சென்ற பதிவில் சப்த ரிஷிகளை பற்றி கூறி, அவர்களில் அத்திரி, பிருகு, மற்றும் வசிஸ்டர் ஆகியோர் பற்றி கூறியிருந்தேன்.. இந்த பதிவில் கௌசிகர் எனப்படும் விசுவாமித்திரர் பற்றி பதிவு செய்கிறேன்.. கௌசிகர் எனப்படும் விசுவாமித்திரர் பண்டைய இந்தியாவின் மிகப்பெரிய முனிவராக கருதப்படுபவர்.. குசா நபரின் மகன்..இவர் கடுந்தவம் புரிந்து அதன் விளைவாக ஏற்பட்ட கனல் தேவ லோகத்தில் இருக்கும் இந்திரனுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியது எனவே தேவ கன்னிகையான மேனகையை விசுவாமித்திரர் முன் நடனமாடச் செய்துஅவரது தவத்தினை கலைக்க கட்டளையிட்டால் அவ்வாறு மேலவையும் நடனமாடினார் அவருடைய நடத்தினால் முனிவரின் தவம் கலைந்தது அவர் மேனகையை மனைவியாக்கிக் கொண்டார்.. விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள். பின்னர் சகுந்தலை துஷ்யந்தன் மணமுடித்து அவர்களுக்கு பரதன் மகனாகப் பிறந்தார் ஆனாலும் தன் தவம் மேனகையால் கலைக்கப்பட்டது என்பதால் விசுவாமித்திர
ர் மேனகையை சபித்தார்..
மேனகையை சபித்த பின்னர்ஆயிரம் ஆண்டுகளுக்கு மீண்டும் கடும் தவம் செய்யும் பொருட்டு இமயமலைக்கு சென்று விடுகிறார் கௌசிகர்.. உண்ணாமல் மூச்சு விடுவதையும் நிறுத்தி கடுந்தவம் மேற்கொள்கிறார்பல ஆண்டுகளுக்குப் பின் விரதத்தை முடிவு செய்யும் வரை இந்திரன் மீண்டும் சோதிக்கிறான் ஏழை அந்தணராக வரும் இந்திரன் அவர்களிடம் யாசகம் கேட்க, அவரும் தனது தவப்பலனை கொடுக்க விட்டு தன் தவத்தைத் தொடர்ந்தார் அவரது தவ வலிமையை கண்ட பிரம்ம தேவர் கௌசிக இருக்கு பிரம்மரிஷி என்ற பட்டத்தை வழங்கி விசுவாமித்திரர் என்னும் பெயரும் இடுகின்றார்..
திரிசங்கு என்பவன் ஒரு அரசன்.. அவன் ஒரு முறை வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்த போது அவனுக்கும் அவனது படைகளுக்கும் காமதேனு என்ற பசுவின் உதவி கொண்டு உணவு படைக்கின்றார்.. அந்த காமதேனுவை அபகரிக்க திரிசங்கு சண்டையிடுகின்றான். வசிஷ்டமுனிவர் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அவன் மீது ஆயுதமாக ஏவ அவன் தோல்வி அடைகிறான் பிறகு அவரிடம்தன்னை மானுட உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்கிறார் அவ்வாறு செய்ய இயலாது என்று வசிஷ்டர் மறுத்துவிடுகிறார் அதனை தொடர்ந்து வசிஷ்டரின் புதல்வர்களும் மறுத்துவிடுகின்றனர்…திரிசங்கு வை வெட்டியானாக போகும்படி சபித்துவிட்டார் அதனால் சாம்பல் பூசப்பட்ட உடலுடன் இரும்பு அணிகர்கலன்களுடன் கருப்பு ஆடையும் அணிந்த மனிதனாக மாறுகிறான் திரிசங்கு…தனது அடையாளம் தெரியாமல் போனதால் அவன் அரசாங்கத்தை விட்டு துரத்தப் படுகிறார்
வெளியேறிய அவன் விசுவாமித்திரரின் சந்திக்க நேரிடுகிறது அவனுக்கு உதவ முன்வருகிறார்..அவரது தவ பலத்தினால் டெங்குவை உடலுடன் சொர்க்கத்தில் ஏற்றுக்கொள்ளும்படி யாகம் செய்கிறார் அதற்கு எந்த தேவர்களும் செவிசாய்க்கவில்லை அதனால் கோபமுற்ற அவர் அவனை தனது தவ பலத்தினால் சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கிறார் அவர் உள்ளே நுழையும் போது இந்திரன் அவனை தடுத்து அனுமதி மறுத்தார் அதனால் கௌசிக முனிவர் திரிசங்கு விர்க் ஆகவே ஒரு உலகத்தை படைத்தார்அப்போது பிரகஸ்பதி தலையிட்டு விஸ்வாமித்திரரை மேலும் ஏதும் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டார் இருந்தபோதிலும் சொர்க்கம் சென்று திரிசங்கு வானிலேயே தலைகீழாக மாற்றிக் கொண்டு ஒரு நட்சத்திரமாக மாறினான்….
திருசங்குவிற்காக தனது தவபலன் முழுவதையும் இழந்து விட்டார் கௌசிகர்.மீண்டும் தவ பலன்களை பெறுவதற்காக யாகம் செய்ய நினைத்தார் அவர் யாகம் செய்ய தேர்வு செய்த இடம் விஜயாபதி என்ற ஊராகும்.. விஜயாபதி கடற்கரைக்கு அருகில் லிங்கத் திருமேனியாக இறைவனையும் இறைவியையும் உருவாக்கி கோபம் கொண்ட வளர்த்தார் அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கியை தொல்லை கொடுத்தால் அவரை அழிக்க ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரர் அழைத்து வந்தார…ராம லட்சுமணர்கள் தாடகையை அழித்தனர்…யாகம் சிறப்பாக நடைபெற துணை புரிந்தனர்
யாகத்தின் முடிவில் இறைவனும் இறைவியும் தோன்றி இழந்த சக்திகளை பெற்று விட்டாய் காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிஷ்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த வட்டமான பிரம்மரிஷி பட்டத்தை பெறுவாயாக அவரே உனக்கு குருவானவர் நீ தவம் புரிந்த இந்த இடத்திற்கு வந்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அருளினார் விசுவாமித்திரரும் காசிக்குச் சென்று வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டத்தை பெற்றார்
விஜயம் என்றால் வெற்றி என்று பொருள் பதி என்றால் இடம் என்று பொருள் ஆக விஜயாபதி என்பது வெற்றியின் இடம் என்ற பொருள்..இந்தியாவிலேயே விஸ்வாமித்திரருக்கு என்று உள்ள தனி கோவில்.. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி என்ற ஒரு தலமாகும்… இந்த திருக்கோயில் ராதாபுரத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது…
.விஸ்வாமித்திர மகரிஷி கையில் கடற்கரையை நோக்கி கையில் கமண்டலத்துடன் ருத்ராட்ச மாலையுடன் இந்த கோவிலில் காட்சி அளிக்கின்றார் இறைவனின் பெயர் விசுவாமித்திரர் மகாலிங்கசுவாமி இறைவியின் பெயர் அகிலாண்டேஸ்வரி

இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னதிகளில் காட்சி அளிக்கின்றனர் கோவிலின் தலவிருட்சம் வில்வமரம்..
விசுவாமித்திரரின் ஜென்ம நட்சத்திரம் விசாகம் ஒவ்வொரு மாதமும் அனுஷம் உத்திரட்டாதி விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும் பௌர்ணமி தினத்தன்றும் விஸ்வாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை செய்யப்படுகிறது இதில் கலந்து கொள்பவர்களுக்கு பித்ருக்களின் சாபம் நீங்குவதாக சொல்லப்படுகிறது கடலில் நீராடி ஈர உடையுடன் கோபம்கொண்ட கணபதிக்கு சிதறு தேங்காய் உடைத்து விசுவாமித்திரருக்கு சிவப்பு வெள்ளை வஸ்திரம் சாத்திஅவருக்கு உகந்த ரோஜாப்பூ மாலை அணிவித்து 11 நெய் தீபம் ஏற்றி அவரது சமாதியை மூன்று முறை வலம் வந்து அவரை தரிசனம் செய்து விட்டு சென்றால் சில நாட்களிலேயே முன்னேற்றம் தருவதாக கூறுகின்றனர் பலன் பெற்றவர்கள்..
அடுத்த பதிவில் மற்ற ரிஷிகளைப் பற்றிப் பார்ப்போம்
மீண்டும் சந்திப்போம்