சபரியின் கதை

“வாங்க குழந்தைகளே! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? யாருக்கும் கோல்டு, காஃப், ஃபீவர் இல்லையே?”
“இல்ல தாத்தா!”
“ஓகே! ரொம்ப சந்தோஷம்! எல்லோரும் ஆரோக்கியமா இருங்க.. ப்ளீஸ் டேக் கேர்..சரி! உங்க எல்லார் கிட்டயும் ஒரு கேள்வி..யார் யார் வீட்டில் தாத்தா பாட்டி இருக்காங்க?’
“எங்க வீட்டில இருக்காங்க.”
“ஊர்ல இருக்காங்க..”
“தஞ்சாவூரில் இருக்காங்க’ “மதுரையில் இருக்காங்க” “வேலூரில் இருக்காங்க…”
“ஓகே ஓகே! நீங்க எத்தனை பேரு உங்க தாத்தா பாட்டிக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க?’
“பண்ணியிருக்கேன் தாத்தா..”
“எங்க தாத்தா?நான் டிவி பார்க்கும் போதுதான்,ஏதாவது கேக்குறாரு.. நான் டிவியைப் பார்க்காமல்அவருக்கு எப்படி ஹெல்ப் பண்றது?”
“நான் விளையாடிக் கொண்டிருப்பேன், அப்பதான் பாட்டி ஏதாவது சொல்லுவாங்க, நான் எப்படி விளையாட்ட விட்டுட்டு, அவங்க கிட்ட சொல்றத செய்யறது?”
“சரி ஓகே! உங்களுக்கு எல்லாம் இப்போ ஒரு கதை சொல்றேன்”
“ஒரு ட்ரெயின் போய்கிட்டு இருக்குது.. அதுல, ஒரு வயசானவர் நின்றுகிட்டு, பிரயாணம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்ப, அவர் பின்னாடி, ஒரு பெண் வந்து நின்னா.. அவள், அந்த தாத்தாகிட்ட, பக்கத்துல காலியா இருந்த ஒரு சீட்டை காண்பித்து “அதுல உட்காருங்க” அப்படின்னு சொன்னா..
அதுக்கு அவர் ” நான், எனக்கு உட்கார சீட் வாங்கல.. நான் நின்னுகிட்டு பிரயாணம் பண்ணத்தான் வாங்கி இருக்கேன்” அப்படின்னு சொன்னார்..
“நானும் அப்படித்தான், நின்னுகிட்டு போகத்தான், டிக்கெட் வாங்கி இருக்கேன்.. அதனால நீங்க அந்த சீட்ல உக்காருங்க” அப்படின்னு சொன்னா..அவரு, அதுல உக்காந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டார்..
அப்போ, உங்க டிக்கெட் செக்கர் வந்தார்.. அவர் தாத்தாவோட டிக்கெட்டை வாங்கிப் பார்த்தார்.. பாத்துட்டு கொடுத்துட்டு விட்டுட்டாரு.. அந்த பொண்ணுகிட்ட டிக்கெட்டை வாங்கி பார்த்தார்.. அந்த பொண்ணு கிட்ட இருந்த டிக்கெட்ல, அந்த பொண்ணு உட்கார வேண்டிய சீட் நம்பர் போட்டு இருந்தது.. அந்த சீட்டைத் தான், அந்த பொண்ணு, தாத்தா கிட்ட உக்கார சொல்லி உட்கார வைத்தது.. அந்த ‘டிக்கெட்செக்கர்’ அந்த பொண்ண பார்த்து மெதுவா காது கிட்ட “நீ நல்லது செஞ்சிருக்க” அப்படின்னு பாராட்டு தெரிவித்தார்.. அந்த பொண்ணு இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்தது.. அப்போதுதான், மேல வச்சிருந்த ரெண்டு சப்போர்ட் கட்டைகளை எடுத்தாள்.. அந்த பொண்ணுக்கு ஒரு கால் இல்லை.. அதனால அந்த கட்டையை அணைச்சுக்கிட்டு, நொண்டிக் கொண்டு தான் போச்சு..அந்த பொண்ணுக்கு கால் இல்லன்னாலும், வயசான ஒருத்தரப் பாத்தோம் அவருக்கு ஹெல்ப் பண்ணனும்,அப்படின்ற எண்ணம் அவளுக்கு இருந்தது.. அது எவ்வளவு நல்லது இல்லையா!?”
“ஒவ்வொரு வருஷமும் முதியவர்களோட தினம் வருது இல்லையா? நீங்க இனிமே வயசானவங்களை பார்த்தா, அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்..உங்க தாத்தா, பாட்டி மாதிரி எவ்வளவோ பேர், வெளியிலேயும் இருக்காங்க.. நீங்க எங்கேயாவது வெளில போகும்போது, சிக்னலுக்கு கிராஸ் பண்ண முடியாம வயசானவங்க இருந்தாங்களானா, சிக்னல் போட்டதும் மெதுவாக அவங்க கைய புடிச்சு அழைச்சிட்டு போய் ரோடுக்கு அந்தப்பக்கம் விட்டுட்டு, நீங்க பத்திரமா திரும்பி வரணும்.. அதே மாதிரி, எங்கயாவது கடை வாசலில் படி ஏற முடியாமல் தடுமாறிகிட்டுஇருந்தாங்களானா, அவர்களுடைய கைய புடிச்சு, நீங்க ஹெல்ப் பண்ணனும்.. எங்கெல்லாம் வயசானவங்க பாத்தீங்களானால், அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா ?அப்படின்னு கேட்கணும், என்ன செய்வீர்களா? அவங்களும்..இந்த தாத்தா மாதிரி தான்.. ஓகே செய்வீர்களா?”
“கண்டிப்பா செய்வோம் தாத்தா!!!”
“சரி! நல்லது..நாம இப்போ நம்ம வழக்கமான கதைக்கு வருவோம்”
“ராமாயணம் பற்றி சொல்லி இருக்கேன் இல்லையா?”
“ஆமாம் தாத்தா!!”
“அந்த ராமாயணத்தில, ராமரும் லக்ஷ்மணரும், விசுவாமித்திரர் கூட காட்டுல தாடகை ,மாரீசன், சுபாகு போன்ற அரக்கர்களை எல்லாம் அழித்துவிட்டு, சென்று கொண்டு இருந்தாங்க.. அப்போ மதங்க முனிவர் ஆசிரமம் வந்தது.. அந்த ஆசிரமத்துல கொஞ்ச நேரம் தங்கி அதுக்கு அப்புறமா மேல போகலாம் அப்படின்னு விசுவாமித்திரர் சொன்னார்.. அதன்படி அந்த ஆசிரமத்திற்கு வந்தார்கள்..ஆசிரமம்னா என்னன்னு தெரியுமா?”
“தெரியும் தாத்தா!” “தெரியாதுதாத்தா!!”
“ஆசிரமம்னா, சின்ன குடிசை.. அதுல தான், அந்த காலத்துல முனிவர்கள் எல்லாம், அங்கு இருப்பாங்க..இப்போ அந்த குடிசையில், ஒரு வயசான பாட்டி இருந்தாங்க..அவங்க பேரு “சபரி”.. அந்த சபரி ரொம்ப வயசான பாட்டி.. மதங்க முனிவர் ஆசிரமத்தை விட்டு போய்விட்டார்..மதங்க முனிவர், போவதற்கு முன்னால், பாட்டி அந்த முனிவர் கிட்ட, “எனக்கு எப்போ மோட்சம் கிடைக்கும்?” அப்படின்னு கேட்டாங்க.. அதுக்கு அந்த முனிவர்,” நீ! இந்த ஆசிரமத்திலேயே இரு.. ராமர் லட்சுமணர் அப்படீன்னு ரெண்டு பேர் வருவாங்க.. அவங்களுக்கு உபச்சாரம் பண்ணு..அவங்க சந்தோஷப்படுவாங்க.. அதுக்கு அப்புறமா உனக்கு மோட்சம் கிடைக்கும்” அப்படின்னு சொன்னார்..”உபச்சாரம்”னா என்னன்னு தெரியுமா? விருந்து கொடுக்கிறது..”
“அதே மாதிரி, சபரி பாட்டி ,பழம், காய் எல்லாத்தையும் பறிச்சு வச்சிகிட்டு, ராம லக்ஷ்மணர் வருவாங்க அப்படின்னு ,ரொம்ப நாளாக “ராம ஜெபம்” பண்ணிக்கிட்டு இருந்தா …”
“இப்பதான் ராமரும் லக்ஷ்மணரும்வந்தாங்க..”

அவங்களை பாத்ததும், சபரி பாட்டிக்கு, ரொம்ப சந்தோஷம்.. அவர்களுக்கு விருந்து வைக்கலாம் அப்படின்னு நினைச்சா.. அதனால,பக்கத்துல இருந்த மரங்களின் பழங்களை எல்லாம் பறிச்சு ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு வந்தாங்க.. வந்தவங்க, ராம லட்சுமணரோட கால்கள் எல்லாம் கழுவி விட்டு அவங்களுக்கு குடிக்க தண்ணி கொடுத்து விட்டு பழத்தை கொடுக்கலாம்னு எடுத்தாங்க.. ஆனா, இந்த பழம் இனிக்குமா? புளிக்குமா? என்று தெரியல…ராமருக்கு இனிப்பான பழங்கள் தான் கொடுக்கணும்.., அப்படின்னு எண்ணி ஒவ்வொரு பழத்தையும் கொஞ்சம் கடிச்சு பார்த்து, பழம் இனிப்பாக இருந்தால்,கொடுத்தாங்க.. பழம் புளிப்பா இருந்தா அத தூக்கி போட்டுடுவாங்க… இப்படித்தான் அவங்க கிட்ட இருந்த பழத்தை கடிச்சி ,கடிச்சி கொடுத்தாங்க..

ராமர்..அதனை சந்தோஷமா வாங்கி சாப்பிட்டார்.. என்னடா? கடிச்சு கொடுக்கிறார்களே… எச்சில் பண்ணி கொடுக்கறாங்களே, அப்படின்னு அருவருப்பு அவருக்கு ஏற்படல..வயசானவங்க, பக்தியோட கொடுத்துதனால அவருக்கு ரொம்ப சந்தோஷம்.. அதுக்கப்புறம் சபரி மோட்சம் கிடைச்சி போயிட்டா..”
“இந்த இரண்டு கதைகளிலும், உங்களுக்கு என்ன தெரியுது?”
“வயசானவங்களுக்கு நாம ஹெல்ப் பண்ணனும்..”
“அது மட்டுமில்லாம, அவங்களுக்கு நாம மரியாதை கொடுக்கணும்.. அவங்க சொல்ற அட்வைஸ் எல்லாம், நம்முடைய நல்லதுக்கு தான், அப்படின்னு எடுத்துக்கிட்டு, அவுங்க சொல்றபடி நடக்கணும்.. அதே மாதிரி, சாமிக்கு பக்தி சிரத்தையோடு எதைக் கொடுத்தாலும் அவர் ஏத்துப்பாரு.”.
“என்ன? நான் சொன்னது புரிஞ்சுதா? இனிமே பெரியவங்கள நாம மரியாதையா நடத்தணும்.. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும், ஓகேயா? சரி..எல்லாரும் போய்ட்டு வாங்க.. அடுத்த வாரம்,வேற ஒரு கதையை, உங்களுக்கு நான் சொல்றேன்.. குட் நைட்!”
“குட் நைட் தாத்தா! குட்நைட் தாத்தா!!”