சென்ற பதிவில் நவதுர்க்கைகள் பெருமைகளை பற்றி பதிவு செய்திருந்தேன் தற்போது அந்த சக்தி தேவியின் அம்சமாக பஞ்ச சக்தியின் விவரங்களை பதிவு செய்கின்றேன் சக்திதேவி, ராதை, லக்ஷ்மி ,சரஸ்வதி, சாவித்திரி, மற்றும் துர்க்கை எனப்படும் பஞ்ச சக்திகள் அதாவது ஐந்து விதமான பிரகிருதிகள் என வழங்கப்படுவார்கள். ப்ர என்றால் எழுச்சி என்று பொருள்.. க்ருதி என்றால் சிருஷ்டி என்று பொருள் ஆகவே பிரகிருதி என்றால் சிருஷ்டியால் மன எழுச்சி உடையவர் என கொள்ளலாம் மேலும் ப்ர என்பது சத்துவ குணத்தையும் கிரு என்பது ராஜச குணத்தையும் தி என்பது தாமச குணத்தையும் குறிப்பதாகும்.. ஆகையால் இந்த மூன்று குணத்தின் தனக்குள்ளே கொண்டுள்ள சக்தியோடு படைப்பதில் இந்த ஐந்து சக்திகளும் முதல் சக்திகளாக இருப்பவர்கள் என்று அர்த்தப்படும் மேலும் ப்ர என்பது ஆதி என்ற பொருளையும கிருதி என்பது படைப்பு என்ற பொருளையும் தரவல்லது ஆகையால் சிருஷ்டிக்கு ஆதியில் உள்ளவர்கள் என்று அர்த்தமாகும் இவ்வாறு ஐந்து வித பிரகிருதி ஆதார சக்தியானவள் பரமாத்மாவான பிரம்மத்தோடு கலந்து இருக்கும் அறிவாற்றல் ஆகும்

எனவே சிருஷ்டி காலத்தில் இந்த சக்தி வலது பாகம் ஆண் வடிவமாகவும் இடது பாகம் பெண் உருவமாகவும் இருப்பாள் ஆனால் அவள் ஆண் பெண் என்ற இரு உருவங்களாக தோற்றமளித்தாலும்பரப்பிரம்மம் எப்படியோ அப்படியேதான் சக்தி என்பதை யோகிகள் அறிந்திருப்பதால் அக்கினியில் உஷ்ணம் எப்படி இரண்டற கலந்து இருப்பது போன்று அது போல ஆண் பெண் என இரண்டு உருவமாக தென்பட்டாலும் அந்த சக்தி ஒன்றே என்று உணர்ந்து அந்த சக்தி நித்யமாகவும் அழிவு இல்லாததாகவும் விளங்கும் ஒரே பிரம்ம ஸ்வரூபம் என்பதை மெய்யறிவால் கண்டு எல்லாம் பிரம்மமயம் என்று சொல்வார்கள் அந்த சக்தி இரண்டு உருவமாக தோற்றம் அளிக்கும் போது அதில் மூலப்பிரகிருதிக்கான பெண் உருவம் ஈஸ்வரி ஆகவும் ஆண் உருவத்தை சிவபெருமானாக தோற்றுவிக்க வேண்டும் என்று எண்ணி தன் இயல்பாய் தனி இரண்டாக பிரிந்து தோன்றினாள் அவ்விதம் தோன்றிய அந்த மூலப் பிரகிருதியை ஏவலினால் ஐந்து சக்திகள் உண்டாயின அவைகளே துர்காதேவி லட்சுமி தேவி சரஸ்வதி தேவி சாவித்திரி தேவி மற்றும் ராதாதேவி ஆகியோர்……இவர்களைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்
மீண்டும் சந்திப்போம்….