கரு உதித்த நாள் முதலே கருத்துடன் வளர்த்திட்டார்
மருந்துகளை நாளும் மனமுவந்து சாப்பிட்டார்
உருவாக்கம் குறையாமல் உயிர் நோன்பு நோற்றிட்டார்
உருவானாய் உதித்திட்டாய்ய் உதித்தது உன் வாழ்க்கை
பெற்றதொருரு பிள்ளையை பேணித்தான் காத்திட்டார்
நற்றவம் தான் புரிந்தார்கள் நாளும் நீ வளர
உற்றதொரு கல்வியினை உனக்கே தான் அளித்திட்டார்
கற்றிட்டாய் கல்வியினை துவங்கியது உன் வாழ்க்கை
கற்றிட்ட கல்வியினால் களம் பல நீ கண்டாய்
வெற்றி பெற்று வித்தையில் நீ பட்டம் பல பெற்றாய்
உற்றதொரு நிறுவனமும் உன் திறனைத் தான் கண்டு
நற்பெயருடன் பணியை நீ பெற்றாய் நடந்தது உன் வாழ்க்கை
தேடியே ஒரு திருமகளை உனக்களித்தார் உன் பெற்றோர்
கூடியே வாழ்ந்தாய் நீ உன் குடும்பமும் பெருகிற்று
ஓடியாடி உழைத்து உன் வாழ்வில் உயர்வு பல கண்டாய்
நாடியே செல்வம் பெற்றாய் நிறைந்து உன் வாழ்க்கை
ஓடியாடி உழைத்தவர்க்கு ஓய்வு பெறும் நாள் வரவும்
கூடிய சுற்றம் யாவும் கண்ணில் நீர் பெருகி
வீடியல் வழியைத் தேடி நீ விரைந்திடும் நாள் அதுவே
தேடிய வாழ்க்கையும்தான் தன்னிறைவு பெற்றதன்றோ!!