முக்தியை விரும்புவோருக்கு முக்தியையும் போகத்தை விரும்புவோருக்கு போகத்தையும் வழங்க வல்ல கற்பக விருட்சம் போன்றவள்..


மானஸா தேவியோ பாரத தேசத்தைவரை மகிழச் செய்ய வல்ல பிரகிருதி தேவியின் பிரதான அம்ச ரூபிணி ஆவாள்.

மானஸா தேவி

. இவள் பரதேவதை.. இவள் ஈஸ்வரன் பிரிய சிஷ்யையாகவும் மகாயான சொரூபிணியாகவும் அனந்தனின் சகோதரியாகவும் நாகங்களால் பூஜிக்கப்படும் நாகேஸ்வரி ஆகவும் நாகமாதாவாகவும் நாகேந்திர கணங்களோடு கூடி இருப்பாள்.. நாகங்களையே ஆபரணங்கள் ஆகவும் பூட்டிக்கொண்டு நாகத்தையே வாகனமாகவும் பபஞ்சணயாகவும் கொண்டிருப்பாள்.. இவள் சித்த யோகினி.. விஷ்ணு ரூபிணி பேரழகி திருமாலின் பக்தி பூஜை பாராயணம் முதலானவற்றைக் கொண்டு உள்ளவள்.. தவம் புரிபவர்களாகவும் தபோ ரூபிணியாகவும் தவ பலத்தை தருபவளாகவும் விளங்குபவள்.. 3 லட்சம் தேவ வருஷம் வரை மகாவிஷ்ணுவை குறித்து தவம் செய்தவள்.. முனிவர்களிடையேயும் பெண்களி டையேயும் புகழ் பெற்றவள்.. சகல மந்திரங்களின் அதிதேவதை.. பிரம்ம தேஜஸினால் ஒளிரும் பரப்பிரம்ம ஸ்வரூபிணி.. பரப்ரும்மத்தை தியானிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள்.. கிருஷ்ணரின் அம்சமான ஜரத்காரு முனிவருக்கு இவள் பத்தினியாகவும் மகா பதிவிரதை ஆகவும் முனீஸ்ரேஷ்டரான ஆஸ்திக முனிவருக்கு தாயாகவும் விளங்குபவள்..


இனி, சஷ்டிதேவி, மங்கள சண்டிகை, காளிகாதேவி முதலானோர் பற்றி, அடுத்த பதிவில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்….

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: