
“பிரதமம் சைல புத்ரிச்ச
த்விதியம் பிரம்மச்சாரினிம்
திருதியம் சந்திரகண்டாச்ச
கூஷ்மாண்டா சதுர்த்தமம்
பஞ்சமம் ஸகந்தமாத்ரேணி
ஷஷ்டமம் காத்யாயனீம்
ஸப்தமம் காலராற்றிச்ச
அஷ்டமம் கௌரிநிம் நவமம்
சித்திதாத்ரீச நவ துர்கா பிரதிடதம்”
நவதுர்க்கை என்பது, துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் குறிக்கும்.. அவை, சைலபுத்ரி, பிரம்மசாரிணி,சந்திரகாண்டா,கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்திரி,மகாகௌரி, சித்திதாத்ரி என்பனவாகும்.. இந்த ஒன்பது வடிவங்களுக்கும், வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வார்கள்..இந்த ஒன்பது நாட்களும், அன்னையை முறையாக பூஜை செய்தால்,அவள் அனைத்து நலன்களையும் அள்ளி தருவாள் என்பது ஐதீகம்..
சைலபுத்ரி

ஒன்பது வடிவங்களில் ,அன்னையின் முதல் வடிவம், சைலபுத்ரி ஆகும்.. இவளை, நவராத்திரியின் முதல் நாளில் வழிபடுகின்றனர்.. “சைலபுத்ரி” என்றால் மலை மகள் என்று பொருள்படும்.. மலையரசன் ஹிமவான் மகளாக இருப்பதாலும் அன்னைக்கு இவ்வாறு ஒரு பெயருண்டு.. சதி ,பார்வதி, பவானி என்று இவளுக்கு பெயர்கள் உண்டு.. இது தவிர ஹிமவானின் மகளாக இருப்பதால் ஹேமாவதி என்ற பெயரும் உண்டு.. இவளின் முன் அவதாரத்தில் ,தக்ஷனின் மகளாகப் பிறந்ததால் தாட்சாயணி என்றும் கூறுவார்கள்.. இவளே பார்வதியாகப் பிறந்து,சிவபெருமானை திருமணம் செய்து கொண்டாள்..
இவள் 9 சக்கரங்களில் முதல் சக்கரம், மூலாதாரம் ஆக இருக்கிறாள்.. யோகிகள், தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்குவர்.. அதனால் ,இவளே முதல் சக்தியாக போற்றப்படுகிறாள்.. இவளின் வாகனம் நந்தி எனப்படுகின்ற காளை ஆகும்… இவளின் ஆயுதம் சூலம் ஆகும்..
இவளுக்கான தியான மந்திரம்:
“வந்தே வாஞ்சித் லாபாய சந்திர கிருத சேகரம்
விருஷபாரூடம் சூலதாரிநீம் ஷைல புத்ரீம் யஷஸ்விநீம்”
“ரிஷபத்தின் மேல் ஏறி வருபவளும், சூலத்தை ஆயுதமாக கொண்டவளும், மூன்றாம் பிறையை தன்னுடைய கிரீடமாகக் கொண்டவளும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரும் யஷஸ்வின்யாம் ஷைலபுத்ரி தேவியை வணங்குகிறேன்” என்பது இதன் பொருள்..
சைலபுத்ரி கோவில் இருக்கும் இடம் மர்கின காட், உத்தரப் பிரதேசம்..
பிரம்மசாரிணி

நவராத்திரியின் இரண்டாம் நாளில், அன்னை பிரம்மச்சாரிணியாக வழிபடப்படுகிறாள்.. பிரம்ம என்றால் “தபஸ்” என்று பொருள்.. பிரம்மச்சாரிணி என்றால் தபசாரிணி என பொருள்படும்.. இவள் மிகவும் எளிமையாக காட்சி தருபவள்.. இவளின் வலக்கரத்தில் கமண்டலம் காணப்படும்.. அன்னைக்கு வாகனங்கள் ஏதும் இல்லை.. பூமியில் நடப்பவளாகவே காட்சி தருகின்றார்..
இவள், இமய மலையில் பிறந்தாள் எனக்கு கூறுவர்.. சிவபெருமானை திருமணம் செய்யும் பொருட்டு ,பல ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தாள்.. இவளின் தவ உக்கிரம் மூன்று உலகங்களிலும் எதிரொலித்தது.. இறுதியில், சிவன் இவளை மணம் புரிந்துகொண்டார்..
பிரம்மச்சாரிணி நன்றி, அறிவு, ஞானம் ஆகிய வற்றின் வடிவமான தன்னை வணங்குவோர்க்கு,மிகுந்த பொறுமையை தர வல்லவள்..பக்தர்களின் துன்பமான நேரத்திலும், மனம் தளராது இருக்க அருள்பவள்.. இவளது அருள் ,சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லது..
உடல் சக்கரங்களில்ஃ இவள் சுவாதிட்டானத்தில் இருப்பவள்.. இரண்டாம் நாள் யோகிகள் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவர்..
இவளுக்கான மந்திரம்:
“ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்
தேவி பிரசிதட்டு படி பிரம்மசாரின நுத்தன”
“கமண்டலமும், தண்டமும் தன் தாமரை கரத்தில் ஏந்தியவளும், பிரம்ம ஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மசாரிணி எனக்கு அருள வேண்டும்” என்பது இதன் பொருள்..
இவளுக்கான கோயில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அம்மன்..அங்கே தேவி பிரம்மச்சாரிணியாக அருள் புரிகின்றாள்.
சந்திரகாண்டா

நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில், துர்க்கையை சந்திரகாண்டா என ஆராதனை செய்கின்றனர்.. இதுவே அன்னையின் மூன்றாம் வடிவமாகும்.. இவள் நீதியை நிலைநாட்டி, சந்திர பிறையை அணிந்தவள்.. சந்திர என்றால் “நிலவு”.” காண்டா” என்றால்” மணி” எனப் பொருள்.. சந்திரப்பிறை இவள் நெற்றியில், மணி போல் இருப்பதால் இவளை சந்திரகாண்டா என அழைக்கின்றனர்..
இவளின் தோற்றம் ,மூன்று கண்கள் கொண்டு, பத்து கரங்களுடன் காட்சி தருபவள்.. இவளின் வாகனம் சிங்கம் ஆகும்..இவளின் இரு கரங்கள் பக்தருக்கு அருள் செய்யும் விதமாக உள்ளன ..இவளின் பார்வை, பக்தர்களின் துன்பத்தைப் போக்கி இன்பம் தரவல்லது.. சந்திரகாண்டா தேவி போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருபவள்.. அதனால் பக்தரின் துன்பத்தைப் போக்கி இன்பம் தர வல்லவள்..
இவள் உடல் சக்கரங்களில் “மணிபூர” சக்கரத்தில் இருப்பவள்.. நவராத்திரியின் மூன்றாம் நாள் யோக சாதனை செய்பவர்,மணிபூர சக்கரத்தை தேவியின் அருளோடு அடைவர்.. இதை அடைந்தவர்கள் தெய்வீக சப்தத்தை கேட்பார்..மணிபூர சக்கரத்தில் அவர்கள் சிறிது கவனமாக இருப்பார் ..அதனால் சந்திரகாண்டா தேவியின் அருள் அவசியமாகும்..
அன்னையின் வாகனமாம் சிங்கத்தைப் போல், இவரை வழிபடுபவர்கள் வீரம் பெறுவார்கள்.. இவளின் அருள் கிட்டினால் பாவம் அழியும் ..இவள் கரத்தில் உள்ள மணியின் ஓசை, பக்தரை இரட்சிக்கும்.. இவள் சர்வ சுபிட்சத்தையும் தந்து அருள் செய்வாள் என நம்புகின்றனர்..
இவளுக்கான தியான மந்திரம்:
” ப்ரிடிஞ்சபர வரூதா சந்திரகோபாஸ்த கரியுதா
பிரசாதம் தந்துனே மகாயும் சந்திரகண்டேதி விஸ்ருதா”
” சிம்மத்தின் மீது ஏறி வருபவளும் சந்திரகாண்டா என்னும் பெயர் கொண்டவளும் கடும் கோபமும் ஆக்ரோஷமும் கொண்டவளுமாகிய தேவி சந்திரகாண்டா என்மீது கருணை பொழிய வேண்டும்” என்பது இதன் பொருள்..
இவளின் கோயில் இருக்கும் இடம்: சித்ரகந்த குல்லி, வாரணாசி, உத்தர பிரதேசம்…
இனி அடுத்த பதிவில் கூஷ்மாண்டா ஸ்கந்தமாதா மற்றும் காத்யாயனி பற்றி பார்க்கலாம்
மீண்டும் நாளை சந்திப்போம்…