செவிக்கு உணவு அளிக்கும் செம்மல்கள்(2)

நாராயணீயம்“என்பது ஸ்ரீ குருவாயூரப்பனின் ஞானப் பொக்கிஷம்.. அது, ஸ்ரீகுருவாயூரப்பனையே ஸ்ரீமத் பாகவதத்தின், பரம புருஷரான, ஸ்ரீ மஹாவிஷ்ணுவைக் கருதி செய்து இருப்பதால், இதனை ஒரு “மகாத்மியம்” என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.. இதனை படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், அவர்களிடையே இடையே  தாங்களே குருவாயூருக்கு செல்லுவது போன்று ஒரு  தோன்றி விட செய்யும்..

இந்த அருமையான ஸ்ரீநாராயணீயம் என்ற இலக்கியம் மேல் புத்தூர் நாராயண பட்டத்திரி என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது அவர் தனது பக்தியினால் சிலை உருவமாக நின்ற குருவாயூரப்பனை தலையை அசைக்கவும் பேசும்படியாகவும் செய்த மிகச்சிறந்த ஸ்தோத்திரங்களை ஸ்ரீநாராயணீயம் ஆகும்

பாகவதத்தில், உள்ள 14 ஆயிரம் பாடல்களை குறுக்கி, 1034 பாடல்களாக “ஸ்ரீ பட்டத்ரி” எழுதினார்.. இந்த நாராயணியத்தை கேட்கும் பாக்கியத்தை, நமக்கு உபன்யாசங்களின் மூலமாக அளித்த பெருமை “ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் “அவர்களையே சாரும்..தொலைக்காட்சி இல்லாத காலத்தில்,வானொலியின் மூலமாக, அவரது உபதேசங்களை கேட்கும் பாக்கியம் பலருக்கு இருந்துள்ளது.. அவர், குருவாயூரப்பனுடன் பட்டத்ரி எப்படி பேசுவாரோ, அதனை நமது கண்முன்னே நேரடியாக தெரியும் வண்ணம்  உபன்யாசம் செய்வார்..  “உபன்யாச சக்கரவர்த்தி “என்று போற்றப்பட்ட இவர், 1903 இல் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள “சேங்காலிபுரம்”என்ற கிராமத்தில் பிறந்தார்.. இவரது பெற்றோர், சுப்பிரமணிய தீட்சிதர் மற்றும் சுப்புலட்சுமி அம்மையார்.. இவரது ஆசிரியர் கடலங்குடி நடேச சாஸ்திரிகள்.. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஸ்கந்தம், தேவி பாகவதம் போன்ற இந்து சமய புராணங்களையும், இதிகாசங்களையும் சங்கீத உபன்யாசமாகக இவர் வழங்கினார்.. இவர், குருவாயூரப்பன் பக்தர் ஆவார்.. மக்களிடம், நாராயணியத்தை பரப்பிய பெரியோர்களில் குறிப்பிடத்தக்கவர்..

இவருக்கு “அமிர்தவர்ஷினி உபன்யாச சக்கரவர்த்தி” மற்றும் “வைதீக தரம் சம்ரக்ஷன ப்ரவசன தாத்ர உபன்யாசகா” என்ற பட்டங்கள் தரப்பட்டுள்ளன..

இவர் “ருத்ரம், சமகம்” மற்றும் “ஸ்கந்த புராணத்திற்கு”உரை எழுதியுள்ளார்.. இது தவிர, இவர் அரிய பல கிரந்தங்களில் இருந்தும், புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் இருந்தும், சக்தி வாய்ந்த ஸ்லோகங்களை தொகுத்து”ஜெய மங்கள ஸ்தோத்ரம் “என்னும் நூல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.. இவர் பிறந்த சேங்காலிபுரத்தில் அமைந்துள்ள, சிவபெருமானின் பெருமைகளை குறித்து,” ஸ்ரீ நிஸ்துலாம்பிகை சமேத சோளேஸ்வர சதகம்” என்ற பத்து ஸ்தோத்திரங்களை இயற்றியுள்ளார்..

இவரது உபன்யாசத்தில் ரசித்த பிரபலங்களின் பட்டியலில் காஞ்சி பெரியவர், ஸ்ருங்கேரி சங்கராச்சாரியார் சுவாமிகள், ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, பிரகாசம், சி சுப்பிரமணியம், எழுத்தாளர் கல்கி சதாசிவம், எம்எஸ் சுப்புலஷ்மி மற்றும் காசா சுப்பாராவ் போன்றோர் அடங்குவர்..

இவர்,தமது உபன்யாசத்தின் ஊடே, சிறுகதைகளையும் சொல்லக் கூடிய திறமை படைத்தவர்.. அப்படி சொன்ன ஒரு கதை இங்கே பகிர்கின்றேன்..

குருவாயூரப்பன் சன்னதியில், ஒரு பக்தன், நம்பூதிரியை அணுகி “சுவாமி! எந்த ஒரு பூஜா விதி முறை அறிவும் அற்ற அஞ்ஞானி நான்.. குருவாயூரப்பனை தியானிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் உள்ளது.. இதை எப்படி செய்வது என்று தயவு கூர்ந்து கூறி அருளுங்கள்” என்று அவர் காலில் விழுந்து கேட்டுக்கொண்டான்.. செருக்கு மிகுந்த அந்த நம்பூதிரி அவனிடம், “உனக்கு எல்லாம் கற்றுத் தரஎனக்கு நேரமில்லை.. வேண்டுமானால், கிருஷ்ணருக்கு இரண்டு கொம்பு இருப்பதாக நினைத்து வழிபடு” என்று கூறி அனுப்பிவிட்டார்.. நம்பூதிரி கூறியதையே வேதவாக்கு என்று மதித்து, அந்த பக்தன் வழிபட ஆரம்பித்தான்.. அன்று மாலை, குருவாயூரப்பனின் உற்சவ மூர்த்தியை வெளியே கொண்டுவர முயன்றார்கள்.. அப்போது, அந்த உற்சவமூர்த்தி வெளியே வர முடியாமல் இருந்தது.. ஏதோ மூட்டும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. என்ன என்று யாருக்கும் புரியவில்லை..”அந்த பக்தன் “அங்கே கொம்பு முட்டுது குருவே, பார்த்துக் கொண்டு வாருங்கள்” என்று சொன்னபோதுதான் நம்பபூதிரிக்கு தான் செய்த தவறு புரிந்தது.. உடனே, அந்த பக்தனிடம் இறை சொரூபத்தை “சாந்தாகாரம், புஜக சயனம்” என்ற ஸ்லோகத்திற்கு ஏற்ப எடுத்துரைக்க, அவனும் அவ்வாறே பிரார்த்திக்க, தடங்கலின்றி உற்சவர் வெளியே வந்தார்..

இவரது உபன்யாசத்தினைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால், பட்டத்ரி குருவாயூரப்பன் உடன் சம்பாஷிக்கும் சம்பாஷணை நம் கண்முன்னே தோன்றும்..

செல்வந்தர்களிடம், இவர் எளியவருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்..

இந்த மகான்,1969 ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் இறைவனடி சேர்ந்தார்… அவர் மறைந்தாலும் அவரது உபன்யாசங்கள் ஒலி வடிவமாக, குறுந்தகடுகளிலும் மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாகவும் கேட்க இயலுகிறது…

ஓம் நமோ நாராயணா!!!!

Dear readers

I visited the temple of Lord kodanda Rama located in Oona manjari on the vandalur kelambakkam road this temple is built in the year 800 AD by achyutaraya brother of krishnadevaraya the temple history goes to say that achyutaya is a handicapped person and Lord Rama came in the dream of achyutaraya and said to go to this place and have a dip in the Holi tank and have darshan of Lord kodanda Rama the king accordingly e done what God said in his dream he got cured.. so built the temple

The temple is having a Bali peet deepastambha and Sanbadhi for garuden.. In the garbagruha, Lord kodandarama in the pattabhishekam posture with sita Bharat chatrugna and Hanuman having two faces one facing Lord Rama and another facing Bakthas.. there are sculptures for avatars of Sri maha Vishnu on the walls of the shrine..

The temple is open between 8 A.M to 9 A.M only with one time puja..

Readers can make a visit this temple whenever you find time

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: