(கோவிந்த் கிடாம்பி)
நான், கடந்த மார்ச் மாதம், ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் என்கின்ற தலத்தில், கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி மற்றும் லக்ஷ்மி நாராயண சுவாமி திருக்கோயிலை தரிசித்தேன்..
மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கிழக்கு பார்த்த கோவில்.. பொதுவாக, கொங்கு நாட்டு கோயில்களில் கருடன் தூண் என்று ஒன்று இருக்கும்.. அதன் மேல் விளக்கு ஏற்றி வைப்பார்கள்.. அந்த தூண் இங்கு இல்லை.. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன.. பெருமாள் இங்கே மூன்று நிலைகளில் சேவை சாதிக்கின்றார்.. வேணுகோபால சுவாமியாக நின்ற நிலையிலும், லட்சுமி நாராயணராக அமர்ந்த நிலையிலும், அரங்கநாதராக கிடந்த நிலையிலும் அருள் பாலிக்கின்றார்..
முஸ்லிம் மன்னனான, மாலிக்காபூர் படையெடுப்பின் போது, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், நகைகளும், மதுரை, கன்னியாகுமரி, கேரளா, மைசூரு வழியாக வந்து, இந்த கோயிலில் சுரங்கப்பாதை/ பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது..ஸ்ரீரங்கத்து நம் பெருமாள் உற்சவ மூர்த்தி அந்த படையெடுப்பின் போது பாதுகாப்பாக வைப்பதற்காக எடுத்துச் சென்ற நிகழ்வு பற்றி எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் தமது "திருவரங்கன் உலா" என்கின்ற புதினத்தில் எழுதியிருப்பார்.. அதில் சத்தியமங்கலம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், கோவிலின் வலைதளத்தில்(website) திப்பு சுல்தான், போர்க்காலங்களில், இந்த சுரங்க வழியை உபயோகப் படுத்தியதாக எழுதப்பட்டிருக்கின்றது..

மண்டப தூண்களில், பல சிற்பங்களுடன் திப்பு சுல்தானின் சிற்பமும் உள்ளது.. மேலும், திப்பு சுல்தானின் பொருள் காப்பாளர், வரி வசூலில், ஒரு பகுதியை இந்த கோவிலுக்கு கொடுத்ததாகவும், அதற்காக அவருடைய உருவத்தை செதுக்கியதாக கோவில் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இது பற்றிய முக்கிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை..
இந்த கோயில் நடைதிறப்பு காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஆகும்
இந்தக் கோயில் சத்யமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் த
ொலைவில் உள்ளது…