நான் அமெரிக்காவில் இருக்கும் எனது மகன் வீட்டிற்கு ,2013 மற்றும் 2016இல் சென்று இருந்தேன்..

அப்போது அவன் டெக்சாஸ் மாகாணம் ஹுஸ்டன்நகரில் இருந்தான்..அந்த நகரில் சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது

.. அதனை நான் தரிசித்தேன்.. அந்த கோயிலின் அமைப்பு மற்றும் அங்கே உள்ள சன்னதிகளின் விவரத்தை வாசகர்களுக்கு அளிக்கிறேன்..
இந்த நகரின் பெயரை “ஹ்யுஸ்டன்”என்று உச்சரிக்க வேண்டும்.. இது அமெரிக்காவின் மற்ற நகரங்களை போல் அல்லாமல் மாறுபட்ட நகரம்.. ஆங்கிலத்துக்கு நிகராக அறிவிப்பு பலகைகளில் ஸ்பானிஷ் எழுத்துக்களையும் காணலாம்..அதேபோல், ஆங்கிலம் முற்றிலும் தெரியாத ஆட்களையும் நாம் பார்க்கமுடியும்.. மெக்சிகோ மற்றும் மத்திய தென் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களின் கனெக்டிங் விமானங்களை, இந்த விமான நிலையத்தில் தான், பிடிக்க முடியும்.. இந்த நகரத்தில், அமெரிக்க மக்களை போல் ஆஜானுபாகுவாக இல்லாத, ஸ்பானிஷ் மக்களையும்அதிகமாக காணமுடியும்..இவர்கள், பார்ப்பதற்கு இந்தியர்களைப் போலவே இருப்பர்.. இதன்காரணமாக, அவர்களிடத்தில், நாம் இந்தியர்கள் என்று நினைத்துக்கொண்டு இந்தியிலும் தமிழிலும் பேசினோம் என்றால், நாம் ஏமாற்றம்தான் அடைய வேண்டும்.. ஏனென்றால், அவர்களுக்கு நம் மொழி புரியாது.. இங்கு ஏராளமான இந்தியர்களும் இருக்கின்றார்கள்.. இந்த நகரில் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களைப் போல பனிப்பொழிவு கிடையாது.. நம்முடைய இந்திய தட்ப வெட்பம் தான் பெரும்பாலும் இருக்கும்.. ஆகவே,இந்த நகரத்தில் வசிப்பது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.. அதுவுமல்லாமல் அங்கே வாழும் வாழ்க்கைச் செலவு அமெரிக்காவின் மற்ற மாகாணங்களில் போல் அல்லாமல் மிகவும் குறைவு. சரி, நாம் கோயில் விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்..
இந்த ஆலயம் நிர்வாகம், 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறுவப்பட்டது.. 1968 ஜூன் 20ஆம் தேதி இக்கோயிலுக்கான நிலம் பெறப்பட்டு, விநாயகர் ஆலயம் கட்டி 1979 ஆகஸ்டில் “விநாயகர் சதுர்த்தி” அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது..இங்கு வாழும் மக்களால் இவ்வாலயத்தில் தினசரி பூஜைகள் நடத்தப்பட்டன.. ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பேராசிரியரான ‘ரஞ்சித் பானர்ஜி’ என்பவர் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கான வரைபடத்தை உருவாக்கினார்.. கோயிலின் பெரும்பகுதி வரைபடத்தின் படி கோவிலை S.M. கணபதி ஸ்தபதி என்பவர் உருவாக்கினார்.. மூல சன்னதிக் கான கட்டுமான பணி மற்றும் வளர்ச்சிப் பணிக்கு முத்தையா ஸ்தபதி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.. இதன் மகா கும்பாபிஷேகம் 1982 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.. கோயிலின் முக்கிய தெய்வங்களான மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், வெங்கடேஸ்வரர் ஆகிய விக்கிரகங்கள், ஆகம விதிப்படி, பிரதிஷ்டை செய்யப்பட்டன.
. சிவன் சன்னதிக்கு எதிரே நந்திகேஸ்வரர், வெங்கடேஸ்வரர் சன்னதிக்கு எதிரே, கருடாழ்வார் உள்ளனர்.. செல்வத்தின் அதிபதியாக விளங்கும் மகாலட்சுமி, இங்கு பத்மாவதி என்ற பெயரில் தனி சன்னதி கொண்டுள்ளார்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு 1994 ஜூன் மாதத்தில் மூலஸ்தானத்தில் உள்ள விக்கிரகங்களுக்கு அஷ்டபந்தன பூஜை செய்யப்பட்டது.. பிறகு கிழக்கு கோபுரத்துடன் சேர்த்து நான்கு கோபுரங்களும், நான்கு பிரகாரங்களும் கட்டப்பட்டு 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது..மீண்டும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி 2015இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது..
இங்கே கணபதி, சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் வெங்கடேஸ்வரர் பத்மாவதி ஐயப்பன் முருகர் ராமர் சீதை அனுமான் மற்றும் நடராஜர் துர்கை ஆகிய மூர்த்திகளுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன
.
12 ஆழ்வார்களும் கிரானைட் கற்களால் செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.. மேலும்,ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகிய குரு பரம்பரையினரின் விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன..
இங்குள்ள ஐயப்பன் சன்னதிக்கு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு வந்து பிரார்த்தனை செலுத்துகின்றனர்..
இங்கு நடக்கும் முக்கிய திருவிழாக்களில், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்,தியாகராஜர் இசைவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், பிரம்மோற்சவம், ஸ்ரீராமநவமி ஆகியவை குறிப்பிடத்தக்கவை..
இங்கு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு, தனி மண்டபம் உள்ளது.. அங்கே அவ்வப்பொழுது பிரசித்தி பெற்ற உபன்யாசகர்களின் உபன்யாசம் மற்றும் இதர கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன..
கோவிலின் பக்கத்தில் கேன்டீன் உள்ளது..அங்கே, புளியோதரை, தயிர்சாதம் தவிர மற்ற உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன..

இந்த கோயிலில் தரிசனம் நேரங்கள்:-
திங்கள் முதல் வியாழன் வரை 8:30 முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணி வரை..
சனி,ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
Dear readers,
I had visited Shri Goddess Meenakshi Amman temple, situated in in the city of Houston, Texas state, USA in the year 2013 and 2016. Had the opportunity, visiting this temple,several times during my stay in my son’s house there..
The administrative committee was setup for constructing temple for Goddess Meenakshi was formed in the year 1979.. The land was allotted and the construction work was started in the year 1980, and initially the temple for Lord Vinayaka was constructed and kumbabishekam was done in the year 1982.. Thereafter, blueprint was made by the professor of architecture in the university of Houston, Shri “Ranjeet Banerjee” for the entire 5 acre property. With the help of Shri Ganapati sthapati and Mutthiah sthapati, the temple was built. Kumbabishekams where done during the years 1995 and 2015. The main deities are Goddess Meenakshi,Lord Sundareswara, Lord Venkateswara and Goddess Padmavati.. Besides this, there are sannathis for Lord Ganesha, Subramanya, Sri Ayyappa, Nararaja, Hanuman, Sri ramar and Sita . There are sannadis for 12 alwars, Sri Ramanuja.
The main festivals are Mahashivratri, brahmotsavam, Sri Rama Navami,Meenakshi thirukalyanam, Panguni uthiram, Sri Thyagaraja music festival..
There is a separate auditorium for cultural activities, where upanyasams of famous scholars and other cultural programs are conducted..
There is a canteen inside the premises and you can get prasadams on food..