கண்ணாடி தாத்தா கதை சொல்றார்

செய்நன்றி அறிதல்

Welcome to to all my children I I think our group is expanding like anything.. there seems to be new additions to our group.. my goodness I have to see a large complex or a ground.. otherwise I have  to take batches..

“ஆமாம் தாத்தா!! இந்த தெருவுல இருக்குற மத்த அப்பார்ட்மெண்ட்ஸ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூட கதை கேட்க வரணும், அப்படின்னு, சொல்லிட்டு இருந்தாங்க.. அவங்க எல்லாம் என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸ் அழைச்சிட்டு வரட்டுமா?”

“நோ..நோ.. அவசரப்பட வேண்டாம்.. கொஞ்சம் நாள் போகட்டும்..”

“ஓகே!! இனி நாம் கதைக்குப் போகலாம்”

“போனவாரங்களில, நாம பிரெண்ட்ஷிப் பற்றி பார்த்தோம் இல்லையா? இந்த வாரம் நன்றி, அதாவது gratitude அப்படிங்கறதை பத்தி பார்க்கலாம்.. முதல்ல ஒரு சின்ன கதை..”

“ஒரு காட்டுல ஒரு மரத்து மேல ஒரு பச்சைக்கிளி கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தது.. அந்த மரம் முழுக்க இலைகளும் பழங்களும் இருக்கவே, அதற்கு ரொம்பவும் சௌகரியமாக இருந்தது.. வேறு எங்கும் போகாமல், அந்த மரத்திலேயே கூட்ட கட்டி,அந்த பழங்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்துச்சு.. ஒரு நாள், ஒரு வேடன், அந்த பச்சைக்கிளியை பார்த்துட்டான்.. ஒரு அம்பினை எடுத்து விஷத்தில் தோய்ச்சு, அந்தக் கிளியைப் பார்த்து அம்பை விட்டான்..

அது குறி தவறி, மரத்தின் வேரில போய் பட்டுச்சு.. விஷம் இருந்த அம்பு இல்லையா? அந்த மரம் பட்டுப் போச்சு.. அதாவது காஞ்சி போச்சு.. அதோட இலைகள் எல்லாம் உதிர்ந்து, மரம் தன்னோட பசுமை எல்லாம் போய், காஞ்சு போச்சு….ஆனாலும் கிளி, அந்த மரத்தை விட்டு எங்கேயும் போகல..அதற்கு உணவு தேடி பறந்து சென்று விட்டு, திரும்ப வந்து அந்த மரத்திலேயே வாழ்ந்துச்சு.. ஒருநாள் இந்திரன் அந்த வழியே வந்தான்..அவன், அந்த காஞ்சு போன மரத்தை  பார்த்தான்.. அதோடு அங்கே வாழ்ந்து கிட்டு இருக்கற கிளியையும் பார்த்தான்..

இந்திரன் கிளியைப் பார்த்து,” ஏ கிளியே!! இந்த மரம்தான் காஞ்சு போச்சே.. நீ ஏன் இன்னும் இந்த மரத்திலேயே இருக்கிற? வேறு மரம் தேடி போவது தானே” அப்படின்னு  கேட்டான்..

அதற்கு அந்த கிளி” தேவனே!! இந்த மரம் நன்னா இருந்தப்ப, எனக்கு இடம் கொடுத்து,சாப்பிட பழம் எல்லாம் கொடுத்துச்சு.. எல்லா செஞ்சது..அப்படி இருக்கறச்சே நான் மட்டும் அந்த நன்றியை மறந்து இந்த மரத்தை விட்டு போகலாமா?அது சரியா? நீங்களே சொல்லுங்க!” என்றது..

தேவேந்திரன் அந்த கிளியின் நன்றி உணர்ச்சியை பாராட்டிட்டு அந்த மரத்தினை மீண்டும் பசுமையுடன் துளிர்க்க செய்தான்..

“இந்தக் கதைஎன்ன சொல்றது?அதாவது, ஒருவர் நமக்கு ஏதாவது உதவி செய்தால், அவர்களுக்கு நாம் மிக்க நன்றியோடு இருக்கணும்.. அப்படின்னு புரியறது. இல்லையா? இந்த நன்றிக்காகவே நமது திருவள்ளுவர் இருக்கிறாரே, அவர் வந்து ஒரு பத்து பாட்டு இதற்காகவே எழுதி இருக்கிறார்.. அழகு தலைப்பு” செய்நன்றி அறிதல்” அப்படின்னு இருக்கும்.நேரம் கிடைக்கும்போது, அப்பாவை தொந்தரவு பண்ணாம, அந்தப் புத்தகத்தை வாங்கித் தரச்சொல்லி, லீவு நாட்கள்ல அதை படிச்சு, நிறைய விஷயம் தெரிஞ்சுக்கோங்க ..என்ன சரியா? செய்வீங்களா?”

“ஓஓஓ! கண்டிப்பா தாத்தா”

“சரி, நாம் அடுத்த கதைக்கு போகலாம்..நீங்க மகாபாரதம் கேட்டு இருக்கீங்க இல்லையா? அதுல பஞ்ச பாண்டவர்களுக்கு அண்ணன் ஒருத்தன் உண்டு.. அவன் தான் கர்ணன்.. இவன் ஆரம்ப காலத்தில பாண்டவர்களுடைய அண்ணன் அப்படின்னு அவனுக்கு தெரியாது.. குந்தியின், சின்ன வயசுல இவன் பொறந்தான்.. அதனால இவன ஒரு கூடையில வச்சு ஆற்றில விட்டுட்டாள்.. அந்த கூட, தண்ணீல மிதந்து வந்து ஒரு இடத்தில பாறையில் முட்டி நின்னுச்சு.. அங்க குதிரைகளை குளிப்பாட்ட வந்த அதிரதன் அப்படீங்கற, பீஷ்மரோட தேரோட்டி, அந்த குழந்தையைப் பார்த்தான்.. தேரோட்டி அப்படின்னா யார் தெரியுமா? நாம இப்ப கார் வச்சிருக்கோம் இல்லையா? அதுக்கு டிரைவர் இருக்கான் இல்லையா? அந்த மாதிரி, அந்த காலத்துல ராஜாக்கள் தேர் வைத்திருப்பாங்க.. அதுக்கு ஒரு டிரைவர். அவன்தான் இந்த அதிரதன்.. அவன் இந்த குழந்தையை தன் வீட்டுக் எடுத்துண்டு போயி வளர்த்தான்.. அவனுக்கு கர்ணன் அப்படீன்னு பேர் வச்சான்..கர்ணன் பெரியவனா ஆனான்.. ஒருநாள், அஸ்தினாபுரத்தில் ஒரு போட்டி நடந்தது.. அது வில் போட்டி.. அந்த போட்டியில அர்ஜுனன் கலந்துண்டான்.. நம்ம கர்ணனும் அந்தப் போட்டியில கலந்துக்க ஆசைப்பட்டான்.. ஆனால், இவன் ராஜா வம்சம் இல்ல; அதனால போட்டியில கலந்துக்கக்கூடாது அப்படின்னு தடுத்துட்டாங்க… கர்ணனுக்கு ரொம்ப அவமானமாப் போயிட்டுது.. அழுதுகிட்டே, அந்த இடத்தை விட்டு நகர  ஆரம்பிச்சப்ப, அஸ்தினாபுரத்தினோட அரசன் திருதராஷ்டிரன்.. அவனோட புள்ளை, துரியோதனன், கர்ணனை நிற்கச் சொல்லி, அவன் அரசவம்சம் இல்லை என்பதனால் தானே அவனுக்கு இந்த போட்டியில பங்கு தரலை.. நான் இப்பவே இந்த நாட்டின்  ஒரு பகுதியான அங்க தேசத்திற்கு இவனை ராஜாவாக்கறேன்னு  சொல்லி அவன அங்கதேசத்துக்கு ராஜாவாக்கினான்.. கர்ணனும் துரியோதனனும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டாங்க.. “

“துரியோதனன் ரொம்ப கெட்டவன்.. ஆனா, கர்ணன் விஷயத்துல ரொம்ப நல்லவனா நடந்துக்கிட்டான்.. பிற்காலத்தில குருக்ஷேத்திரத்தில சண்டை வந்தபோது, குந்தி கர்ணன் கிட்ட, “நீ !பாண்டவங்க பக்கம் வந்துடு.. நீதான் அவங்களுக்கெல்லாம் அண்ணன்” அப்படின்னு உண்மையை சொல்லியும் கர்ணன் “நான் அவமானப்பட்ட போது துரியோதனன் தான் எனக்கு ஆறுதல் சொல்லி அங்க தேசத்திற்கு ராஜாவாக்கினான்.. அப்படி இருக்கச்சே நான் எப்படி அவன விட்டுட்டு வருவேன்? எனக்கு நன்றி இல்லையா?” அப்படின்னு சொல்லி குந்தி கிட்ட மறுத்து பேசினான்.. கடைசியில துரியோதனனுக்காகவே சண்டை போட்டு போர்ல செத்துப் போனான்.. இது கர்ணனோட நன்றி உணர்ச்சியை காட்டுறது.. தனக்கு, அவமானப்பட்டகாலத்தில உதவி செஞ்ச துரியோதனனை, தான் சாகிற வரை, விட்டு பிரியாமல் இருந்தான்.. இது மேல சொன்ன கிளி கதை மாதிரி இல்லையா?”

“என்ன குழந்தைகளே? புரிஞ்சுதா? நமக்கு ஒருத்தர் உதவி செஞ்சா, நாம, அவர் செஞ்ச உதவிய மறக்காம, அவருக்கு தேங்க்ஸ் சொல்லி, அதோட இல்லாம, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டா, உடனடியா அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்.. இத நீங்க உங்க மனசுக்குள்ளேயே பத்திரமா வச்சுக்கணும்.. எப்போதெல்லாம் இந்த மாதிரி, ஒரு நிலைமை ஏற்படச்சே நீங்க கண்டிப்பா உங்கள் நன்றியை ஏதாவது செஞ்சு அவங்களுக்கு திரும்ப காட்டணும்.. ஓகே யா?”

“இந்த வார கதை, இத்தோடு முடிஞ்சுது.. அடுத்த ஒரு வாரம் தாத்தாவுக்கு ஒரு வேலை இருக்கு.. அதனால, நான் அதற்கு அடுத்த வாரம், உங்களை சந்திக்கிறேன்.. ஓகேயா? போய் நல்லா படுத்து தூங்குங்க!!” “குட்நைட்!!”

“குட் நைட் தாத்தா! டேக் கேர்..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: