ஹரி என்னும் பேரரவம் (பகுதி 2)

ஹரி எனும் திருநாமத்தில் மற்ற பெயர்கள் யாவும் ஸ்ரீமன் நாராயணான மகாவிஷ்ணுவையே சாரும்..”விஷ்ணு” என்ற சொல்லுக்கு,  “நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பவன்” என்று பொருள்.. விஷ்ணு சம்பந்தம் இல்லாத பொருளே இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம்..

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமத்தின் முதல் இரண்டு பெயர்களை எடுத்துக்கொண்டால், “விச்வம் ,விஷ்ணு“என்பதாகும்.. இதில் “விச்வம்” என்பது முழுமையாக உள்ளவன் என்பதாகும்.. எம்பெருமான், அனைத்திலும் பூரணத்துவம் அடைந்தவர்.. அதேபோன்று, விஷ்ணு என்பவர் “சித் மற்றும் அசித்” என்று உள்ள தன்னுடைய விபூதிகளில் பிரவேசித்தவர்.. விஷ்ணு என்பது பிரவேசித்தல் என்பதனை கூறும் தாதுவான விச் என்பதில் இருந்து வருகிறது.. விஷ்ணு என்ற பதம் ‘விச்’ என்ற தாது உடன் ‘க்னு’ என்பதைச் சேர்த்து வெளிப்படும் போது விஷ்ணு என்றாகிறது.. இதன் மூலம் பிரவேசித்தல் என்பது இவருக்கு எப்போதும் உள்ளதை தெரிவிக்கிறது.. இந்த மேன்மை இவருக்கு இயல்பாகவே உள்ளது.. முதல் திருநாமம் ஆகிய விச்வம் என்பது பூரணத்துவத்தையும், இரண்டாவது திருநாமம் விஷ்ணு என்பது பிரவேசித்ததலையும் விளக்குகிறது..

அடுத்து நாம் பார்த்தால்,இந்து தொன்மவியலின் ஆதாரங்களான சதுர் வேதங்களும் போற்றும் வண்ணமாக விஷ்ணு உள்ளார்.. இவற்றில் ரிக் வேதத்தில் முதல் அஷ்டகத்தில் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ள மந்திரம் விஷ்ணுவின் பெருமையை பலவாறு கூறுகிறது.. எவராலும் வெல்ல முடியாத, எல்லோரையும், எல்லாவற்றையும் காக்கின்ற பகவான் விஷ்ணு, மூன்று உலகங்களையும் அளந்தார்.. அதன் மூலம் தர்மத்தை நிலைநாட்டினார் என்று கூறுகிறது..

ரிக் வேதத்தின், ஏழாம் மண்டலத்தில், ஆறாம் அத்தியாயத்தில் ,விஷ்ணுவோ தமோகுணம் அற்றவன் என்று போற்றப்படுகிறார்..ரிக்வேதத்தின் “விஷ்ணு ஸூக்தம்” அவனே பரமாத்மா என்பதனையும் தெளிவாக்குகிறது..

தன்னை வணங்குபவருக்கு அருளும், ஆசை கொண்ட விஷ்ணுவே! நல்ல பசுக்களை உடையவரே! இந்த தேவலோகத்தையும் பூமியையும் பலவித நீர் தரித்து இருக்கிறீர் என்று திரிவிக்கிரம அவதாரம் மூலம் உணர்த்தினீர்!

! அதனைப் பற்றி, அவரது திருவடியால் அளக்கப்பட்டஉலகங்களை குறித்து, அந்த மந்திரம் தெரிவிக்கிறது.. பல தேவதைகளைப் பற்றி கூறும் ரிக் வேதம், அந்த தேவதைகளுக்கு எல்லாம் மேலானவராக ஒரே கடவுளாக, விஷ்ணுவை பற்றி கூறுகிறது..பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்தத்தை, உண்ண தேவர்கள் மற்றும் அசுரர்கள் இடையே நிலவிய சண்டையை நிறுத்த, மோகினி அவதாரம் எடுத்து தேவர்களைக் காத்தார் விஷ்ணு என்றும் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது..

அடுத்து யஜுர் வேதம்.. வேதங்களில் சிறந்தது யஜுர்வேதம்ர் வேதம் என்பதுவேத வல்லுனர்களின் கருத்து.. சூரிய மண்டலமே ரிக் வேதமாகவும், அதில் பிரகாசிக்கும் ஜோதி சாம வேதமாகவும், சூரியனுக்கு நடுவில் காணப்படும் புருஷன் அதாவது விஷ்ணுவே யஜுர் வேதமாகவும் இருக்கிறார்கள் என்று நாராயண உபநிஷத் கூறுகிறது..

தைத்ரிய யஜுர் சம்ஹிதையில், மூன்றாம் காண்டத்தில், ஐந்தாவது பிரச்னம், இரண்டாவது அனுவாகத்தில், ராமாவதாரம் நிகழப்போவதை பற்றிய தகவல் உள்ளது.. அதே போல நான்காவது காண்டம், இரண்டாவது பிரச்னம், ஐந்தாவது அனுவாகத்தில், சீதையைப் பற்றிய ஒரு குறிப்பு காணப்படுகிறது.. கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த, நாராயண உபநிஷத், பரம்பொருளான நாராயணனைப் பற்றியே கூறுகின்றது.. வேத சிரஸ் என்பது வேதங்களின் முடிவாக விளங்கும் உபநிஷத்துக்கள் ஆகும்.. யஜுர் வேத சிரசில், நாராயணன் நிரந்தரமானவன்.. பிரம்மாவும் நாராயணனே என்றும் அனைத்தும் நாராயணனே என்றும் கூறப்பட்டுள்ளது..

சுக்ல யஜுர் வேதத்தின் சுபலோப உபநிஷத், ஈஸாவாஸ்ய உபநிஷத் ஆகியவை நாராயணனே பரம்பொருள்; அவனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறது..

புராணம் மற்றும் புலன்களுக்கு தொடர்பு உள்ள ஆத்மாவை விட புலப்படாத வரும், பற்றில்லாத வரும், அழியாதவருமான பரமாத்மா, வேறானவரே என்று நாராயணனை பற்றி பிரகதாரண்ய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது..

அடுத்து சாம வேதம்.. சாம வேதத்தில் தான் “தத்துவமசி” என்ற மகாவாக்கியம் உள்ளது.. இது, கடவுளையும், ஜீவனையும் பற்றிய மந்திரமாகும் ..”அந்த பிரம்மம் ஆகவே நீ இருக்கின்றாய்” என்பது இதன் பொருள் கடவுள்.. சரீரி., ஜீவன்.. அவரது சரீரம் ஆக கடவுள் ஒருவரே; அவரேஉலகமாகவும், எண்ணற்ற உயிர்களாகவும், நிறைந்திருக்கின்றார் என்று சாம வேதம் விளக்குகிறது.. அந்த ஒரே கடவுள் “விஷ்ணு” என்றும் அவரே “ஸ்ரீமன் நாராயணன்” என்றும் அவரது திரு எட்டெழுத்து மந்திரத்தையும், அதன் சொற் பிரிவுகளையும், ஒவ்வொரு சொல்லுக்கும், எத்தனை பிரிவுகள்? என்பதனையும், அதனை ஜெபிப்பது மூலம் என்ன பலன் கிடைக்கும்? என்பதனையும் பற்றி சாம வேதம் கூறுகிறது..

இந்த மந்திரத்தை உள்ளன்போடு ஜபிப்பவன், பூரண ஆயுளை அடைகிறான்.. மறுமை வாய்க்குமேயானாலும், அதிலும் சகல சவுபாக்கியங்களும் பெறுவான்.. மேலும், சொர்க்கம், மோட்சம் ஆகிய பயன்களையும் பெறுவான் என்று சாம வேதம் கூறுகிறது.. சாம வேதத்தைச் சார்ந்த “கேனோபநிஷத்” யாராலும், விஷ்ணுவின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள முடியாது என்கிறது..

காயத்ரி மந்திரத்தில் “ஸவிது” என்று சூரியனில் இருக்கும் கடவுளாக கூறப்பட்டவர் விஷ்ணுவே ..அவரே சூரிய நாராயணர்..

அதர்வண வேதத்தில், உள்ள விஷ்ணு ஸூக்தத்தில் நாராயணனின் பெருமைகளை பலவாறு கூறுகிறது.. மேலும்,

1) உலகங்களை எல்லாம் தன் திருவடிகளால் அளந்தவர் விஷ்ணு..

2) அவருடைய மூன்று அடிகளில் அனைத்து உலகங்களும் மறைக்கப்பட்டன..

3) விஷ்ணுவே, எல்லா உயிர்களையும் காப்பவன் ஆகவும், யாவராலும் வெல்ல முடியாததாகவும் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காகவும் அவதரிக்கிறார்..

4) விஷ்ணுவின் இருப்பிடமே “பரமபதம்” அதை நித்திய சூரிகள் எப்போதும் காண்கின்றார்கள்..

5) முத்தர் களினால் துதிக்கப்படுபவர் விஷ்ணுவே..

6) எல்லா உலகங்களையும் படைத்தவர் அவரே..

7) நரசிங்கனாகவும், திரிவிக்கிரமன் ஆகவும் அவதரித்து, அதிசயக்கத்தக்க செயல்களைச் செய்தவர் அவரே..

இவ்வாறு ஸ்ரீமன் நாராயணனின் பெருமை களை விஷ்ணு ஸூக்தம் கூறுகிறது..

அடுத்த பதிவில் சந்திப்போம்

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: