இந்துமதம் இணையில்லா இனிய மதம் (பகுதி 15)


இதிகாச மாந்தர்கள் என்ற பகுதியில் சப்த ரிஷிகளான பிருகு, அத்திரி, கௌதமர், காச்யபர், வசிஷ்டர், அகஸ்தியர் ஆகியோரைப் பற்றி இதுவரை பார்த்திருக்கிறோம்.. இன்றைய பதிவில், ஜமதக்னி முனிவரை பற்றியும், சிறந்த இதிகாசமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவரைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்..
பிருகு முனிவரின் வழித்தோன்றலான ஜமதக்னி முனிவர், ரிசிக முனிவருக்கும், மன்னர் காதியின் மகள் சத்யவதிக்கும் பிறந்தவர்.. ஜமதக்னி என்பதற்கு நெருப்பு என்று பொருள்..

வேதம் அனைத்தையும் கற்ற ஜமதக்னி, பிரஸ்னசித் என்ற சூரியகுல மன்னரின் மகளான ரேணுகாவை மணந்து, வசு, விஸ்வா வசு, பிரகத்யானு, ப்ருத்வான்கண்வர் மற்றும் பரசுராமர் ஆகிய ஐந்து குழந்தைகளில் தந்தையானார்..
ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகா தன் பதி பக்தியின் மேன்மையை நாள்தோறும் பச்சைக் களிமண் பானையில் ஆற்று நீரை எடுத்து வருவாள்.. ஒரு நாள், அவ்வாறு பானையில் நீர் எடுக்கும் போது,வானத்தில் தேரில் ஏறி வந்த அழகிய கந்தர்வர் களை தண்ணீரில் பிம்பமாக பார்த்து, ஒரு சில நொடி பொழுது வரை மயங்கினாள்.. இதனால் அவளது கற்புக்கு களங்கம் ஏற்பட்டது.. அதன் காரணமாக, பச்சைக் களிமண் உடைந்தது..எனவே வீட்டிற்கு திரும்பாமல் ஆற்றின் கரையிலேயே ஜமதக்னி முனிவரின் வருகைக்காக காத்திருந்தாள்..
ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வுகளை ஞானக்கண்ணால் உணர்ந்து கோபமுற்ற ஜமதக்னி முனிவர், ரேணுகாவை வெட்டிக் கொல்ல தன் மூத்த மகன்களுக்கு அவர்கள் மறுக்கவே அவர்களை கல்லாக போகும்படி சபித்தார்.. தன் கடைசி மகன் பரசுராமர் முன்வந்து, தந்தையின் ஆணைக்கிணங்க, தனது தாயை கோடாரியால் வெட்டி தலையை துண்டித்தார்..
பின்னர் அமைதியடைந்த ஜமதக்னி, பரசுராமருக்கு வழங்கிய வரங்களின்படி, ரேணுகாவின் துண்டிக்கப்பட்ட தலை, உடல் உடன் இணைந்து உயிர் பெற்றாள்.. கல்லாக மாறிய மூத்த சகோதரர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்..
ஒருமுறை ஆயிரம் கரங்கள் கொண்ட ஹேஹேய நாட்டு மன்னர், கார்த்த வீர்யார்ஜுனன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தார்.. அங்கே ஜமதக்னி வளர்த்துக் கொண்டு இருந்த காமதேனுவின் மகளான சபலை என்னும் தெய்வீக பசுவை கண்டு அதனை தனக்கு தரும்படி கேட்டார்.. தர மறுக்கவே, ஜமதக்னி முனிவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக சபலைப் பசுவை கவர்ந்து சென்றான்..
இந்தச் செய்தியை ஜமதக்னி முனிவர் பரசுராமரிடம் தெரிவிக்க, கோபமுற்ற அவர், கார்த்தவீர்யார்ஜுனின் தலையை தனது கோடரியால் துண்டித்தார்.. அதற்கு பழிவாங்க கார்த்தவீரியார்ஜுனின் மூன்று மகன்கள், பரசுராமர் ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில் ஜமதக்னி முனிவரை கொன்றனர்.. இதனால் கோபமுற்ற பரசுராமர், சத்திரிய மன்னர்களின் இருபத்தொரு தலைமுறையினரின் தலைகளை, கோடரியால் சீவிக் கொல்வதாக சபதம் எடுத்தார்..
அடுத்து நாம் பார்க்க இருப்பது, வால்மீகி முனிவர்.. வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையன் ஆக இருந்தவர்.. ஒரு முறை, நாரதரைக் கொள்ளையிட முயன்ற போது, நாரதரின் வேண்டுகோள்படி நாரதரைக் கட்டி வைத்து விட்டு, வீடு சென்று, யாருக்காக தாம் கொள்ளைத் தொழிலை மேற்கொண்டாரோ, அந்த உறவினர்கள் இடத்தில் எல்லாம்,தனது தொழிலால் தனக்கு சேரும் பாவங்களிலும் அவர்கள் பங்கு கொள்வாரா என கேட்க, அவர்கள் மறுத்து விட்டனர்.. உண்மையை உணர்ந்த முனிவர் நாரதருக்கு அளித்த வாக்குறுதிப்படி இறைவழிபாட்டில் ஈடுபட்டார்..
எல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த அவரது உடலைச் சுற்றிகரையான் புற்று கட்டிய ஏதும் அறியாமல் பல ஆண்டுகள் தன்னை மறந்த நிலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.. அவரைச் சுற்றி புற்று கட்டியதால் அவருக்கு வால்மீகி என்ற பெயர் ஏற்பட்டது..


சென்னையின் முக்கிய பகுதியான திருவான்மியூர் இவரது பெயரில் வழங்கப்படுவதே திருவால்மீகியூர் என்பது மருவி திருவான்மியூர் என்றானது.. வால்மீகி முனிவருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது..
இவர் இயற்றிய ராமாயணம் என்ற இதிகாச பலராலும் அறியப்பட்ட ஒன்றாகும்..
இந்து சமயம் ஏறக்குறைய 950 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது.. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும் நேபாளத்திலும் வசிக்கின்றார்கள்..இது தவிர, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்..
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை.. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை..பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.. ஆக பல்லாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வேதகால பண்பாட்டில் இந்து சமயம் தோற்றம் பெற்றது..
இயற்கை நிகழ்வுகளான இடி மின்னல் காற்று நெருப்பு போன்றவற்றை கண்டு பயந்து ஆதிமனிதன் அவரை கடவுளாக வழிபட தொடங்கினான் சூரியன், சந்திரன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையையே முதல் கடவுளாகவும் இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது..பல்வேறு முனிவர்களாலும் முன்னோர்களும் செவிவழியாக கொல்லப்பட்ட வேதம் என்னும் வாழ்வியல் முறையை விளக்கமானது.. நாகரீகம் வளர்ந்த பின் ஓலைச்சுவடியில் பதியப்பட்டது.. வேதத்தின் உட்பொருளை கொண்டு எளிமையாக மக்களுக்கு கூறுவதற்காக உபநிடதங்கள் உருவாகின.. அதனையும் எளிமையாக கதை வடிவில் சொல்வதற்காக புராணங்கள் தோற்றுவிக்கப்பட்டன.. இவற்றில் 18 புராணங்கள் மகாபுராணங்கள் என்றும் சில உப புராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன..

பதினெண் புராணங்கள்


இந்து சமயம் வேதங்களையும் தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரங்களையும் கொண்டு ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது..வேத தத்துவ ஞான பிரிவுகள் பக்தியோகம் கர்மயோகம் ஞானயோகம் மற்றும் யோகா தந்திரா ஆகம விரிவுகள் என்பவற்றில் இருந்தும் கூட எடுத்து வந்த சிந்தனை ஓட்டங்கள் அனைத்துமே இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்தில் சங்கமம் ஆகின்றன..
இவற்றில் “சனாதன தர்மம்” அல்லது “நிலையான தத்துவஞானம்/ இசைவு/ நம்பிக்கை” என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தை குறித்து வந்த பெயர் ஆகும்.. இந்துக்களைப் பொறுத்தவரை இது மனிதனால் உருவாக்கப்பட்டவற்றை கடந்து தனிமனித விருப்பு வெறுப்புகளை குறியாது,தூய உணர்வு பூர்வமாக அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது..
அன்பார்ந்த வாசகர்களே! இந்த இந்து சமயம்/மதம் என்ற பெருங்கடலில் மூழ்கி, நாம் இதுவரை பல நல் முத்துக்களை பெற்றுக் கொண்டோம்..இந்த தொடரின் மூலம், வாசகர்களுக்கு இந்துமதத்தின் அருமையை ஓரளவாவது புரியவைத்து இருப்பேன் என்று எண்ணுகிறேன்.. இந்த தொடர், முழுவதும் நான் படித்து, அறிந்து கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது.. இவற்றில் ஏதும் தவறுகள் இருக்கும் என்று வாசகர்களுக்குத் தோன்றினால், அதனை எனக்கு தெரிவித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்… அதன் மூலம் பல அரிய விஷயங்களை நான் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்..
இத்துடன் இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.. நன்றி! வணக்கம்..!

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: