கி.மு………..கி.பி(பதிவு அத்யாயம் 24)

சென்ற பதிவில் 16 மகாஜனபதங்கள் நாடுகளைப் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அதில்,மகத நாடு அல்லது மகதம் ஒன்றாகும்..இதன் தலைநகரம் “ராஜ கிரகம் “என்பதாகும்..அதன் பின்னர் “பாடலிபுத்திரம்” என்ற நகரை தலைநகராக இருந்துள்ளது.. ராமாயணம்,மகாபாரதம் போன்ற புராணங்களில், மகத நாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்பு அதர்வண வேதத்தில் காணப்படுகிறது.. இந்த மகதநாடு கிமு 1200 முதல் கிமு 322 வரை இருந்துள்ளது..

பாகவத புராணம் மற்றும் மகாபாரத இதிகாசங்களில்,மகத நாட்டு மன்னர்களில் புகழ் பெற்றவரும் சக்தி வாய்ந்தவர் என்றும்” ஜராசந்தனை” குறிக்கிறது.. இந்த ஜராசந்தனை, பின்னொரு காலத்தில், ஸ்ரீகிருஷ்ணர், பீமனின் உதவியோடு மற்போரில் கொல்கிறார்..

இந்தியாவின் சமயங்களான பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய சமயங்கள்,மகத நாட்டிலேயே உருவாகியுள்ளன.. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவையும் இங்கு தான் உருவாகியுள்ளன.. இந்த பேரரசர்களின் காலத்தில், இந்திய அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்கள் கண்டது.. இந்த காலம் இந்தியாவின் “பொற்காலம்”எனக் கருதப்பட்டது..

இந்த மகத நாட்டு ஆட்சியாளர்கள், “ஹரியங்கா வம்சம்”,”சிசுநாக வம்சம்”” நந்த வம்சம்”” மௌரிய வம்சம்” என்று நான்கு வம்சங்களால், கிமு 600 முதல் கி.மு 385 வரை ஆட்சி செய்துள்ளனர்.. இவற்றில் ஹரியங்கா வம்சத்தைச் சார்ந்த “பிம்பிசாரன் ( கி.மு 543-491) மற்றும் அஜாத சத்ரு (கி.மு 491-460)”ஆகிய மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்.. பிம்பிசாரன், கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவர்.. பௌத்த கதைகளில், இவரைப் பற்றி அறியக் கிடக்கின்றன.. சமண சமய குறிப்புகளில், ராஜ கிரகத்தின் அரசன் “ஷ்ரேனிக்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.. இவர் புத்தரிடம் ஞானம் பெற்று, பின் அவரின் முக்கிய சீடர்களில் ஒருவனாகிய பௌத்தத்தில் குறிப்பிடும் ஒரு நிலையான “சோத் பன்னத்தை” அடைய பெற்றதாக கூறப்படுகிறது.. இவர் அரசுகளுக்கு இடையே தனது நிலையை திடப்படுத்தவே, தனது திருமணங்களை பயன்படுத்தியுள்ளார்..

வரலாற்றின்படி, பிம்பிசாரன் தனது மகன் அஜாத சத்துருவினால் சிறைபிடிக்கப்பட்டு, பசியினால் வாடி, உயிர் நீத்ததாக் கூறப்படுகிறது..இந்த நிகழ்வு கி.மு.391 வாக்கில் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது ..

பிம்பிசாரனுக்குப் பிறகு, அவரது மகன் அஜாத சத்துரு, ஆட்சியைக் கைப்பற்றினார்.

அஜாத சத்ரு

பழங்காலத்து பாலி குறிப்புகளில் இவனைப் பற்றி அறிய முடிகிறது. மேலும். பௌத்த நூலான “சமாதான சூத்திரத்தில்” கூறப்பட்டுள்ளது.. வரலாற்றாசிரியர்” ரொமிலா தாப்பரின்” கூற்றுப்படி அஜாத சத்துருவின் மகன் உதயணன் என்பவன் பாட்னா என்னும் நகரம் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்.. தனது அண்டை நாடுகளான காசி,கோசலம் ஆகியவற்றை வென்று அவைகளை இணைத்துக் கொண்டான்..” கோர் விடால்”என்பவர் எழுதிய புதினமான “கிரியேஷனில்” இவனை ஆற்றல்மிக்க கொடுங்கோல் அரசன் என்று சித்தரித்து உள்ளார்..

அஜாத சத்துருவுக்குப் பிறகு அவரது மகன்” உதயணன்” என்கிற “உதய பத்திரா” கி.மு 460 முதல் கி.மு 440 வரை மகத நாட்டை ஆண்டு உள்ளார்.. இவருக்குப் பின்னர் ஆண்ட அவரது மகன் “அனுருத்ரா” மற்றும் அவனது வழித்தோன்றல்கள் குறிப்பிடத்தக்க மன்னர்களாக கருதப்படவில்லை.. இந்த வம்சத்தின் கடைசி அரசன் “நாகா தசகா” என்பவனாவான்.. இதற்குப் பிறகு, சிசுநாக வம்சம் கி.மு 413 முதல் கி.மு 345 வரை ஆட்சி செய்துள்ளது.. இந்த காலகட்டத்தில், சிசு நாகன், காக வர்ண காலசோகா மற்றும்மகா நந்தன் ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர்.

இதற்கு பிறகு நந்த வம்சம் தோன்றி உள்ளது.

. இது கி.மு. 345 முதல் 321 வரை ஆட்சி செய்து உள்ளது.. இதில் குறிப்பிடத் தக்கவர் மகாபத்ம நந்தர்.. இந்த பேரரசர் கி.மு 345 முதல்329 வரை ஆட்சி செய்துள்ளார்..மகாபத்ம நந்தனின் கிமு 400 முதல் வட இந்தியாவில், நந்த வம்சத்தின் முதல் பேரரசராக இருந்துள்ளார்.. இவரது தந்தை” மகாநந்தி” சிசுநாக வம்சத்தின் கடைசி பேரரசர் ஆவார்..அவரது மறைவிற்கு பின் மகாபத்ம நந்தர் தனது சகோதரர்களை வெற்றி கொண்டு நந்த வம்சத்தை உருவாக்கினார்..இந்து சமய புராணங்கள், இந்த மன்னனை சத்திரியர்களைகா கொன்று ஒழிப்பவன் என்று கூறுகிறது.. இவனது காலத்தில் பாஞ்சாலம், காசி நாடு,கோசல நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகம், சூரசேனம்,மிதிலை போன்ற மகாஜன பல நாடுகளை வென்று வட இந்தியாவில் நந்த பேரரசை விரிவுபடுத்தினான்.. இந்தப் பேரரசின் கடைசி அரசன் தனநந்தன் ஆவான்.. இதற்குப் பிறகு மௌரிய வம்சம் ஆட்சியை கைப்பற்றியது..

நந்த வம்சத்தின் கடைசி அரசரான தன நந்தனின் அரசவையில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானத்தில் இருந்த அந்தணரான “சாணக்கியர்”(கௌடில்யர்) நந்த வம்சத்தை வேரறுக்கும் வன்மத்துடன்அவையை விட்டு வெளியேறினார்..

பாடலிபுத்திரத்தில் இருந்து தட்சசீலதிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, காட்டுப்பகுதியில் வேட்டையாடிப் பிழைக்கும் பதின் வயது இளைஞனை சந்தித்தார்.. அவனிடம் தேர்ந்த தளபதிக்கு உரிய திறமைகளை கண்ட அவர், அவனையே தனது நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தார்..அவன்தான் “சந்திரகுப்த மௌரியன்“அவன் அதன் பின், மௌரியப் பேரரசை நிறுவி, இப்போதைய இந்தியாவை விட மிகப் பெரிய நிலப்பரப்பை ஆண்டவன் என்று வரலாறு கூறுகிறது.

சந்திரகுப்த மௌரியா

2300 வருடங்களுக்கு முந்தைய வரலாறு இதுவாகும்.. தெளிவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், சந்திரகுப்தரின் ஆரம்பகால வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன..ராஜவம்ச ஆணுக்கும் “முரா”என்கிற பெண்மணிக்கும் பிறந்வன் சந்திரகுப்தன்.. பரம்பரையாகவே வேடர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் சொல்வார்கள்..

கல்வி, அரசியல், போர் தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் சாணக்கியரிடமிருந்து சந்திரகுப்தன் கற்றுக்கொண்டார்.. சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில், ஒரு நல்ல நாளில் சிறு படையை திரட்டி ,மகத நாட்டின் எல்லைப் புறங்களில் கைப்பற்றினார்.. அது அவருக்கு கிடைத்த முதல் வெற்றி.. அந்த சமயம்,”நந்த பேரரசு”மிகவும் வலுவிழந்து இருந்தது.. முதல் வெற்றி தந்த உற்சாகத்துடன், பாடலிபுத்திரத்தினை நோக்கி முன்னேறினார்..அவனது வீரத்துக்கு முன்னால், நந்த வம்சம் நிறைய நேரம் நிலைக்கவில்லை.. அது மண்டியிட்டது.. தனது இருபதாம் வயதில் கிமு 321 மகத நாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான் சந்திரகுப்த மௌரியன்.. இந்த மவுரியர் என்ற சொல்லுக்கு இரண்டு காரணங்களை சொல்வார்கள்.. தாய் முராவின் பெயரால் மௌரியா வந்தது என்பது ஒரு கருத்து.. மயில் வளர்ப்பவர்களால் சந்திரகுப்தர் வளர்க்கப்பட்டார்.. அதனால் மயிலின் சமஸ்கிரத பேரான ‘மயூரா’ என்ற வார்த்தையில் இருந்து வந்தது மவுரியா என்பது ஒரு கருத்து.. மௌரியர் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட நாணயங்கள் உள்ளன..

பேரரசர் அலெக்சாண்டரின் படையெடுப்பில், வடமேற்கு இந்தியாவில் இருந்த சில பகுதிகள் அவர் வசம் போனதும் கிமு 323லா அலெக்சாண்டர் மரணம் அடைந்தார்..அவர் மரணத்துக்கு பிறகு, அவர் வென்ற பகுதிகளை எல்லாம், அவரது தளபதிகள் ஆண்டு கொண்டிருந்தார்கள்.. இந்தியாவின் கிரேக்க காலனிகளை “செலுக்கஸ் நிக்கோட்டர்” என்ற ஒரு தளபதி ஆண்டு கொண்டிருந்தார்.. சந்திரகுப்தர், கி.மு 317 இல் செலுக்கஸ் மீது படையெடுத்தார்.. இந்த படையெடுப்பிற்குப் பின் செலுக்கஸ் ஆண்டுகொண்டிருந்த ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் வரை சந்திரகுப்தரின் ஆட்சியை விரிவடைந்தது.. அது தவிர, செலுக்கஸின் மகளான “ஹெலானவை” சந்திரகுப்தர் மணம் முடித்தார்.. வட இந்தியாவில் வலிமையான அரசை நிறுவிய சந்திரகுப்தரின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது.. விந்திய மலைச் சாரல் தாண்டி தக்காண பீடபூமி வரை அவரது ராஜ்ஜியம் விரிவடைந்தது.. இந்தியாவில் தமிழகம், கலிங்கம், வட கிழக்கு நாடுகள் ஆகியவை மட்டும் அவரது வசம் இல்லாமல் இருந்தன.. அதற்கு பதிலாக மேற்கில் பெர்சியாவின் எல்லை வரை அவரது ராஜ்யம் பரவியிருந்தது.. பெர்சிய இளவரசி ஒருத்தியையும் அவர் மணந்ததாக சொல்வார்கள்.. சந்திரகுப்தரின் இந்த மாபெரும் வெற்றிக்கு அவரது படை மிக முக்கிய காரணம்.. ஒன்றரை லட்சம் வீரர்கள், 30 ஆயிரம் குதிரைகள், 9 ஆயிரம் யானைகள், எட்டாயிரம் தேர்களை கொண்டது அவரது படை..

சந்திரகுப்தரை மன்னாதி மன்னர் என்று சொல்லக் காரணம்,அவர் அடைந்த வெற்றிகளோ அல்லது அவர் ஆண்ட நிலப்பரப்போ மட்டுமல்ல..அவரது ஆட்சி முறையும்,அவர் வரலாற்றில் அழியாத இடம் பெற காரணமாக இருந்துள்ளது..இன்றைய ஆட்சிமுறை போல் இருக்கும், ஆறு முக்கிய துறைகள் வகுக்கப்பட்டன..வணிகம்/ தொழில், உள்கட்டமைப்பு புள்ளியியல்,சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அவை.. நீதியும், காவலும் தழைத்தோங்கி இருந்தன.. சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில், முறையான நீதி மன்றங்கள் செயல்பட்டன..தண்டனைகள் கடுமையாக இருந்தன.. திருட்டு, வரி ஏய்ப்புக்குக் கூட மரண தண்டனை விதிக்கப்பட்டது.. வர்த்தகத்தில் பல வரைமுறைகள் செய்யப்பட்டன.. அளவைகள் முறையான அளவைகள், வரிகள் கொண்டு வரப்பட்டன..

சந்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றி சாணக்கியரின் “அர்த்தசாஸ்திரம்” நூல் மூலமாகவும் கிரேக்க பயணி மெகஸ்தனிஸ் “இண்டிகா” என்ற புத்தகம் மூலமும் அறியலாம்..

இவ்வாறு சிறப்பாக ஆட்சி செய்த சந்திரகுப்தர் கி.மு 298 வரை ஆண்டு, கடைசி நாட்களில் சமண மதத்தை தழுவி துறவியாகவே வாழ்ந்தார்.. கி.மு.298ல் கர்நாடக மாநிலம்” சரவணபெலகுளா பத்திரபாகு முனிவர்” உட்பட பலருடன் மோன நிலையை அடைந்தார்..

இவருக்குப்பின், இவரது மகன் “பிந்துசாரர்”, பேரன் “அசோகர்” என மூன்று தலைமுறை மௌரிய வம்சம் சிறப்பான ஆட்சியை அளித்தது.. அவைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் ..

மீண்டும் சந்திப்போம்…..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: