இந்து மதம் இணையில்லா இனிய மதம் (பதிவு அத்தியாயம் 12)

சென்ற பதிவில், வைணவ மற்றும் சைவ சமயத்தைச் சார்ந்த முப்பெரும் ஆசிரியர்களான ஸ்ரீ ஆதி சங்கரர், பகவத் ராமானுஜர் மற்றும் மத்வாச்சாரியார் பிரசாரம் செய்த கோட்பாடுகள் ஆகியவை துவைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகும்..அவை பற்றி சில விவரங்களை இந்த பதிவில் தெரிவிப்பதாக தெரிவித்திருந்தேன்.. அவை என்ன என்று இப்போது பார்ப்போம்..

ஸ்ரீமத்வாசாரியார் அருளிய “துவைதம்” என்னும் கோட்பாடு, ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறு என சொல்லப்படுவது..  இதன்படி, நமக்கு முன்னும், நமக்கு பின்னும் இறைவன் இருப்பதால், இறைவன் வேறு, நாம் வேறு என எண்ணி, இறைவனையும் நம்மையும் இரண்டாக பார்ப்பது துவைதம் ஆகும்..

அடுத்து, நாம் காண இருப்பது, “விசிஷ்டாத்வைதம்”.. இது காலத்தால் பழைமை வாய்ந்தது.. ஸ்ரீ ராமானுஜர், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றிற்கு விசிஷ்டாத்வைத கொள்கைப்படி உரை எழுதினார்.. சிறப்பு நிலையான அத்வைதம் என்று இதற்கு பொருள்.. அதாவது இரண்டு அல்லாத கொள்கை என்பது இதன் பொருள்.. “விசிஷ்டம்” என்றால் சிறப்பு..இதன்படி துவைதம், அத்வைதம் ஆகிய இரண்டு கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்வது “விசிஷ்டாத்வைதம்” ஆகும்

“அத்வைதம்”என்றால் இரண்டற்ற நிலை.. இது இந்து தத்துவத்தின் இறைவனின் தன்னைப் பற்றிய ஒரு கொள்கை.. ஜீவன் என்பது ஜீவாத்மா ; பிரம்மம் என்பது பரமாத்மா; இவை இரண்டும் ஒன்றேதான், வேறு அல்ல என்றும், சகல உயிரினங்களுக்கும் பொதுவான ஆத்மாவை வழங்குகிறது என்றும் இந்த தத்துவம் கூறுகிறது.. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்வைதம்.. அதாவது துவைதம் அற்ற நிலை.. இரண்டற்ற ஒருமை நிலை..

மேலே சொன்ன மூன்று தத்துவங்களும், இந்து சமயக் கோட்பாடுகள் அவற்றை அந்த சமயாச்சாரியர்கள் கருத்தின்படி உரை எழுதியுள்ளார்கள்.

மேலே சொன்ன மூன்று தத்துவங்களையும், சுலபமாகப் புரிந்துகொள்ளும் வண்ணம், “வேதாத்திரி மகரிஷி” ஒரு எளிமையான விளக்கத்தை அளித்துள்ளார்..அவரது கருத்தின் படி:

“துவைதம்” என்பது நமக்கு முன் உணவு..

“விசிஷ்டாத்வைதம்”என்பது நமது வயிற்றுக்குள் உணவு..

“அத்வைதம்” என்பது உணவு நம் உடலில் சத்தாக மாறிய நிலை..

இந்த மூன்று விதமான தத்துவங்களைப் பற்றி விரிவாகவும் அவற்றினை ஏற்படுத்திய மகான்களைப் பற்றியும் பிரிதொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்..

இந்து அண்டவியலின்படி, திருப்பாற்கடல், வைகுண்டம், கைலாயம், பிரம்மலோகம், இரண்யகர்பன் சொர்க்கம் நரகம் பித்ருலோகம் ஆகியவை உள்ளன..இவற்றில் இரண்யகர்பன் என்பது வேதாந்த சாஸ்திர நூல்களில் சூட்சும நிலையில் உள்ள படைப்பிற்கு உட்பட்ட உலகம் அதாவது பிரபஞ்சத்தை தன்னுடைய கர்ப்பத்தில் வைத்துக்கொண்டிருக்கும் படைப்புத் தொழிலைச் செய்யும் பிரஜாபதி நான்முகன் என்பவரை இரண்யகர்பன் ஆவார்..

அடுத்து, நாம் புராண இதிகாச மனிதர்கள் பற்றி பார்ப்போம்..

சனகாதி முனிவர்கள்

இவர்கள் பிரம்ம குமாரர்கள் எனப்படுவார்.. இவர்களை பிரம்மா, புவியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு, நான்கு ஆண் குழந்தைகளாக படைத்தார்.. ஆனால், இவர்கள் தங்களைப் படைத்த பிரம்மாவின் விருப்பத்தை மீறி, இல்லற வாழ்வில் புகாமல், பிரம்மச்சரிய ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டு, இந்த அண்டம் முழுவதும் சுற்றி ஆன்மீகத்தை பரப்பி வந்தனர் என்று சமய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் தெரிவிக்கின்றன.. இவர்கள் “சனகர், சனாநந்தர், சனத்குமாரர், சனத்சுஜாதியர்” என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்..

பிரஜாபதிகள்

“பிரஜாபதி” என்பவர் பிரம்மாவால் படைப்புகளில் உதவி செய்வதற்காக படைக்கப்பட்ட “காசியபர், வசிஷ்டர், மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலகர், தட்சன் மற்றும் கிரது ரிஷிகள்” ஆவர்.. இவர்கள் பிரம்மாவின் மானச புத்திரர்கள் ஆகவும் கருதப்படுகின்றனர்..

சப்தரிஷிகள்

இவர்கள் பிரம்மாவின் நேரடி வழித்தோன்றல்கள் ஆவர்.. உலகம் தோன்றிய காலத்திலிருந்து, உயிரினங்களை தோற்றுவிக்க படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கு, உதவி புரிந்தவர்கள் இந்து சமயத்தில் “சப்தரிஷி” எனப்படுவோர்.. “அத்திரி, பாரத்வாஜர், ஜமதக்னி, கௌதமர், காஸ்யபர், வசிஷ்டர் மற்றும் விசுவாமித்திரர் ஆவர்.. இவர்கள் நான்கு வேதங்களையும், இலக்கியங்களையும் தமது தவ வலிமையால் கற்றறிந்தவர்கள்..

இனி சப்தரிஷிகள் பற்றிய சிறு குறிப்புகளை பார்ப்போம்..

வசிஷ்டர்

இவர் வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மா முனிவர்களில் ஒருவர்.. வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார்.. இவர் பேரைக் கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் ஏழாம் மண்டலத்தில் உள்ளது.. ரிக்வேதத்தில், பத்து அரசர்களின் மாபெரும் போர் எனும் நிகழ்ச்சியில் இவரின் குடும்பத்தாரும், இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது.. மாந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரை புகழும் ஒரே ஸ்லோகம் இதுவே என்பர்..வரது மனைவியின் பெயர் அருந்ததி தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி ஆகியவற்றை இவரே பராமரித்து வந்தார்.. இவரது பெயர், ராமாயணம்,மகாபாரதம் ஆகிய காவியங்களும் பல புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது..

பிருகு

“மஹரிஷி பிருகு” பிரம்மனால் படைக்கப்பட்ட பிரஜாபதியில் ஒருவர்.. இவரும் பிரம்மாவின் மானஸ புத்திரராகிய கருதப்படுகிறார்..ஏறக்குறைய கிமு 3000 ஆண்டுக்கு முன்னர் இவர் எழுதிய” பிருகு சம்ஹிதா”என்னும் நூலை, ஜோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாக கருதப்படுகிறது.. இவரது துணைவியார் பெயர் “கியாதி” ஆகும்.. இவர் தக்ஷனின் மகள் ஆவார்.. இவர்களுக்கு” ததா, விததா, சுக்கிரன், சியவனர் என்ற மகன்களும் ஸ்ரீ” என்ற மகளும் உண்டு..

அத்திரி

இவர் பிரம்மனின் மகன் என்றும் அவர்களில் ஒருவர் என்றும் கூறப்படுவார்.. இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் “தத்தாத்திரேயர், சந்திரன் மற்றும் அவரது மகன்கள், ரிக் வேதத்தில் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.. இவரது மனைவி “அனுசுயா தேவி” ஆவார்..

மற்ற ரிஷிகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

மீண்டும் சந்திப்போம்….

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: