ஜகத்காரணி (பகுதி 9)


துர்கா தேவி

துர்கா தேவியானவள் பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அருள்பவள் ஆவாள்..இவள் சிவப்பிரியை.. கணேசன் பிறப்பதற்கு அன்னையானவள்.. விஷ்ணு மாயையாகவும் முழு பிரம்ம சொரூபிணியாக, பிரம்மா, முதலிய தேவர்கள், மகரிஷிகள், மனுக்கள் முதலியவர்களால் துதிக்கப்படுபவளாக விளங்குபவள்..இவள் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து இருப்பவர்.. புகழ், உயர்வு, மங்களம், சுகம், மோட்சம் முதலியவற்றை வழங்குபவள்.. துக்கம், பீடை போன்றவற்றை ஒழிப்பவள்.. தன்னை சரண் அடைந்தவர்களையும் பலஹீனர்களையும் காப்பாற்றுபவள்.. தேஜோமயமானவள்.. தேஜஸிர்க்கு நிலைக்களமான தேவதை.. சகல சக்திகளின் தன் வடிவம்.. சக்திகளுக்கெல்லாம் மகேஸ்வரி.. சித்த பகவதியை தருபவள்.. அறிவு, உணர்வு, உறக்கம், பசி, தாகம், ஒளி, சோம்பல், கருணை,கவனம், பொறுமை, பிரமை, மெய்யறிவு, துஷ்டி, லக்ஷ்மி, தைரியம், மாயை ஆகியவற்றின் சக்தி உருவாக திகழ்பவள்.. சிவரூபமான கிருஷ்ணரை அடைந்திருக்கும் போது “நாராயணி” ஆகவும் தோன்றியவள்.. இவளது குண சிறப்புகள் அளவற்றவை.. அவற்றில் சில திருமுறைகளில் கூறப்பட்டுள்ளன..


லட்சுமிதேவி


சுத்த தத்துவத்தின் தன் வடிவமாகவும், சகல செல்வ பாக்கியங்களின் தன் உருவாகவும்,அவற்றுக்கு அதிஷ்டான தேவதையாகவும் “லட்சுமி தேவி” விளங்குகின்றாள்.. இவள், மனோகரி, அமைதி, அழகு, ஒளி, சாந்தி முதலியவற்றின் வடிவம்.. நல்ல குணமுடைய சுசீலை.. சர்வ மங்கள சொரூபிணி.. காமம், லோபம், மோகம், ரோஷம், மதம், அகங்காரம் ஆகியவற்றை வர்ஜீப்பவள்.. இந்திரிய நிக்கிரகையாகவும், பக்தர்களிடம் பிரியம் உடையவளாகவும் இருப்பாள்.. இவள் விஷ்ணுவின் அன்பிற்கு உகந்தவள் ஆவாள்.. அவரது அழகிற்கு இணையானவள்.. திருமாலிடம் இனிமையாக உரையாடுபவர்.. சகல பல வடிவினி.. ஜீவனோபாய உருவினி..இவள் வைகுண்டத்தில் விஷ்ணுவின் பத்தினியான லட்சுமியாகவும், சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமியாகவும், ராஜ்யங்களில் ராஜ லட்சுமியாகவும், இல்லத்தரசிகளின் கிரகங்களில் கிருகலட்சுமியாகவும், எல்லா பிராணிகள் இடத்தில் சோப லட்சுமியாகவும், புண்ணியவான்கள் இடம் பிரீதி லட்சுமியாகவும், வீரர்களிடம் கீர்த்தி லட்சுமியாகவும், வைசியர்களிடம் வர்த்தக லட்சுமியாகவும், பாவிகளிடம் கஜ லட்சுமியாகவும், வேதாந்திகளிடம் தயா லட்சுமியாகவும், பல்வேறு பெயர்களுடன் விளங்குகின்றாள்..

சரஸ்வதி தேவி

எல்லோரும் வணங்கிப் போற்றும் மூன்றாவது தேவையான “சரஸ்வதி” வாக்கு, புத்தி, வித்தை, ஞானம் என்பனவற்றின் நிலைக்களமாகவும், சகல வித்தைகளின் வடிவமாகவும், சரஸ்வதி தேவி விளங்குகின்றாள்.. அதனால், இவள், தன்னை வழிபடும் அவர்களிடம், புத்தி வடிவமாகவும், அவர்கள் பாடும் கவிதையில், கவி உருவமாகவும், அந்தக் கவிதையில் யுக்தி வடிவமாகவும், அந்த யுக்தியில் நுண்பொருளின் வடிவமாகவும், அந்த நுண்பொருளை மறவாது இருக்க செய்யும் சிந்தனை வடிவமாகவும், அந்த சிந்தனையின் ஆதாரமான பலவித சித்தாந்த பேதங்களின் வடிவமாகவும், அந்த சித்தாந்த பேதங்களின் உட்பொருள், விசாரணைகள், விளக்கக்கூடிய விசாரணை வடிவமாகவும்,அந்த விசாரணையில் தூக்கி காட்டும் வாக்கிய போதனையாகவும், அந்த வாக்கிய போதனையால் எல்லா சந்தேகங்களையும் நீக்கக்கூடிய நாச காரணியாகவும், அதனால் தெளிவுபெறும் விசார காரணியாகவும்,அந்த விசாரம் இதுதான் என்று எடுத்துச் சொல்லும் கிரந்த காரணியாகவும், அந்த கிரந்தங்களை அளிக்கும் ஆற்றல் வடிவமாகவும், சரஸ்வதிதேவி விளங்குகின்றாள்…


மேலும், எல்லா விதமான சங்கீதங்களின் வடிவமாகவும், அந்த இசைக்கு ஏற்ற தாள, பேத காரணம் வடிவமாக இருக்கிறாள்.. அவற்றிற்கு, ஏற்ற பொருள், அறிவு வடிவமாகவும், அந்த பொருள் அறிவுக்கு உகந்த, கவிதை வடிவமாகவும்,அவற்றால் மகிழ்ச்சி பெறும் பிரபஞ்ச வடிவமாக சரஸ்வதி தேவி விளங்குகின்றாள்..


இதுதவிர, சொற்பொருள் வாதங்களின் வடிவமாகவும், அவற்றால் அடையும் அமைதி வடிவமாகவும், விளங்குகின்றாள்.. சகல வித்தைகளின் வடிவம் தானே என்பது தோன்றும்படி, எப்போதும் வீணையும், புத்தகமும், கையில் ஏந்தியபடி காட்சி அளிப்பாள்.. இத்தகைய வித்தைகளால் விளையக்கூடிய ஆத்ம பயனான சுத்த சத்துவ சொரூபிணியாகவும், நல்ல குணம் உடையவராகவும், திருமாலுக்கும், திருமகளுக்கும் இனிமையானதாகவும் திகழ்கிறாள்.. பச்சைக்கற்பூரம், சந்தனம், முல்லைப்பூ, ஆம்பல், வெண்தாமரை முதலியவற்றிற்கு இணையான நிறமுடையவள்..
மகாவிஷ்ணுவை “ரத்தின மாலையால்” பூஜிப்பவர்.. தவ வடிவினளாக இருந்து தப யோகிகளுக்கு பலன் அளிப்பவள்.. சித்தி வித்தை வடிவினளாக இருந்து அவற்றை வழங்குபவள்.. இந்த கலைமகளை வழிபடாத மாந்தர்கள், சொற்பயனான வித்தையின் ஒளி இல்லாமல், உயிரற்ற நடைப்பிணங்கள் போல் திரிவார்கள்.. இவை வேதத்தில் கூறப்பட்டுள்ள ஜெகதாம்பிகை, ஞான சரஸ்வதி தேவியின் சிறப்புகளாகும்..


இனி, அடுத்த பகுதியில் சாவித்திரி தேவி, ராதா தேவி ஆகியோரைப் பற்றிப் பார்ப்போம்..


மீண்டும் சந்திப்போம்

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: