ஜெகதோதாரணன் ஜெகந்நாதன்

(இது எனது நூறாவது பதிவு)

சத்திய யுகம் என்று கூறப்படும் முதலாவது யுகத்தில் மாளவ தேசத்தில் அவந்தி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு இந்திரதுய்மன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான்.. கதிரவனும் வெட்கப்படும்படியான உடல் ஒளியும், இந்திரனும் அஞ்சும் பேராற்றல் பெற்றவனாக விளங்கினான்.. வெறும் உடல் வலிமையோடு மட்டுமல்லாமல், சாஸ்திரங்கள், வேதங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.. போர்க்கருவிகள் அனைத்தையும் கையாளும் ஆற்றல் பெற்றிருந்தான்..சுருங்கச் சொன்னால்,அவனுக்கு நிகரானவர் பூவுலகிலோ அன்று தேவர் உலகிலோ எவரும் இல்லை என்று கூறிவிடலாம்.. இவ்வளவு திறமை இருந்தும், அவன் எள்ளளவும் அகங்காரமும் கொள்ளாமல், விஷ்ணு பக்தியில் சிறந்து விளங்கினான்..தனக்கு உள்ள செல்வம், ஆற்றல், அதிகாரம், செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்த ஒரு வழி கண்டான்.. தன்னால் வழிபடப்படும் விஷ்ணுவிற்கு, அன்று வரை, யாரும் கட்டாத ஒரு சிறந்த கோயிலை அமைக்கத் தீர்மானித்தான்.. சிறந்த கோயிலாக அமைவதுடன் அக்கோயில் அமைகின்ற இடமே, ஈடு இணையற்றதாக இருக்க வேண்டும் என்று எண்ணினான்.. எங்கும் பரவியிருந்த அவனது செல்வாக்கு காரணமாக, எல்லாத் தீர்த்தங்களையும்,புண்ணியத் தலங்களையும், பார்த்து அலசி ஆராய்ந்தான்.. அவனுடைய தலைநகரமான அவந்தியும், அதனை சுற்றியுள்ள பகுதிகளும் மிக அற்புதமாகத்தான் இருந்தன.. வானுயர்ந்த கட்டிடங்கள், நிறைந்திருந்தது அவந்தி ஓயாத மக்கள் நடமாட்டமும், பெரு வாணிபமும் நடைபெறுகின்ற கடை வீதிகளும், நிறைந்திருக்கும் அவந்தியில் அவனுக்கு விஷ்ணுவின் கோயில் கட்ட ஏனோ மனம் வரவில்லை.. அங்கே, சிப்ரா நதிக்கரையில் மிகப் பிரசித்தமான மகாகாளர் திருக்கோயில் உள்ளது.. கோவிந்தசாமி, விக்கிரம சாமி என்ற பெயரில் இரண்டு பெருமாள் கோயில்கள் உள்ளன.. ஆனாலும், அவன் மனம் அங்கே  லயிக்கவில்லை..

எனவே, அவன் தன் அமைச்சர்கள், படைகள் ஆகியோருடன் சிறந்ததோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டான்.. நீண்ட தேடலுக்குப் பின், புருஷோத்தம க்ஷேத்திரம் என்ற கடற்கரையை அடைந்தான்.. அங்கே, இயற்கை எழில் கொஞ்சியது.. பறவைகள் மகிழுந்து திரிந்தன.. இதுவேதான், தான் நினைத்த ஆலயத்தை கட்ட சிறந்த இடம் என்று தீர்மானித்தான்.. மிக அழகிய பகுதியான இந்த இடத்திற்கு புருஷோத்தம க்ஷேத்திரம் என்று பெயர் வந்ததற்கு காரணம் உண்டு.. பல காலத்திற்கு முன்பு,விஷ்ணுவின் சக்தியின் பெரும்பகுதி பெற்ற மகா விஷ்ணு விக்ரகம், இந்த இடத்தில் இருந்தது.. யார் வந்து அதனை ஒரு முறை தரிசித்தாலும் அவருடைய பாவங்கள் யாவும் அப்பொழுதே நீங்கிவிடும்.. மக்கள் அதனை அறிந்து தரிசிக்கலாயினர்.. அதனால் எமனுக்குவேலை இல்லாமல் போயிற்று.. எமன், விஷ்ணுவிடம் தன் நிலையை எடுத்துச் சொல்ல, அவர் அந்த சிலையை மணலுக்குள் புதைத்து வைத்தார்.. அப்போது, மக்கள் வந்து தரிசிக்க இயலவில்லை என்றாலும், அந்த ஊருக்கு மதிப்பு குறையவில்லை.. அதனால், இந்த ஊருக்கு புருஷோத்தம சேத்திரம் என்று பெயர் வந்தது.. இந்த இடத்தை தான் அரசன் இந்திரதுய்மன் தேர்வு செய்தான்..

அவன், தான் மட்டுமே அல்லாமல், பிற அரசர்கள், செல்வந்தர்கள், வணிகர்கள் எல்லோரையும் பங்கு பெற செய்ய வேண்டி, ஒன்றாக அழைத்தான். கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது..அதற்கு முன்னால், ஒரு அசுவமேத யாகம் செய்ய வேண்டும் என விரும்பி, பொன்னாலேயே ஒரு மண்டபம் கட்டப்பட்டது.. பரத கண்டத்தில் இருந்து அனைத்து மன்னர்களும் பொன் பொருள் கொண்டு வந்து குவித்தனர்.. தானம் பெற, வந்தவர்கள் பலர் கூடினர்..யாகம் முடிவடைந்ததும், கோயில் கட்டும் பணி துவங்கியது.. எந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வது என்ற கவலையுடன் மன்னன் உறங்க, அவனது கனவில் விஷ்ணு தோன்றி, சமுத்திரக் கரையில் உள்ள ஒரு மரத்தினை அடையாளம் காட்டி அதனை பயன்படுத்தி சிலை செய்யுமாறு வழிகாட்டினார்..  (இந்தப் பகுதி வரலாறு பிரம்ம புராணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது)..

இதன் தொடர்பாக மற்றொரு கதையும் உண்டு..

“ஜரா “எனும் வேடன் எய்த அம்பு பட்டு, ஸ்ரீ கிருஷ்ணர்,வைகுண்டம் ஏகினார்.?பின்னர்,அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது.. மன்னன் இந்திர துய்மன் அப்போது பூரி நாட்டை ஆண்டு வந்தான்..அவனது கனவில், ஸ்ரீகிருஷ்ணர் பூரிகடற்கரையில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செய்யுமாறு கூறினார்..அதேபோல, கடலில் ஒரு கட்டை மிதந்து வந்தது.. காவலர்கள், அதனை அரசனிடம் சேர்ப்பித்தனர்.. அரசன், அந்த மர கட்டைக்குப் பூஜைகள் செய்து, தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யுமாறு உத்தரவிட்டான்.. தச்சர்கள், சிலையை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்ததும், உளி உடைந்து விட்டது..அப்போது அவர்கள் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சரைப் போல வேடமணிந்து தோன்றினார்.. அரசனிடம் ,21 நாட்களில் இந்த வேலையை முடித்துத் தருவதாகவும்.., அதுவரை, தான் வேலை செய்யும் அறையை யாரும் திறக்கக்கூடாது, என்றும் கூறினார்..அரசரும், அதற்கு ஒப்புக்கொண்டார்..15 நாட்கள், அந்த அறையிலிருந்து உளிச் சத்தம் கேட்டது.. வேலை மும்முரமாக நடக்கிறது என்று எண்ணி அரசன் அந்த அறையின் பக்கம் போகவே இல்லை.. அதனை அடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை.. இதனால், அரசன் அந்த  முதிய தச்சர் தூங்கி விட்டாரோ என அஞ்சி கதவை திறந்துவிட்டான்.. உடனே தச்சர் கோபம் அடைந்து” நீ அவசரப்பட்டு கதவை திறந்து விட்டாய்.. எனவே, இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள், அரை குறையாகவே இருக்கும் ,அப்படி இருந்தாலும் பரவாயில்லை, அவற்றை அப்படியே பிரதிஷ்டை செய்து விடு”என்றும்,” இந்த கோயிலுக்கு வருபவர்கள், சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்செல்வார்கள்” என்றும் அருள்பாலித்தார்.. அந்த அறையில், வேலை முடியாத நிலையில், ஸ்ரீ ஜெகந்நாதர் பலராமர் மற்றும் சுபத்ரா ஆகியோரின் சிலைகள் இருந்தன.. அரசன், அவற்றை அப்படியே பிரதிஷ்டை செய்தார்.

.

இந்திர துய்மனால் கட்டப்பட்ட கோவில் பாழடைந்து விட்டது.. அதன் பிறகும், அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன.. அவற்றையும் கடலில் மூழ்கடித்து விட்டது.. தற்போதைய கோயில் ஏறக்குறைய கிபி 1135ல் கீழை கங்க குல அரசன் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, கி.பி 1200ஆம் ஆண்டில் அவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது.. இது பாஞ்சராத்ர ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும்.. இவ்வாலயத்தின் மேலே 8 உலோகக் கலவையில் செய்யப்பட்ட நீல சக்கரம் உள்ளது.. அதனுடன் ஆலயத்தின் கொடிமரம் உள்ளது..அது ஏழைகளுக்கு அருள்பவன் என்ற பொருளில் பதித பவனா என்று அழைக்கப்படுகிறது..இவை, இரண்டையும் வணங்கினாலே ஸ்ரீ ஜெகநாதனின் அருளைப் பூரணமாக பெறலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்..

இராமாயணத்தில் ராமபிரானும் மகாபாரதத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக் கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன..

உலகப் புகழ்வாய்ந்த பூரிஜெகநாதனின் கோயில் தேர் திருவிழா ஆண்டுதோறும் ஒன்பது நாட்கள் நடைபெறும்.. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.. தேரோட்டத்தை முன்னிட்டு சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய நிறங்களில் தேர்கள் அமைக்கப்பட்டு இருக்கும்..16 சக்கரங்களை கொண்ட தேரில் உற்சவ மூர்த்தியான ஜெகநாதனும், 14 சக்கரங்களைக் கொண்ட பச்சை நிறத் தேரில் பல பத்திரரும், 12 சக்கரங்களைக் கொண்ட தேரில் சுபத்திரா தேவியும் எழுந்தருளுவர்..

பாரம்பரிய வழக்கப்படி தேரோடும் ரத்தின வீதியை பூரி நகர மன்னர் கஜபதி,தங்கத்தாலான துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்வார்.. முதலில் பலபத்திரரின் தேரும்,அதன்பின்னர் சுபத்திரா தேவியின் தேரும், இறுதியில் ஸ்ரீ ஜெகநாதனின் தேரும் புறப்படும்.. தேரோட்டத்திற்காக ஆண்டு தோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட தேர் மரத்தால் கட்டப்படுகிறது..

குண்டிச்சா கோவில் நோக்கி செல்லும் ரத யாத்திரை, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் நின்று ஸ்ரீ ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார்.. அங்கிருந்து மீண்டும் பூரி ஜெகன்நாதர் கோயிலுக்கு தேர் வந்தடையும்..

புவனேஸ்வர் அதில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு வருவதற்கு ரயில் மற்றும் விமான போக்குவரத்தை பயன்படுத்தலாம்..

பூரி மஹராஜ் கி ஜெய்!!!!             ஜெய் ஜெகந்நாத் கி ஜெய்!!!

இந்த பதிவுடன் எனது புதிய பதிவுகளுக்கு சற்று இடைவெளி கொடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும் துவங்க உள்ளேன்..தயை கூர்ந்து வாசகர்கள் பொறுத்து கொள்ளவும்..

Dear Readers

The Shree Jagannath Temple of Puri is an important Hindu temple dedicated to Jagannath, a form of Vishnu, in Puri in the state of Odisha on the eastern coast of India. The present temple was rebuilt from the 10th century onwards, on the site of an earlier temple, and begun by King Anantavarman Chodaganga Deva, first of the Eastern Ganga dynasty.[1]Shree Jagannath Temple at Puri

According to legend, the construction of the first Jagannath temple was commissioned by King Indradyumna, son of Bharata and Sunanda, and a Malava king, mentioned in the Mahabharata and the Puranas.

The legendary account as found in the Skanda-Purana, Brahma Purana and other Puranas and later Odia works state that Lord Jagannath was originally worshipped as Lord Neela Madhaba by a Savar king (tribal chief) named Viswavasu. Having heard about the deity, King Indradyumna sent a Brahmin priest, Vidyapati to locate the deity, who was worshipped secretly in a dense forest by Viswavasu. Vidyapati tried his best but could not locate the place. But at last he managed to marry Viswavasu’s daughter Lalita. At repeated request of Vidyapti, Viswavasu took his son-in-law blind folded to a cave where Lord Neela Madhaba was worshipped.

Vidyapati was very intelligent. He dropped mustard seeds on the ground on the way. The seeds germinated after a few days, which enabled him to find out the cave later on. On hearing from him, King Indradyumna proceeded immediately to Odra desha (Odisha) on a pilgrimage to see and worship the Deity. But the deity had disappeared. The king was disappointed. The Deity was hidden in sand. The king was determined not to return without having a darshan of the deity and observed fast unto death at Mount Neela, Then a celestial voice cried ‘thou shalt see him.’ Afterward, the king performed a horse sacrifice and built a magnificent temple for Vishnu. Narasimha Murti brought by Narada was installed in the temple. During sleep, the king had a vision of Lord Jagannath. Also an astral voice directed him to receive the fragrant tree on the seashore and make idols out of it. Accordingly, the king got the image of Lord JagannathBalabhadraSubhadra and Chakra Sudarshan made out of the wood of the divine tree and installed them in the temple.

The Jagannath triad are usually worshiped in the sanctum of the temple at Puri, but once during the month of Asadha (Rainy Season of Orissa, usually falling in month of June or July), they are brought out onto the Bada Danda (main street of Puri) and travel (3 km) to the Shri Gundicha Temple, in huge chariots (ratha), allowing the public to have darśana (Holy view). This festival is known as Rath Yatra, meaning the journey (yatra) of the chariots (ratha). The Rathas are huge wheeled wooden structures, which are built anew every year and are pulled by the devotees. The chariot for Jagannath is approximately 45 feet high and 35 feet square and takes about 2 months to construct. The artists and painters of Puri decorate the cars and paint flower petals and other designs on the wheels, the wood-carved charioteer and horses, and the inverted lotuses on the wall behind the throne.The huge chariots of Jagannath pulled during Rath Yatra is the etymological origin of the English word Juggernaut.The Ratha-Yatra is also termed as the Shri Gundicha yatra.

The most significant ritual associated with the Ratha-Yatra is the chhera pahara. During the festival, the Gajapati King wears the outfit of a sweeper and sweeps all around the deities and chariots in the Chera Pahara (sweeping with water) ritual. The Gajapati King cleanses the road before the chariots with a gold-handled broom and sprinkles sandalwood water and powder with utmost devotion. As per the custom, although the Gajapati King has been considered the most exalted person in the Kalingan kingdom, he still renders the menial service to Jagannath. This ritual signified that under the lordship of Jagannath, there is no distinction between the powerful sovereign Gajapati King and the most humble devotee.Chera pahara is held on two days, on the first day of the Ratha Yatra, when the deities are taken to garden house at Mausi Maa Temple and again on the last day of the festival, when the deities are ceremoniously brought back to the Shri Mandir.

Jai Puri Maharaj ki jai!!!

Jai Jagannath ki jai!!!

With this I am taking a small break for my new posts.. will return soon..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: