ஹரி என்று போற்றப்படுகின்ற திருமாலின் அவதார கதைகளை கூறும் கதை என்பது இயல்,இசை, நாடகம்ஆகிய மூன்றும் கலந்த கலவையாகும்.. மக்களிடையே பக்தி மார்க்கத்தை பரப்புவதில் “ஹரிகதா காலட்சேபம்” முன்னிலை வகித்தது..ஹரி கதைக்கும், உபன்யாசம் அல்லது ஆன்மீக சொற்பொழிவுகளுக்கும், வேறுபாடு உண்டு..உபன்யாசம் செய்பவர், உரைநடையில் பேசுவதில் மட்டுமே பலமாக இருந்தால் போதும்.. ஆனால், ஹரிகதா காலட்சேபம் செய்பவர்களோ உரையாற்றுவதிலும், பாடுவதிலும், பாவனைகளை வெளிப்படுத்தி நடிப்பதிலும், சமயத்தில் நடன முத்திரைகளை அபிநயிப்பதிலும், கூட வல்லுனராக இருக்க வேண்டும்.. மேலும், வடமொழி, தெலுங்கு போன்ற பன்மொழியில் வித்தகராக இருத்தல் மிகச்சிறப்பு.. வேதங்கள், சுலோகங்கள்,கீர்த்தனைகள், ராக ஆலாபனைகள், தமிழ், தெலுங்கு பாடல்கள்,, மராத்திய அபங்கங்கள், இந்தி பஜன்கள் என்று அனைத்தும் அறிந்தவராக இருப்பதோடு, அவற்றை அளவோடு பயன்படுத்துவதிலும், திறமையானவராக இருத்தல் வேண்டும்.. குறிப்பாக, இதிகாசங்கள் மற்றும் புராணக் கதைகளை மக்களிடையே சுவையோடு எடுத்துக் கூறவேண்டும்.. பெரும்பாலும் ஹரிகதைக்கு பக்கவாத்தியங்களாக மிருதங்கம், ஆர்மோனியம் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.... பின்னாளில், ஆர்மோனியத்திற்கு பதிலாக வயலினும், சுருதிப்பெட்டியும் ஆக்கிரமித்து விட்டது.. இந்த ஹரிகதா காலக்ஷேபம் செய்பவர்களின் வரிசையில் திரு.டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் குறிப்பிடத்தக்கவர்.. தமிழ்நாட்டில், கும்பகோணத்திற்கு அருகில், உள்ள திருவிடைமருதூர் என்ற ஊரில் வேத விற்பன்னரான திரு சாம்பமூர்த்தி என்பவருக்கு 1919இல் திரு பாலகிருஷ்ண சாஸ்திரி பிறந்தார்.. திருவிடைமருதூர் சாம்பமூர்த்தி பாலகிருஷ்ண சாஸ்திரிகள் என்பது இவரது முழுப்பெயர்..

இவர் சிறு வயதிலேயே நாகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. அதன் பின்னர் அவர் தனது மாமனாரிடம், வேதங்கள்,புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் கர்நாடக சங்கீதத்தையும் முறைப்படி கற்றார்.. பின்னர் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் படித்த பாலகிருஷ்ண சாஸ்திரி, ஆங்கில இலக்கியத்தில் புலமை பெற்றார்.. கல்லூரி படிப்பை முடித்த பின்னர், அவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்தார் பணி ஓய்வுக்குப் பின் ஹரிகதா காலட்சேபங்கள் நாடு முழுவதும் செய்தார்.. பாலகிருஷ்ணன் சாஸ்திரி -நாகலட்சுமி தம்பதியருக்கு மூத்த மகன், தமிழ் திரைப்பட இயக்குனரும், மேடை நாடகம், திரைக்கதை எழுத்தாளரும் மற்றும் திரைப்பட நடிகருமான திரு மௌலி அவர்கள்…சாஸ்திரியின் இளைய மகன் திரு எஸ் பி.காந்தன், மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்பட இயக்குனராக இருக்கிறார்.. திரு பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு 1972இல் கலைமாமணி விருது அளித்தது.. இந்திய நுண்கலைகள் சங்கம்1988இல் சங்கீத கலாசிகாமணி விருது வழங்கியது.. 1993இல் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது..1997இல் மியூசிக் அகாடமி சங்கீத கலா ஆச்சாரியர் விருது வழங்கி கௌரவித்தது.. திரு பாலகிருஷ்ண சாஸ்திரிகள் 84 ஆவது வயதில் 2003இல் வயது முதிர்வின் காரணமாக காலமானார்.. அவர் மறைந்தாலும் அவரது ஹரிகதா காலட்சேபங்கள் ,ஒலிநாடாக்கள் வழியாகவும் குறுந்தகடுகள் வழியாகவும் இன்றளவும் ஆன்மீக பக்தர்களால் கேட்டு பரவசம் அடைய செய்கிறது.. இந்த தொன்மையான நிகழ்ச்சிகளை, ஆந்திராவில் அதிக அளவு நடத்துகிறார்கள்.. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இந்த நிகழ்ச்சியை தற்போது திருமதி விசாகா ஹரி, திருமதி சிந்துஜா ஏகாம்பரம் போன்றோர் கருதுகின்றனர்…