
சனியுடன் சம்பந்தப்பட்ட விக்ரமாதித்யாவின் கதை, பரவலாக கர்னாடகா மாநிலத்தில் யக்ஷகானாவில் கூறப்படுகிறது. கதையில் கூறப்படுவதுபடி, விக்ரமா நவராத்திரியை வெகு விமரிசையாகக் கொண்டாடும்போது, ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்துடன் வாக்குவாதம் புரிந்தார். கடைசி நாள் சனிக்குடையதாயிற்று. பிராமணர், பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதில் சனியின் பங்கு, அவரது சக்தி ஆகியவைகளைக் கொண்ட சனியின் சிறப்பியல்புகளை விளக்கினார். விக்ரமாதித்தன் ஜாதகப்படி, சனி 12 ஆம் இடத்திற்கு வருவதால் அவருக்கு கஷ்டகாலமாக அமையும் என்பதயும் விழாவில் பிராமணர் கூறினார். இருப்பினும் விக்ரமாதித்தன் திருப்தியடையவில்லை; அவரது தந்தை (சூரியன்), குரு (பிரஹஸ்பதி) ஆகியோருக்கு கஷ்டத்தைக் கொடுத்த சனி ஒரு பிரச்சினையை உருவாக்கும் சாதாரண கிரகம் என்றே அவர் கருதினார். ஆகையால் விக்ரமாதித்தன், சனி வணங்குதற்குறியவர் என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை என்றார். விக்ரமாதித்தன் தன் சக்தியை எண்ணி, குறிப்பாக ஸ்ரீதேவியின் அருளினை முழுமையாகப் பெற்றிருப்பதையெண்ணி, மிகவும் பெருமை பட்டுக்கொண்டார். அவர் நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தவர்கள் முன்னால் சனியை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், சனி கோபமுற்றார். விக்ரமாதித்தன் அவரை வணங்கும்படி செய்யப்போவதாக அவர் (சனி) விக்ரமாவிடம் சவால்விட்டார். சனி வானில் மறைந்தபோது, அது ஒரு குருட்டு அதிர்ஷ்டமானது என்றும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள அவரிடம் வல்லமை இருப்பதாகவும் விக்ரமாதித்தன் கூறினார். பிராமணர் அவரது ஜாதகத்தைப்பற்றிக் கூறியது ஒருவேளை உண்மையாக இருக்கலாம் என விக்ரமாதித்தன் முடிவுக்கு வந்தாலும் சனியின் சிறப்பினை ஏற்றுக்கொள்ள அவர் மறுக்கிறார். “என்ன நடக்கவேண்டுமோ அது நடந்தேதீரும், எது நடைபெறுவதற்கு இல்லையோ அது நடக்கவே நடக்காது” என்று விக்ரமா கூறுவதுடன் சனியின் சவாலையும் அவர் ஏற்கிறார்.
ஒரு நாள் குதிரை வியாபாரி ஒருவன் அவருடைய அரசவைக்கு வந்து, விக்ரமாதித்தன் அரசவையில் அவனுடைய குதிரையை வாங்க ஒருவரும் இல்லை என்று கூறினான். அக்குதிரை சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்பட்டது – ஒரு அடிக்கு அது பறக்கும், இரண்டாவதற்கு அது பூமியில் இருக்கும். இவ்வாறு ஒருவர் பறக்கலாம் அல்லது பூமியில் சவாரி செய்யலாம். விக்ரமாதித்தனால் நம்பமுடியவில்லை, எனவே குதிரைக்கானப் பணத்தைக் கொடுப்பதற்குமுன் அதைப் பரிசோதிக்கவேண்டும் என்று அவர் கூறி, குதிரைமேல் உட்கார்ந்து குதிரையை அடிக்கிறார். வியாபாரி கூறியதுபோல், குதிரை அவரை வானத்திற்குக் கொண்டுசென்றது. இரண்டாவது அடிக்கு, அது பூமிக்கு வந்திருக்கவேண்டும், ஆனால் அது வரவில்லை. மாறாக, அது விக்ரமாதித்தனை நெடுந்தொலைவுக்குக் கொண்டுசென்று ஒரு காட்டில் வீசியெறிந்தது.
விக்ரமாதித்தன் காயமடைந்து, அவரிடத்திற்குத் திரும்பிவர முயற்சிக்கிறார். இவையெல்லாம் விதியைத்தவிர வேறொன்றிமில்லை என்று அவர் சொல்கிறார்; குதிரை வியாபாரி வடிவில் வந்தது சனி என்பதைக் கண்டுகொள்ள அவர் தவறிவிடுகிறார். காட்டில் அவர் வழி காண முயற்சிக்கும்போது, கொள்ளையர் கூட்டம் ஒன்றால் அவர் தாக்கப்பட்டு, அவருடைய எல்லா ஆபரணங்களையும் இழக்கின்றார். விக்ரமாதித்தன் இன்னமும் அந்நிலை குறித்து கவலைப்படாமல் கொள்ளையர்கள் அவருடைய கிரீடத்தைதான் எடுத்துச் செல்ல முடிந்தது, அவருடைய தலையை அல்ல என்று கூறுகிறார்.
அவர் கீழ்நோக்கி நடந்துவந்து அருகில் உள்ள ஆற்றில் உள்ள நீரைப் பருக வருகிறார். வழவழப்பான நிலம் அவரை தண்ணீருக்குள் தள்ளி, தண்ணீரின் வேகம் அவரை நெடுந்தொலைவுக்கு இழுத்துச்சென்றது. எப்படியோ சமாளித்து நிதானமாக விக்ரமாதித்தன் ஒரு நகரத்தை அடைந்து பசியோடு ஒரு மரத்தடியில் உட்காருகிறார். விக்ரமாதித்தன் உட்கார்ந்திருந்த மரத்திற்கு எதிரில், பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கடைக்காரர் தன் கடையை வைத்திருந்தார். விக்ரமாதித்தன் அம்மரத்தடியில் உட்கார்ந்த நாள் முதல், கடயில் வியாபாரம் குறிப்பிடும்படி உயர்ந்தது. இந்நபர் வெளியில் அமர்ந்திருப்பதே அதிக பணம் வரக்காரணம் என்று கடைக்காரரின் பேராசை அவரை நினைக்கவைத்தது, விக்ரமாவை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளிக்க அவர் தீர்மானித்தார். நீண்ட கால வியாபார விருத்தியை எதிர்நோக்கி, அவர் தன் மகளை விக்ரமாதித்தனை மணந்துகொள்ளும்படி கூறுகிறார். உணவு உண்டபின், விக்ரமா அறையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது, அவரது மகள் அறைக்குள் வந்து விக்ரமா எழுந்திருக்கும்வரை படுக்கைக்குப் பக்கத்தில் காத்திருக்கிறாள். அவளுக்கு மெல்ல தூக்கம் வருகிறது. அவளுடைய ஆபரணங்களை எடுத்து வண்ண வாத்து வரையப்பட்ட ஆணியில் தொங்கவிடுகிறாள். அவள் ஆழ்ந்து தூங்கிவிடுகிறாள். விக்ரமா எழுந்திருக்கும்போது, வண்ணவரைவில் உள்ள வாத்து ஆபரணங்களை விழுங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவர் பார்த்ததை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்போது, கடைக்காரரின் மகள் விழித்தெழுந்து ஆபரணங்கள் காணாமல் போயிருப்பதைப் பார்க்கிறாள். அவள் அவளது தந்தையை அழைத்து அவன் ஒரு திருடன் எனக்கூறுகிறார்.
அப்பிராந்திய அரசரிடம் விக்ரமாதித்தன் அழைத்துச்செல்லப்படுகிறார். விக்ரமாவின் கால்களையும் கைகளையும் வெட்டி அவரை பாலைவனத்தில் விட்டுவிட அரசர் தீர்மானிக்கிறார். பாலைவனத்தில் இரத்த காயத்துடன் நகர்வதற்கு போராடிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் அவளுடைய தந்தையின் வீடு உள்ள உஜ்ஜெயினிலிருந்து அவளுடைய கணவன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழியில் விக்ரமாதித்தனைப் பார்த்து அவரை அடையாளம் கண்டுகொள்கிறாள். அவருடைய சூழ்நிலையைப் பற்றி கேட்டறிந்து, குதிரைச் சவாரிக்குப்பின் அவர் காணாமல் போனது பற்றி மக்கள் துயருற்றுள்ளனர் என்று கூறுகிறாள். அவளுடைய கணவனின் உடன்பிறந்தாரிடம் அவளது வீட்டில் அவரைத் தங்கவைக்க வேண்டுகிறாள், அவர்கள் அவரைத் தங்கவைத்துக்கொள்கின்றனர். அவளுடைய குடும்பம் வேலைசெய்து பிழைக்கவேண்டிய பிரிவைச் சேர்ந்தது; விக்ரமாதித்தன் ஏதேனும் வேலை கொடுக்கும்படி கேட்கிறார். மாடுகள் சுற்றித்திரிந்து தானியங்களைப் பிரித்தெடுக்கும் வகையில், அவர் நிலத்தில் உட்கார்ந்து கூச்சலிடுவதாகக் கூறுகிறார். மற்றவரின் விருந்தாளியாக எப்போதும் வாழ அவர் தயாராக இல்லை.
ஒரு மாலைவேளை விக்ரமாதித்தன் வேலை செய்துகொண்டிருந்தபோது, காற்றடித்து விளக்கு அணைந்துவிடுகிறது. அவர் தீபக ராகத்தைப் பாடி விளக்கேற்றுகிறார். இது நகரத்தின் எல்லா விளக்குகளையும் ஏற்றியது – நகரத்தின் இளவரசி தீபக ராகத்தினைப் பாடி யார் விளக்கேற்றுகிறாரோ அவரைத் திருமணம் செய்துகொள்வதாக சபதம் செய்திருந்தார். அந்த இசை இந்த ஊனமுற்றவரிடமிருந்து வந்தது கண்டு ஆச்சரியப்பட்டாள், ஆனால் அவரைத் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தாள். முன்பு நடந்த திருட்டுக் குற்றச்சாட்டினை ஞாபகப்படுத்திக்கொண்டு, இப்போது தன் சொந்த மகளை மணம் முடிக்க முயற்சிக்கிறார் என்று விக்ரமாவப் பார்த்ததும் அரசர் கோபமடைகிறார். விக்ரமாவின் தலையை துண்டிப்பதற்கு அவர் தன் உடைவாளை எடுக்கிறார். அந்நேரத்தில், விக்ரமா இவையெல்லாம் சனியின் சக்தியால் நிகழ்கின்றன என்பதை உணர்கிறார். அவர் இறக்கப்போகும் நேரத்தில், அவர் சனியை பிரார்த்திக்கின்றார். அவருடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, அவரின் நிலையைப் பற்றி மிகவும் பெருமையடந்ததையும் அவர் ஒப்புக்கொள்கிறார். சனி தோன்றி அவருடைய ஆபரணங்கள், கால்கள், கைகள் மற்றும் எல்லவற்றையும் அவருக்குத் திருப்பியளிக்கிறார். அவர் அனுபவித்தது போன்ற துன்பத்தினை சாதாரண மக்களுக்குக் கொடுக்கவேண்டாம் என்று விக்ரமா சனியை வேண்டுகிறார். அவர்போன்ற வலுவானவர் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் சாதாரண மக்களால் முடியாது என்று அவர் கூறுகிறார். அதை ஏற்றுக்கொண்டு, சனி அவ்வாறு செய்யப்போவதில்லை என்று கூறுகிறார். அடையாளங்கண்டு, அரசர் அவருடைய பேரரசரிடம் சரணடைந்து தன் மகளையும் அவருக்கு மணமுடிக்க ஒப்புக்கொள்கிறார். அதே சமையம், கடைக்காரர் அரண்மனைக்கு ஓடிவந்து வாத்து தன் வாயிலிருந்து ஆபரணத்தினை வெளிவிட்டது என்று கூறுகிறார். அவரும் தன் மகளை பேரரசருக்கு கொடுக்கிறார்.
விக்ரமாதித்தன் உஜ்ஜெயினிக்கு திரும்பிவந்து, சனியின் அருளோடு பேரரசராக வாழ்கிறார்.