சென்ற பதிவில், இந்த வாரம் முண்டக உபநிடதம், மாண்டூக்கிய உபநிடதம், சாந்தோக்ய உபநிடதம் ஆகியவை பற்றி தெரிவிப்பதாக சொல்லியிருந்தேன்.. தற்போது அவைகளைப் பற்றி பார்க்கலாம்..
முண்டக உபநிஷதம்
இந்த உபநிஷத், அதர்வண வேதத்தை சார்ந்தது..” முண்டம்” என்பதற்கு ‘தலை’ என்று பொருள்.. எனவே, இந்த உபநிஷத் திற்கு “முண்டக உபநிஷத்” என்று பெயர் வந்தது..” அங்கிரசு “என்ற முனிவர்” சௌனகர்” என்ற முனிவருக்கு அருளிய உபதேசமே, முண்டக உபநிடதம் ஆகும்.. இந்த உபநிஷதத்தின் 65 மந்திரங்களுக்கு, ஸ்ரீ ஆதிசங்கரர் மற்றும் மத்வாச்சாரியார் விளக்கம் அளித்துள்ளார்..

தலையில், நெருப்புச் சட்டியை சுமந்து கொண்டு செய்யப்படும், ஒருவித கல்வியை முடித்த பின்பு, இந்த உபநிஷத்தை படிக்க துவங்க வேண்டும் அல்லது தலைமுடியை அகற்றிய பின்பு இந்த உபநிஷத்தை படிக்க வேண்டும் என்பதால், இந்தப் பெயர் வர காரணம் ஆயிற்று..
சௌனக முனிவர் எந்த ஒன்றை அறிவதனால் அனைத்தையும் அறிந்து, அதற்கு சமம் என்று கேட்டதற்கு ஆங்கிரஸ முனிவர், மெய்ப் பொருளை அதாவது பிரம்மத்தை அறிவதனால் மட்டுமே, அனைத்தையும் அறிந்ததற்கு சமம் என்று அருளிச் செய்தார்..
இந்த உபநிஷத்தில், உள்ள 65 மந்திரங்களை, 3 அத்தியாயங்களும்,ஒவ்வொரு அத்தியாயமும், இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.. அத்தியாயத்தை “முண்டகம்” என்றும் பகுதிகளை கண்டம் என்றும் அழைப்பார்கள்..
“எந்த ஒன்றின் அறிவை அடைந்தால், அனைத்தும் அறிந்தது ஆகும்?” என்று கேட்ட சீடனின் கேள்விக்கு, குருவானவர் “பரா வித்யா” என்று அழைக்கப்படும் பிரம்ம ஞானம் எனும், “ஆத்ம வித்யா..” அதாவது, பிரம்ம ஞானம் என்ற அறிவை அடைந்தவனே, அனைத்தும் அறிகின்றான்.. பிரம்மத்தை புரிந்து கொள்ளும் அறிவு” பரா வித்யா” ஆகும் பிரம்மத்தைத் தவிர அறியப்படும் மற்ற அனைத்து அறிவுகளும் “அபாரா வித்யா” என்று அழைக்கப்படும்..
இந்த உலகத்திலேயே, அனைத்து ஆசைகளை நீக்கி,அவனுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.. இந்த ஆத்ம தத்துவத்தை மன பலம் அற்றவர்களும், வைராக்கியம் அற்றவர்களும் அடைய முடியாது.. வேதாந்த ஞானத்தை அடைந்தவர்கள், தியாகம், தூய்மை அடைந்தவர்கள்,ஜீவன் முக்தர்கள் இருந்து கொண்டு பாவத்தையும், சோகத்தையும் கடந்து இறுதியாக மரணத்தை அடைந்த பின்பு பிரம்ம வடிவாகவே இருந்துந்து மீண்டும் பிறப்பதில்லை..
“சத்யமேவ ஜெயதே”(வாய்மையே வெல்லும்) என்ற சமஸ்கிருத வாக்கியம், இந்தியாவின் தேசிய குறிக்கோள் உரையாகும்.. இது இந்திய தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது..இந்த வாக்கியம் முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும்..

மாண்டூக்கிய உபநிஷத்
“மாண்டூகம்” என்பதற்கு தவளை என்று பொருள் இந்த உபநிடதம் சொல்ல வந்த பொருளை நேரடியாகச் சொல்லாமல், தவளையை போல இங்கும் அங்கும் தாவித்தாவி செல்வது போல் தோன்றுவதால் இதற்கு “மாண்டூக்கிய உபநிஷத்” என்று பெயர் பெற்றது..
ஆதிசங்கரரின் குருவான, கோவிந்த பகவத் பாதர் என்பாரின் குருவான கௌடபாதர், இந்த உபதேசத்திற்கு 215 செய்யுட்களில்” மாண்டூக்ய காரிகை” என விளக்க உரை எழுதியுள்ளார்.. இந்த உபநிஷத்தத்திற்கு, ஸ்ரீஆதிசங்கரர் மற்றும் மத்வாச்சாரியார் விளக்க உரை எழுதியுள்ளார்..இந்த உபநிஷத் 12 மந்திரங்களை கொண்டது.. இது அதர்வண வேதத்தில் உள்ளது.. அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே, இந்த உபநிஷத் தீர்க்கும் சாந்தி மந்திரமாக உள்ளது..

சாந்தோக்ய உபநிஷத்
இந்த உபநிஷத், சாம வேதத்தை சார்ந்தது.. “முக்திகோபநிஷத்தில்” ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாக கூறப்பட்ட 108 உபநிஷத்துக்களில்,இது ஒன்பதாவது.. புகழ் சேர்க்கும் எல்லா உபநிஷத்துக்களில் இது இரண்டாவது பெரியது ஆகும்..இது சாம வேதத்தில் சாந்தோக்கிய பிரமாணத்தை சேர்ந்தது” சந்தோக:”என்றால் சாமகானம் செய்பவன் என்று பொருள்.. அதனிலிருந்து “சாந்தோக்யம்” என்ற பெயர் வந்தது.. சாந்தோக்ய பிரமாணத்தில் உள்ள பத்து அத்தியாயங்களில் பின் எட்டு அத்தியாயங்கள் தான் சாந்தோக்கிய உபநிடதம்..” பிரம்ம சூத்திரத்தின்” பெரும்பகுதி, இந்த உபநிஷதத்தின் மந்திரங்களை அடிப்படையாக கொண்டது.. இதனில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மேற்கோள்களை பிரம்ம சூத்திரம் எடுத்து கையாள்கிறது.. இதனால் இதற்கு தனிச்சிறப்பு உண்டு..
இதுவரை சில முக்கியமான உபநிஷத்துக்கள் பற்றி விவரித்துசொல்லி இருந்தேன்.. இனி “பிரம்ம சூத்திரம்“என்பது என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன்..
மீண்டும் சந்திப்போம்…