கி.மு…….கி.பி.(பதிவு அத்தியாயம் 25)

சென்ற பதிவின் இறுதியில், மௌரிய பேரரசின் சிறந்த மன்னரான சந்திரகுப்த மௌரியன் பற்றி குறிப்பிட்டிருந்தேன்..பிந்துசாரர், மௌரிய பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார்.. இவர், சந்திரகுப்த மௌரியரின் மகனும், பேரரசர் அசோகரின் தந்தையும் ஆவார்.. “பிந்துசாரர்” என்ற பெயரை, தீபவம்சம், மகாவம்சம் உள்ளிட்ட பௌத்த சமய நூல்களில், “விந்துசாரோ” எனக் குறிப்பிடுகிறது.. பரிசுத்த பர்வன் போன்ற சமண சமய நூல்களும், இந்து சமய புராணங்களும் “விந்துசாரர்” என அழைக்கிறது.. இவரது தாய், கிரேக்க செலூக்கஸ் பேரரசர் செலூக் கஸ் நிக்கோடரின் மகளான “ஹெலனா* ஆவார்.. இவர் ஆண்ட காலம் கிமு 297 முதல் கி.மு. 273 வரை.. இவருக்குப் பின்னர்,இவரது மகன் அசோகர் கிமு 273 இல் ஆட்சி பொறுப்பேற்றார்.. இவர், பிந்து சாரருக்கும் அவரது மனைவி சுமமித்ராங்கி என்பவருக்கும் பிறந்தவர் ..இளவயதில் அசோகர், மௌரியர் பேரரசுக்கு உட்பட்ட அவந்தி நாட்டின் ஆளுநராக இருந்தார்.. இவரது குழந்தைகள் “மகேந்திரனும், சங்கமித்திரையும்” ஆவர்..

கிமு 273 ஆட்சிப் பொறுப்பேற்ற அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பவுத்த சமயத்தை தழுவி, பௌத்த சமயத்தை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும், பரப்பினார்.. இவர் நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார்..36 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அசோகர் கி.மு. 232 இல் மறைந்தார்.. இவரது மறைவிற்கு பிறகு மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது..

மௌரிய பேரரசுக்கு பிறகு, குறிப்பிடத்தக்க ஆட்சி செய்தவர் விக்ரமாதித்தன் ஆவார்.. இவர் உஜ்ஜயினி நாட்டின் அரசர் ஆவார்.. கி.மு 102ஆம் ஆண்டு முதல் கி.மு 15 ஆம் ஆண்டு வரை சுமார் 87 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.. இவர் அறிவாற்றல், வீரம், மற்றும் தயாள குணம்ஆகியவற்றுக்கு புகழ்பெற்றவர்.. பிற்காலத்தில் “விக்ரமாதித்யன்” எனும் பெயர் இந்திய வரலாற்றில் வேறு பல அரசர்களாலும்  வைத்துக்கொள்ளப்பட்டது.. குறிப்பாக, “இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் சாம்ராட் ஹேம் சந்திர விக்ரமாதித்யா” ஆகியோர்..

“விக்ரமாதித்யன்” என்ற பெயர் வீரதீரம் என பொருள்படும்.. ‘விக்ரம்’ மற்றும் அதிதியின் மகன் என பொருள்படும் ஆதித்ய ஆகியவற்றிலிருந்து உண்டான சத் புருஷர் என்று பொருள்படும், ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும்.. இவனது வாழ்க்கையைப் பற்றிய பிரபலமான நாட்டுப்புறக் கதைகள் உள்ளன.. இது தவிர, செவிவழி கதைகளும் உண்டு.. அதில் புகழ்பெற்றது “வேதாள பஞ்சு விம்சதி” அல்லது “பைதல் பச்சிஸி” மற்றும் “ஸிம்ஹாஸன த்வாத்ரிம்ஷிகா”ஆகியவையாகும்.. இவற்றில் விக்ரம் மற்றும் வேதாளம் என்ற கதை சிறுவர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு கதையாகும்..

இவரது, அரசவையில் தன்வந்திரி, க்ஷபனகா, அமரசிம்ஹா,ஷன்கு, கடகர்பரா, காளிதாசர், வேதாள் பட், வராருச்சி மற்றும் வராஹமித்ரா ஆகியோர் அங்கமாக இருந்ததாக இந்திய மரபுவழி கூறுகிறது..அரசனிடம் இது போன்ற புகழ்பெற்ற நவரத்தின என்றழைக்கப்பட்ட 9 பேர் இருந்ததாக கூறப்படுகிறது..

இந்திய மரபுப்படி, இந்தியா மற்றும் நேபாளத்தில் பரவலாக பயன்படுத்தப் பட்ட முற்கால நாட்காட்டி “விக்ரம ஸம்வத்” அல்லது “விக்ரம சகாப்தம்”ஆகும்.. புராண கால அரசர் கி.மு 56 இல் சகர்களை வென்றதை தொடர்ந்து, அந்த அரசரால் தொடங்கப்பட்டது இந்த சகாப்தம் என்று சொல்லப்படுகிறது..

குரு வம்சத்திற்கு பிறகு,கடைசி அரசன் பிரிதிவிராஜ் சவுகான் மற்றும் ஆறு வழிதோன்றல்கள் எண்பத்தாறு ஆண்டுகள் ஆண்டுள்ளனர்.. முகமது கோரி கிபி 1193ல் அஸ்தினாபுரத்தை கைப்பற்றினான்.. எனவே கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரிலிருந்து, அஸ்தினாபுரம் பல மன்னர்களால் ஆளப்பட்டு கி.பி.1193 ல் முகமது கோரி வசம் சென்றது..

பின்னுரை

இந்த தொடரின் தலைப்பு கி. மு…..கி..பி..என்று பெயர் வைத்ததன் காரணம், இந்த தொடர் கிருஷ்ணரைப் பற்றி மற்றும் அவரது வாழ்ந்த காலத்திற்கு முன்னரும் பின்னரும் நிகழ்ந்த நிகழ்வுகளை கோர்வைப்படுத்தி,கிருஷ்ணர் பிறப்பதற்கு முன் மற்றும் கிருஷ்ணர் பிறந்ததற்கு பின் என்ற காலத்தின் அடிப்படையில் இந்தத் தொடரை பதிவு செய்தேன்..

பொதுவாக வரலாறு என்று சொல்லப்படும் போது பல நிகழ்வுகளை கோர்வையாகச் சொல்லுதல் என்று பொருள்படும்.. இந்திய வரலாறு எழுத வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு இருந்தது.. ஏனெனில், அவர்கள் இந்திய வரலாறு குறித்து சொல்லி, கிருத்துவ மதம் மேலானது என்ற கொள்கையை மக்களிடையே பரப்புவதற்காக பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.. வரலாறு என்பது ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டதனால்,  கிறிஸ்து பிறப்பை ஒரு மையப்புள்ளியாக வைத்து, அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த நிகழ்வுகளை வரலாறாக கூறியுள்ளனர்.. ஆனால்,தற்போது பொது ஆண்டு என்ற ஒரு குறிப்பு மேற்கொள்ளப்பட்டு, ஐரோப்பாவின் பல இடங்களில் இவ்வாறு காலங்களை குறிப்பிடப்படுகிறது.. அதனடிப்படையில் இந்தியாவிலும் தற்போது கி.மு. கி.பி. என்பதற்குப் பதிலாக பொது ஆண்டு (Common Era) என்று குறிப்பிடப்படுகிறது..இது, தற்போது, தமிழ்நாட்டு பாடநூல் திட்டத்திலும் கொண்டு வரப்பட்டுள்ளது.. எனவே, எனது நோக்கம் கிறிஸ்து அல்ல, கிருஷ்ணர் என்பதே… இந்த தொடருக்கான ஆதாரங்கள் யாவும் பல நூல்களின் அடிப்படையிலும்,கூகுளில் தேடியதிலும் கிடைக்கப்பெற்றது.. அதனைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.. இந்த தொடரின் 25 அத்தியாயங்களையும் படித்து, வாசக அன்பர்கள், தங்களின் மேலான கருத்துக்களை பகிருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..

இத்துடன் இந்த தொடரின் முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்.. மீண்டும் பாகம் இரண்டு மூலம் உங்களை சந்திக்கிறேன்‌‌..

மிக்க நன்றியுடன்…..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: