சென்ற பதிவில் குருக்ஷேத்தரப் போருக்கு பின்னர் திருதிராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் காட்டுக்குச் சென்றானர்.. அங்கே காட்டுத் தீயில் மாண்டு போயினர்

யுதிஷ்டிரன்குருஷேத்திரப் போருக்குப் பின் முடிசூட்டிக் கொண்டு அஸ்தினாபுரத்தை 36 ஆண்டுகள் ஆண்டு வந்தான்.. பின்னர் அபிமன்யு மகன் பரிக்ஷித்துக்கு முடிசூட்டிவிட்டு பாண்டவர்கள் திரௌபதியுடன் கானகம் ஏகினர்.

அதன் பின்னர், பரிக்ஷித்தும் அதன் பின்னர் அவரது மகன் ஜனமேஜயனும் ஆண்டு வந்தார்க என்று சொல்லியிருந்தேன் குரு வம்சம் என்ற க்ஷேமகன் என்ற மன்னனுடன் அழிந்து உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தேன்

ஹரிஷ் சந்திர சந்திரிகா மற்றும் மோகன் சந்திரிகா எனும் நூல் கிபி 1872 இல் சிட்டோர்கரைச் சார்ந்த சத்யபிரகாஷ் கிரந்த் என்பவரால் எழுதப்பட்டது அதன்படி
1) யுதிஷ்டிரனின் 30 வழித்தோன்றல்கள் 1770 ஆண்டுகளில் ஆட்சி புரிந்துள்ளனர் அந்த குரு வம்சத்தின் கடைசி மன்னன் க்ஷேமகன் ஆகும்
2)க்ஷேமகன் அவரது மந்திரி விஷ்வாவால் கொல்லப்பட அவனது 14 வழித்தோன்றல்களால் 500 ஆண்டுகள் ஆண்டனர்
3) விஷ்வா வம்சத்தின் கடைசி அரசன் வீரக்ஷலசேனா.. இவன் அவரது முதன் மந்திரி வீர சலேசனால்கொல்லப்பட்டான் அதன் பின்னர் இந்த வம்சம் 16 வழி தொண்டர்களால் 445 ஆண்டுகள் ஆளப்பட்டது
4)வீரசலசேனனின் வம்சத்தின் அரசனான ஆதித்திய கேது என்பவரை ப்ரக்யாராஜ் தனாதர் என்ற அரசன் தோற்கடித்தார் அவரது வழித்தோன்றல்கள் 9 பேர் 374 ஆண்டுகள் ஆண்டு வந்தனர்
5) தனாதர் வம்சத்தின் கடைசி அரசன் ராஜ்பால் இவரருக்கப் பின்னர் சமந்த் மகானபாலா என்பவர் 14 ஆண்டு ஆட்சி புரிந்தார் அதன் பின்னர் அஸ்தினாபுரத்தை உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்யன் வென்று 93 ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளான்
6) விக்ரமாதித்யனை சமுத்திர பால் என்பவன் கொன்று அவன் பின்னர் 16 வழித்தோன்றல்கள் 372 ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளனர்
7) சமுத்திர பால் வம்சத்தின் கடைசி அரசன் விக்ரம் பால் இவனை ராஜா மானக் சந்த் போரா என்பவன் வென்று அவனது வழித்தோன்றல்கள் 191 ஆண்டுகள் ஆண்டு வந்தனர்
8) போரா அரசின் கடைசி அரசன் கோவிந்த் சந்த். அவனது மனைவி பத்மாவதிக்கு குழந்தைகள் கிடையாது ஆகவே கோவிந்த் சந்த் இறந்த பின்பு பத்மாவதி ஹரி பிரேம் வைராகிஎன்ற துறவியை அரியணையில் அமர்த்தினார் அவரது நான்கு வழித்தோன்றல்கள் 56 ஆண்டுகள் ஆண்டனர்
9) வைராகி அரசின் கடைசி அரசன் மஹா பாஹூ.. இவன் அரியணையை தியாகம் செய்து துறவியானார் இந்த நேரத்தில் அஸ்தினாபுரத்தை ராஜா அதிசேன் என்பவன் தாக்கி அதனை கைப்பற்றினார் வங்காளத்தைச் சேர்ந்த ராஜா அதிசேனின் 12 வழித்தோன்றல்கள் 152 ஆண்டுகள் அஸ்தினாபுரத்தை ஆண்டனர்
10) அதிசேன் அரசனின் கடைசி அரசன் தாமோதர சென்இவன் இவரது படைத் தளபதி உம்ராவ் தீப் சிங் என்பவரை அவமானப்படுத்த அவன் ராணுவ புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினால் தீப் சிங்கும் அவனது ஆறு வழி தோன்றல்கள் 107 ஆண்டுகள் ஆண்டனர்
11) ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜா பிரிதிவிராஜ் சவுகான் கடைசி வங்காள அரசனான ஜீவன் சென்னை தோற்கடித்து அஸ்தினாபுரத்தை கைப்பற்றினார் அதன் பின்னர் அவரது ஆறு வழி தோன்றல்கள் 86 ஆண்டுகள் ஆண்டனர்
12) விக்கிரம ஆண்டு 1249(1193 AD)ல் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது கோரி அஸ்தினாபுரத்தில் தாக்கி அதன் கடைசி அரசனான யஷ்பால் சௌகானை சிறை பிடித்தான்.
சுருக்கமாக
யுதிஷ்டிரனும் அவரது 30 வழித்தோன்றல்கள். 1770ஆண்டுகள்
விஸ்வா மற்றும் 14 வழித்தோன்றல்கள் 500
வீரசலசன் மற்றும் 16 வழித்தோன்றல்கள். 445
தனாதர் மற்றும் 9 வழித்தோன்றல்கள். 374
விக்ரமாதித்யா. 93
சமுத்ர பால் மற்றும் 16 வழித்தோன்றல்கள். 372
மானக் சந்த் போரா மற்றும் 10 வழித்தோன்றல்கள். 191
ஹரிராம் வைராகி மற்றும் நான்கு வழித்தோன்றல்கள் 56
ராஜா. அதிசென் மற்றும் 12 வழித்தோன்றல்கள். 152
தீப் சிங் மற்றும் ஆறு வழித்தோன்றல்கள். 107
பிரிதிவிராஜ் சௌகான் மற்றும் 6வழித்தோன்றல்கள் 86
மொத்தம். 4146
இது வரை இந்து அரசர்களால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் கி.பி 1193 இல் முகமது கோரி என்ற இஸ்லாமிய மன்னரால் கைப்பற்றப்பட்டது ஆகவே கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் ஆக அஸ்தினாபுரம் பல மன்னர்களால் ஆளப்பட்டு கிறிஸ்து பிறந்து 1193 இல் ஒரு இஸ்லாமியர் கைக்கு சென்று விட்டது
இந்த இடைப்பட்ட காலத்தில் அஸ்தினாபுரம் 16 மகாஜனபதங்களை ஆளப்பட்டுள்ளது.. அதுதவிர புகழ்பெற்ற விக்ரமாதித்யன் முதல் சந்திர குப்த மௌரியர் வரை வட இந்தியாவில் பேரரசுகள் இருந்துள்ளன..

அந்த புகழ் பெற்றவர்கள் பற்றி அடுத்த அடுத்த பதிவுகளில் தெரிவிக்கிறேன்..
மீண்டும் சந்திப்போம்