"ஹரி" என்ற திருநாமத்திற்கு பல பெயர்கள் உண்டு என்பதனை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருப்பது,"அச்யுதன்" என்னும் திருநாமம்..

அச்யுதன் என்ற சொல்லுக்கு "அசையாதவன், மாறாதவன், வீழ்ச்சி அடையாதவன்" என்று பொருள் உண்டு.. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இந்தச் சொல் 101,370 மற்றும் 557ஆவது பெயர்களாக கூறப்படுகிறது.. பகவத்கீதையில் விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரை, அர்ஜுனன் பலமுறை “அச்யுதா” என்று அழைத்திருக்கிறார் (பகவத் கீதை அத்தியாயம் 1 ஸ்லோகம் 21-22).. விஷ்ணு சகஸ்ரநாம நூலின் விளக்க உரையில் ஆதிசங்கரர் அச்யுதன் என்பதற்கு “உள்ளார்ந்த இயல்பு மற்றும் சக்திகளை என்ற இழக்காதவர் மற்றும் மாறாத் தன்மை கொண்டவர் என்றும் நிலையானவன்” என்று உள்ளார்ந்து குறிப்பிடுகின்றார்.. பொதுவாக ஒரு சக்கரம் சுழல வேண்டும் எனில் அதற்கு ஒரு அச்சு தேவை.. அந்த அச்சு நிலையானதாக இருந்தால், அந்த சக்கரம் நன்கு சுழல இயலும்.. அது போலத்தான், வாழ்க்கை என்னும் இந்த சக்கரம், சுழல அச்சாக அந்த பரந்தாமன் இருக்கின்றார் என்பதை குறிப்பிடுவது போல அச்சுதன் என்ற திருநாமம் உள்ளது என தோன்றுகிறது… அச்சுதன் என்பவர் “எப்போதும் பிரியாமல் உள்ளவன் தன்னை சரணம் அடைந்த அடியார்களை விட்டு எப்போதும் நீங்காதவன்.”. “யஸ்மாத் ந ச்யுத பூர்வ: அஹம் அச்யுத: தேந கர்மணா--நான் எப்போதும் பக்தர்களை கைவிடுவதில்லை இதனால் அச்சுதன் என அழைக்கப்படுகிறேன்
..”
“கீதை(6-30) – திவ்ய அஹம் ப்ரணச்யாமி–யார் என்னை எங்கும் காண்கிறானோ, அவன் பார்வையில் இருந்து நான் மறைவதில்லை”..
“ராமாயணம் யுத்த காண்டம் (18-3)- ந த்யஜேயம் கதஞ்சன–நண்பன் என்று வந்தவனை நான் கைவிடமாட்டேன்”
மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் விஷ்ணு சகஸ்ரநாமத்தில்101ஆவது சொல்லாக உள்ள “அச்யுதன்” என்ற திருநாமத்திற்கு “பராசர பட்டர்” அருளிய “பகவத் குண தர்ப்பணம்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது..
அடுத்து விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 370ஆவது சொல்லாக வரக்கூடிய “அச்சுதன்” என்ற திருநாமத்திற்கு பொருளாக மேலே சொன்ன நூலில் தரப்பட்டுள்ள குறிப்புகள் எவை எனில்:-
“ ச்யவநோத்பத்தி யுக்தேஷு ப்ரஹ்மேந்த்ர வருணாதீஷு யஸ்மாத் ந ச்யவாத ஸ்தாநாத் தஸ்மாத் ஸங்கீர்த்யதே அச்யுத:–நான்முகன், இந்திரன், மற்றும் வருணன் போன்ற தேவர்கள் தங்களது பதவியில் இருந்து நழுவி விழுதல் என்பது உண்டு.. ஆனால் தன்னுடைய இடத்திலேயே இருந்து இவருக்கு நழுவுதல் இல்லை என்பதால் எம்பெருமான் “அச்யுதன்” எனப்பட்டார்.. ”நான்முகன் போன்றவர்களுக்கு உற்பத்தி என்பது உள்ளது போன்றே, எம்பெருமானுக்கு “அவதாரம்” என்பது உள்ளது… ஆயினும், அனைவருக்கும் ஈஸ்வரனாக உள்ள, தனது நிலையில் இருந்து, மாறாமல் உள்ளான் என்ற கருத்து இதில் சொல்லப்படுகிறது..
அடுத்தது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 557வது சொல்லாக வரும் “அச்யுத:”என்ற சொல்லுக்கு “தன்னுடைய நித்தியமான ஸ்வரூப ஸ்வபாவங்களில் இருந்து எப்போதும் நழுவாமல் உள்ளவன்…”என்று பொருள் கூறப்பட்டுள்ளது…
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய “திருமாலை” என்னும் பாமாலையை ஸ்தோத்திரங்களில் “அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே” இன்று எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்..
அச்சுதன் என்ற திருநாமத்தை போற்றும் வகையில் “அச்சுதாஷ்டகம்” என்ற ஸ்தோத்திரமும் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே..
அடுத்த பதிவில் ஹரி என்னும் திருநாமத்தின் அடுத்த பெயரான மாதவன் என்ற திருநாமத்திற்கு உண்டான பெருமைகளை பற்றி பதிவு செய்கிறேன்..
மீண்டும் சந்திப்போம்…