சப்தரிஷிகளில் சென்ற பதிவில் விஸ்வாமித்திரர் பற்றி தெரிந்துகொண்டோம் இன்றைய பதிவில் மற்றொரு மகா முனிவரான அகத்திய முனிவர் பற்றி பார்ப்போம்…

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர் அகத்தியர் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தவர் ஆவார்..
புதுச்சேரிக்கு அருகிலுள்ள உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார் எனவே அவர் தங்கியிருந்த பகுதி அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்று அவைக்கப்படுகிறது..
ரிக் வேதத்தில் உள்ள 26 சூக்தங்களை இவர் இயற்றியுள்ளார் இவர் மித்திரர் வருணர் இன் மகனும் வசிஷ்டரின் சகோதரரும் ஆவார்..இவரே அகத்தியம் எனும் முதல் தமிழ் இலக்கண நூலை எழுதியவர் ஆனால் இந்த நூல் கிடைக்கப்பெறவில்லை தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார் அகத்தியன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகின்றார் அகத்தியரின் மனைவியின் பெயர் லோபாமுத்திரை என்பதாகும்

ரிக் வேதத்தில் தினைமாவு பயனளிக்கும் தானியங்கள் விஷம் தோய்ந்த அம்புகள் தர்பை புல் ஆகியவற்றைப் பற்றி கூறியுள்ளார் (ரிக் வேதம் 1-189-10;1-91-30)
இராமாயணக் காப்பியத்தில் ராமன் வனவாச காலத்தில் அகத்தியர் அவர்களை சந்தித்து மந்திர பலமிக்க பல ஆயுதங்களை அருளினார் இந்து கடவுளை போல அகஸ்தியர் பல பி அவர்களை அடக்கினார்..
கம்பராமாயணத்தில் கம்பர் அகத்தியர் பற்றி சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார்
என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான்-47
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் -36
தழற்புரை சுடர் கடவுள் தந்தத்தமிழ் தந்தான்-41
கடலெல்லாம் உண்டு அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான்-37
வாதாபிகன் வன்மை காயம் இனிது உண்டு அலகின் ஆரிடர் களைசைந்தான்-38
விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான்-39..
இவருக்கு தமிழ் முனிவர் மாதவ முனிவர் மாமுனி குருமுனி திருமுனி முதல் சித்தர் பொதியில் முனிவன் அமர முனிவர் பொதியவரை முனிவர் மற்றும் குட முனி என்று பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்
இவர் சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் இவரது பாடல்களை பயின்று வந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.
பற்றிய சிறப்பு செயல்கள் உடன் கூடிய பல கதைகள் உள்ளன..
தாரகன் முதலிய அசுரர்களை அழிக்க இந்திரன் வாயு ஆகியோர் பூமிக்கு வந்தனர் இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள் இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும் மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும் வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன குடத்திலிருந்து அவதரித்ததால் குடமுனி கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் கூறப்படுகிறது இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர் இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க கடல் நீர் முழுவதையும் குடித்து விட இந்திரன் அசுரர்களை அழித்தார் அதன்பின் நீரை கடலுள் விடுவித்தார் அகத்தியர்..
அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார..கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார் இதனால் இவர் தெற்கு நோக்கி பயணம் செய்தபோது வழிவிடாமல் நின்ற விந்தியமலை அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றதுதான் தென் திசை சென்று திரும்பி வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை திரும்பவே இல்லை அதனால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார் இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி என்று பெயர் பெற்றதுஇலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் வாதாபி வில்வலன் என்னும் இரு அரக்கர்களை கொன்று இப்படி அகத்தியரைக் குறித்து புராணங்களில் பல கதைகள் உள்ளன…
அகத்தியரின் மாணவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதங்கோட்டு ஆசான் துரா லிங்கன் செம் பூண் சேய் வையாபிகன் வாய்ப்பிகன் பனம் பாரன் கழாரம்பன் அநவிநயன் பெரிய காக்கை பாடினி நத்தத்தன் சிகண்டி தொல்காப்பியன் ஆகிய 12 பேரும் அவர் இவர்கள் ஒன்று சேர்ந்து பன்னிரு படலம் என்னும் நூலை எழுதினார்கள் இந்த செய்தியை புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது..
அகத்தியர் வெண்பா வைத்தியக் கொம்மி வைத்திய ரத்னாகரம் வைத்தியக் கண்ணாடி வைத்தியம் 1500 வைத்திய சிந்தாமணிகர்ப்பசூத்திரம் ஆயுள் வேத பாஷ்யம் வைத்தியம் 4600 செந்தூரம் 300 மணி 4000 வைத்திய நூல் பெருந்திரட்டு பஸ்மம் 200 நாடி சாஸ்திரம் பக்ஷணி கரிசில் பஸ்யம் 200 சிவசாலம் சக்தி சாலம் சண்முக சாலம் ஆறெழுத்தந்தாதி காம வியாபகம் விதி நூன் மூவகை காண்டம் அகத்தியர் பூசாவிதி அகத்தியர் சூத்திரம் 30 போன்ற நூல்களை எழுதியதாக கூறப்படுகிறது..
மேலும் இவர் அகத்தியரின் ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்;
அகத்தியர் சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது…
அகத்தியருக்கு பூஜா விதிகளும் போற்றிகளும் நிவேதனம் போன்றவையும் உள்ளன..
இனி அடுத்த பதிவில் ஜமதக்னி முனிவர் பற்றியும் வால்மீகி முனிவர் பற்றியும் பதிவு செய்கிறேன்…அடுத்த பதிவுடன் இந்த தொடர் முற்றுப் பெறுகிறது
மீண்டும் சந்திப்போம்