அருள்மிகு ஸ்ரீ பல்லாலேஷ்வர் திருக்கோயில் பாலி மகாராஷ்டிரா

கடந்த ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்தியன்று மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட கணபதி கோவில்களில் மோரேஷ்வர் கோயில்பற்றிகூறி, ஒவ்வொரு சதுர்த்தி அன்றும், மகாராஷ்ட்ராவில், உள்ள அஷ்ட கணபதி கோவிலில், ஒவ்வொன்றாக பதிவு செய்கிறேன் என்று தெரிவித்து இருந்தேன்.. அந்த வகையில் இப்போது நாம் தரிசிக்கவிருப்பது ஸ்ரீ பல்லாலேஷ்வர் திருக்கோயில்..

இந்த திருக்கோயில், மும்பை-புனே நெடுஞ்சாலையில், ராய்கட் மாவட்டத்தைச் சேர்ந்த “பாலி” நகரத்தில் உள்ளது.. பூனேவில் இருந்து 111 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது..கர்ஜட் நகரத்தில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..

விநாயகப் பக்தனான “பல்லாலன்” என்ற சிறுவனை, அவன் தந்தையும்,கிராமத்தாரும் அடித்து துன்புறுத்தினர்..அப்போது வினாயகப் பெருமான் அந்தச் சிறுவனை காத்து அருளினார்.. அதனால், அந்த பெருமானுக்கு “பல்லாலேஷ்வர்“என்று போற்றப்படுகின்றார்.

1760 இல் “நானா பட்னாவிஸ்” என்பவர் இந்தக் கோயிலைக் கருங்கல்லால் மாற்றியமைத்தார்.. அதற்கு முன்பாக இந்த கோயில் மரத்தால் செய்யப்பட்டு இருந்தது.. உருக்கிய ஈயத்தை கொண்டு, கற்களை இணைத்து, இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.. கோவிலுக்கு இரண்டு புறமும் திருக்குளங்கள் உள்ளன.. கிழக்குப் பார்த்த இந்த ஆலயத்தின், கர்ப்பகிரகத்தில் “பல்லாலேஷ்வர்” இடஞ்சுழி விநாயகராக, மற்ற விநாயகர் களைப் போலவே கண்களிலும் நாபியிலும் வைரக் கற்கள் பதிக்கப்பட்டு, கையில் கொழுக்கட்டை பிடித்து இருக்கும் நிலையில், மூஷிகரோடு கோயில் கொண்டுள்ளார்..கிழக்குப் பார்த்த கர்ப்பகிரகம் என்பதனால், காலையில் சூரிய உதயத்தின் போது, சூரிய கிரணங்கள் விக்ரகத்தின் மேல் நேரடியாக விழுகின்றது.. அதனைப் பார்க்க பக்தர்கள் கூட்டம் மிகுந்த ஆச்சரியத்துடன், பரவசம் பெறுகின்றார்கள்.. ஆலயத்தின் பின்புறம் உள்ள மலையை போன்று, விநாயகரும் தோற்றம் அளிப்பது இதன் சிறப்பு..

இந்த திருக்கோயிலின் முகமண்டபம், அழகிய வேலைப்பாடுடன் 8 தூண்களால் தாங்கும் வண்ணமாக அமைந்துள்ளது.. கர்ப்பகிரகம் 15 அடி உயரம் உள்ளது..

இந்த திருக் கோயிலின் தலவரலாறு, கணேச புராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.. “பல்லிபூர்”என்ற ஊரில் “கல்யாண் சேத்” என்ற வியாபாரிக்கும் “இந்துமதி” என்ற பெண்மணிக்கும் மகனாகப் “பல்லாலன்” பிறந்தான்..பிறவியிலேயே மிகுந்த தெய்வ பக்தி நிரம்பியிருந்தது, இந்தச் சிறுவனுக்கு.. இவன், விநாயகப் பெருமானை சிறப்பாக வழிபட்டு வந்தான்.. காட்டில் நண்பர்களோடு விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததால், வீட்டிற்கு வருவதற்கு மிகவும் நேரம் ஆகும்.. இது அவனது தினசரி வழக்கமாக இருந்து..அதனால், அவனுடைய நண்பர்களின் பெற்றோர்கள், கல்யாண் சேத்திடம் ,தம் பிள்ளைகள், பல்லாலனுடன் சேர்ந்து கெட்டுப் போவதாக குற்றம் சாட்டினார்கள்.. படிப்பில் கவனம் செலுத்தாமல், தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பல்லாலன் மீது கோபம் கொண்ட அவனது தந்தை காட்டில், பல்லாலனும் அவனது நண்பர்களும் வழிபாடு நடக்கும் இடத்திற்கு சென்று, அனைத்தையும் கலைத்து பந்தலை பிரித்து, கடவுள் சிலையை தூர எறிந்து விட்டார்.. மற்றவர்கள் பயந்து நடுங்கும் போது, பூஜையில் தன்னை மறந்து ஈடுபட்டிருந்த பல்லாலன், இவைகளைப் பற்றி ஏதும் அறியாமல் இருந்தான்.. அதனால், அவனது தந்தை கல்யாண் சேத், பல்லாலனை தீவிரமாக நையப்புடைத்து, ஒரு மரத்தோடு சேர்த்துக் கட்டி விட்டு, அந்த “கணேசன் வந்து உன்னைக் காப்பாற்றட்டும்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்..

வலியோடு, தனிமையில் காட்டில் மரத்தில் கட்டப்பட்டு இருந்த, அந்தச் சிறுவன், தன் இஷ்ட தெய்வமான கணேசனை கூவி அழைத்தான்.. கணேச மூர்த்தி, தரிசனமளித்து, கட்டைப் பிரித்து, சிறுவனை அணைத்து, தீர்க்காயுளை அவனுக்கு அருளினார்..சிறுவனின் வேண்டுகோளின்படி, பாலிநகரில் “பல்லாலேஷ்வர்” என்ற பெயரில் அவர் ஒரு பெரிய கல்லில் இயைந்து விட்டார்..

கல்யாண் சேத்தினால் வீசி எறியப்பட்ட, பல்லாலன்,வழிபட்டு வந்த விநாயகர் சிலை,” துண்டி விநாயகர்” என்ற பெயரில் இந்த ஆலயத்தின் பின்புறம் சன்னதி கொண்டுள்ளார்.. மேற்கு பார்த்து அமர்ந்துள்ள, துண்டி விநாயகரை முதலில் தரிசனம் செய்துவிட்டு, அதன் பிறகே, பல்லாலேஷ்வர் ஆலயம் செல்ல வேண்டும், என்பது பல காலமாக இங்கு கடைபிடிக்கப்படும் நியதியாகும்..

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, இங்குள்ள “பஞ்சலோக ஆலய மணி” ஆகும்.. இந்த ஐரோப்பிய மணியை ‘வாசாய்’ போரில் வென்று பேஷ்வா எடுத்து வந்ததாக தெரிகிறது..

அன்பார்ந்த வாசகர்களே! தங்களுக்கு இந்த எட்டு கோயில்களையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமாகில் ,அந்த விநாயகப் பெருமான் தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிப்பான் என்று நம்பலாம்..

Dear readers

While I posted an article about “Moreshwar temple” in Maharashtra in August last, I said that, I will post details of other temples, one by one, about the Ganapati temples in Maharashtra, near Pune.. Now, I am giving you the details, about the temple” Ballaleshwar” situated about 111 kilometres away from Pune..

The story of this temple is, described in Ganesha Purana.. It is said that, one Shri Kalyan Seth and indhumathi had a boy called “Ballala”.. He is an ordent devotee of Lord Ganesha . He used to go to the nearer forest, along with his friends, and spend his time praying Lord Ganesha.m The parents of his friends, complaint to Kalyan Seth that their children are not studying and spend time with ballala.. Hearing this, Sri kalyan Seth went into the forest and saw Ballala with is friends.. He is praying to Lord Ganesha.. He got angry with the boys and destroyed the tent put on there and threw the idol of Lord Ganesha and tied his son with the tree and went saying” Let Lord Ganesha save you.”. Later, Lord Ganesha appeared there, and removed the bonds and blessed ballala long life..

The Lord Ganesha is facing the East and the rays of sun fall on the idol every morning.. the idol thrown by Kalyan Seth is put up on the Western side of the temple and is called” Thundi Vinayak” and is worshipped..

The temple bell is a famous one, which was secured by Peshwa during the the Vasai war..

Dear readers if you happen to to visit all this 8 temples you will be blessed my Lord Ganesha..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: