ப்ரஹ்லாதன் கதை

“சாரி!குழந்தைகளே! கொஞ்சம் லேட்டாயிடுச்சு..எல்லாரும் வந்துட்டீங்க போல இருக்கு!! வெரி குட்!அவங்க இடத்துல உட்கார்ந்து இருக்கீங்களா? வாசல்ல செக்யூரிட்டி அங்கிள் சானிடசர் கொடுத்தாரா? கையை தொடச்சுகிட்டீங்களா?”
“எல்லாரும் மாஸ்க் போட்டு இருக்கீங்களா? அங்க யாரு கடைசி ரோவில் ரெண்டு பேரு, மாஸ்க் போடாம இருக்கறாங்க? வீட்டுக்கு போயி போட்டுகிட்டு வாங்க..”
“இல்ல தாத்தா! கையில இருக்குது”
“அப்புறம் ஏன் போடல? போடுங்க…”
“இல்ல தாத்தா! போட்டா உறுத்தர மாதிரி இருக்குது.. அதனாலதான் போடல”
“நோ..நோ!அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.? மாஸ்க் போடணும்… அப்பத்தான் நமக்கு நோய் எதுவும் வராது.. ஓகே சரி சரி போடுங்க”
“போட்டுகிட்டோம் தாத்தா”
“வெரி குட்.. இப்ப கதைக்கு போலாமா? ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான்.. அவன் பேரு இரணியகசிபு.. அவன் ரொம்ப மோசமானவன்.. நிறைய தவம் பண்ணி, வரம் எல்லாம் வாங்கினான்.. ஆனால், வாங்கிய வரத்தை, மிஸ் யூஸ் பண்ணான்.. எப்படி ?”தான் தான் கடவுள்.. எல்லோரும் தன்னைத் தான் கடவுளா கும்பிடணும்..”அப்படின்னு சட்டம் போட்டான்..எல்லோரும் அவனுக்கு பயந்து,அதே மாதிரி செஞ்சுகிட்டு இருந்தாங்க.. அவனுக்கு எந்த கடவுளையும் பிடிக்காது.. முக்கியமா, பெருமாள் ஹரிய பிடிக்காது..”
“அவனுக்கு ஒரு பையன்.. பேரு பிரகலாதன்.. அந்த பையன் எப்பவும் “ஹரி” பெயரையே சொல்லிட்டு இருந்தான்.. அவனுக்கு பெருமாள்னா ரொம்ப பிடிக்கும்.. பிரகலாதனை, இரணியகசிபு,ஸ்கூல்ல சேர்த்து விட்டான்.. அங்கு அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, அப்படியே “உங்க அப்பா இரணியகசிபு தான் கடவுள்.. அவர் பெயர்தான் நீ எப்பவும் சொல்லணும், அவரத் தான் நீ கடவுளா கும்பிடணும்” அப்படின்னு சொல்லி கொடுத்தாங்க.. ஆனால், பிரகலாதன் அத கேக்கல.. அவன் எப்பவும் “ஓம் ஹரி! ஓம் ஹரி!” அப்படின்னு சொல்லிட்டு இருந்தான்.. அவன் டீச்சர்ஸ் எல்லாம்,ஹிரண்யகசிபுகிட்ட வந்து, கம்ப்ளைன்ட் பண்ணாங்க..உடனே இரணியகசிபு கோபப்பட்டு, பிரகலாதனை கூப்பிட்டு, “டீச்சர்ஸ்ஸ் சொல்வதெல்லாம் உண்மையா?” அப்படின்னு கேட்டான்..அதுக்கு அவன் “ஆமாம், ஹரி தான் கடவுள் ..” அப்படின்னு சொன்னான்..”இரணியகசிபுவுக்கு ரொம்ப கோபம் வந்தது.. பிரகலாதனை திட்டி பார்த்தான்.. அடித்து பார்த்தான்.. ஆனால் அவன் கேட்கல.. திரும்பத் திரும்ப “ஓம் ஹரி! ஓம் ஹரி!” அப்படின்னு சொல்லிட்டு இருந்தானா..இரணியகசிபு பிரகலாதனுக்கு தண்டனை கொடுத்தான்.. என்ன தண்டனை தெரியுமா? அவனை ஒரு கல்லில் கட்டி, கடலில் போட சொல்லிட்டான்,..அதே மாதிரி காவலாளிகளும் செஞ்சாங்க ஆனால்,கடல் மேலே, அந்த கல்லு மிதந்து கரைக்கு வந்தது.. பிரகலாதன் திரும்ப அரண்மனைக்கு வந்துட்டான்.. இரண்யகசிபு மேலும் கோபம் வந்தது..இந்த முறை, திரும்ப தன்னைக் கடவுள் என்று கூப்பிட சொல்லி சொல்லி பார்த்தான் . ஆனால் பிரகலாதன் கேட்கல திரும்பத் திரும்ப “ஓம் ஹரி!ஓம் ஹரி!” அப்படின்னுதான் சொல்லிட்டு இருந்தான்..இந்த முறை பிரகலாதனை ஒரு இடத்தில் படுக்க வைத்து, யானையை விட்டு மிதிக்க சொன்னான்.. இந்த முறையும் யானை அவனை மிதிக்கல…”
“இரண்யகசிபு, பிரகலாதனை கூப்பிட்டு,” எங்கே உன் ஹரி? என்னிடத்தில் காட்டு.. நான் அவனை கொன்று போடறேன்..” அப்படின்னு கேட்டான்..
அதற்கு பிரகலாதன் “என்னுடைய ஹரி!எல்லா இடத்திலும் இருப்பார்” அப்படீன்னு சொன்னான்..
“அப்ப, எனக்கு காட்டு.. இந்த தூணில் இருப்பானா?” அப்படின்னு இரணியகசிபு கேட்டான்..
அதற்கு பிரகலாதன் “என்னுடைய ‘ஹரி’ தூணிலும் இருப்பார்.. துரும்பிலும் இருப்பார்” அப்படின்னு சொன்னான்.. துரும்புன்னு சொன்னா.. என்ன தெரியுமா? சின்ன பார்ட்டிகிள்..
உடனே இரணியகசிபு, தன்னுடைய கதாயுதத்தால் ஒவ்வொரு தூணையும் அடிச்சு “இந்த தூணில் இருப்பானா? இந்த தூணில் இருப்பானா?” அப்படின்னு கேட்டான்.. அப்படின்னு சொல்லி,ஒரு ஒரு தூணா கதாயுதத்தால் அடிக்கும்போது, ஒரு தூண் அப்படியே உடைந்து, அது உள்ளே இருந்து பெருமாள் வெளியே வந்தார்.. எப்படி வந்தார் தெரியுமா?

நரசிங்கமா!அதாவது உடம்பு முழுக்க மனிதனாகவும், தலை சிங்கமாகவும் வந்தார்.. வந்து, இரண்யகசிபுவை கொன்றார்… அரக்கனான ஹிரண்யகசிபு செத்துப் போய்ட்டான்..அதுக்கு அப்புறம் பிரகலாதன் பெருமாளை சேவித்து கொண்டு வாழ்ந்து வந்தான்.._
“இந்த கதை மூலமா என்ன தெரிகிறது? நாம சின்ன குழந்தையா இருந்தாலும், அருள் தரும் பெருமாள் பேரில் நம்பிக்கை வைத்து, தினம் அவர கும்பிட்டு வந்தா,அவர் நமக்கு எல்லா நன்மையும் செய்வார்.. புரிஞ்சுதா?”

“இனிமே காலை, மாலை இரண்டு வேளையும், கைகால் எல்லாம் கழுவிக்கிட்டு, சாமி சன்னதி கிட்ட போய், கை கூப்பி, உங்களுக்கு தெரிஞ்ச சுலோகத்தை சொல்லுங்க.. செய்வீங்களா? ஓகே! இன்னிக்கு இந்த கதை இத்தோட முடிகிறது..”
“அடுத்த ஞாயிற்றுக்கிழமை பார்க்கலாம்! குட் நைட்”
“குட்நைட் தாத்தா!”.