கி.மு………கி.பி(பதிவு அத்தியாயம் 21)

சென்ற பதிவில் குருச்சேத்திரப் போரில் நிகழ்ந்த நிகழ்வுகள் மற்றும் அதன் முடிவினை பற்றி  அடுத்த பதிவில் தெரிவிப்பதாக சொல்லியிருந்தேன்; அதனை தற்போது பார்ப்போம்..

இந்தப் போரில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் பக்கம் இருந்து பலநாட்டு மன்னர்கள் போரிட்டனர்.. கௌரவர்கள் அணியில் பீஷ்மர், துரோணர், கிருபர், துரியோதனன் மற்றும் அவனது 99 சகோதரர்கள், கர்ணன் ஆகியோர் எல்லோரும் அறியப்பட்டவர்கள்.. இவர்களைத் தவிர, சிந்து நாட்டரசன் ஜெயத்ரதன், காந்தார மன்னன் சகுனி, அவனது மகன் உலூகன், மத்திர நாட்டு மன்னன் சல்லியன், பீமனின் மகன் கடோத்கஜன், அவரது மகன் பர்பரிகன், சந்தனுவின் இளைய சகோதரர் பாக்லீகர், ஸ்ரீ ஆதி வராக மூர்த்திக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனாக கருதப்படும்.. பகதத்தன், நிசாதர்கள், திரிகர்த்தர்கள், காம்போஜர்கள்,அவந்தி நாட்டு மன்னர், கேகய நாட்டு மன்னர், கலிங்க நாட்டு மன்னன்,  ஆந்திர மன்னர்கள், யவனர்கள், சகர்கள் ஆகியோர் கௌரவர் பக்கம் இருந்து போரிட்டனர்.. இவர்கள் தவிர இவர்கள் படையில் 24 லட்சத்து 45 ஆயிரத்து 700  படை வீரர்கள் போரிட்டனர்..

பாண்டவர்கள் அணியில், பாஞ்சால அரசன் துருபதன், அவர் மகன் திருஷ்ட்த்யும்னன், சிகண்டி, கடோத்கஜன், அரவான்,மத்சிய நாட்டு மன்னன் விராடன், அவரது மகன்கள் உத்தரன், சுவேதன், மற்றும் சோமதத்தன்,விருஷ்ணி குலத்தின் சாத்தியகி, காசி நாட்டு மன்னன், கேகேயர்கள், சேதி நாட்டு மன்னன் சிசுபாலனின் மகன் திருஷ்டகேது, மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் மகன் ஜயத்சேனன்,நீலனின் மகிழ்மதி நாட்டுப் படைகள், பாண்டியர்கள் என்று பல மன்னர்கள் இருந்தனர்.. இவர்களது படகில் 15 லட்சத்து 30 ஆயிரத்து 900 படைவீரர்கள் போரிட்டனர்..

இந்த போரில் பங்கு கொள்ளாமல் நடுநிலை வகித்தவர்கள் சிலர் உண்டு.. அவர்கள், ஸ்ரீ கிருஷ்ணரின் சகோதரர் பலராமர்.. திருதராஷ்டிரரின் சகோதரர் விதுரர் மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் ருக்மி என்பவர்களாவார்..

குருஷேத்திரப் போர் 18 நாட்கள் நடைபெற்றது.. இந்த போரில் முதல் 10 நாட்களில் முக்கியமான தலைவர்கள் யாரும் இறக்கவில்லை.. பத்தாம் நாள் சிகண்டியை, முன்நிறுத்தி அர்ஜுனன், பீஷ்மரை தோற்கடித்து அம்பு படுக்கையில் சாய்க்கிறான்..

அதன் பின்னர் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்து விட்டதாக ஒரு வதந்தியை கிளப்பி துரோணரை திருஷ்டத்யும்னன், வாளால் வெட்டி வீழ்த்துகிறான்..

கர்ணனுடைய தர்மபலன்கள் யாவையும், ஸ்ரீகிருஷ்ணர் தானமாகப் பெற்றுக் கொள்ள, அர்ஜுனனால் அவன் கொல்லப்படுகிறான்

.. இவ்வாறு ஒவ்வொருவரும் களத்தில் சாய்க்கப்பட்ட பின்னர், இறுதியாக துரியோதனனை பீமன் கொல்கிறான்

.. இதற்கு முன்பாக பீமன், துரியோதனனின் 99 சகோதரர்களையும் கொன்று விடுகிறான்.. சகுனியை சகாதேவன் கொன்று விடுகிறான்..ஆக, இந்தப் போரில் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்படுகின்றனர்.. போர் முடிவடைந்தது..போரின் முடிவில், பாண்டவர் அணியில், பாண்டவர்கள் ஐவரும், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி ஆகியோர் உயிருடன் இருந்தனர்.. இவர்களோடு, துரியோதனின் சகோதரன் யுயுத்ஸூ என்பவன், பாண்டவர் அணியில் முன்னரே சேர்ந்து விட்ட படியால், அவனும் உயிர் பிழைக்கிறான்.. கௌரவர்கள் அணியில், அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் மற்றும் விருச்சகேது ஆகியோர் மற்றும் திருதராஷ்டிரன், காந்தாரி ஆகியோர் மட்டும் உயிருடன் இருந்தனர் மற்றவர்கள் யாவரும் மடிந்தனர்.

போருக்கு பின்னர், அஸ்தினாபுரத்தின் மன்னனாக யுதிஷ்டிரனை பட்டம் சூட்டிவிட்டு, திருதராஷ்டிரன் முடி துறந்தார்.. இந்திரப்பிரஸ்தம், ஹஸ்தினாபுரத்துடன் இணைக்கப்பட்டு, அதன் மன்னனாக யுயுத்ஸூ அமர்த்தப்பட்டனர்.. துரோணர் வசமிருந்த பாஞ்சால நாட்டின் பாதி பகுதியை மீண்டும் பாஞ்சாலர்களுக்கு வழங்கப்பட்டு, துருபதனின் எஞ்சிய வாரிசு மன்னனாக அமர்த்தப்பட்டான்.. இதேபோன்று, காசி, மதுரா, அங்கம் ,காந்தாரம், சேதி, கோசலம், கலிங்கம், மகதநாடு, பாஞ்சாலம், சிந்து மற்றும் மத்ஸய நாட்டு மன்னர்கள், போரில் இறந்த படியால் அந்த நாடுகளுக்கு, புதிய மன்னர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.. திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் யுதிஷ்டிரனுக்கு  முடிசூட்டி விட்டு வனவாசம் செல்கின்றனர்..அங்கே, காட்டுத்தீயில் மூவருமே மாண்டனர்..

யுதிஷ்டிரன், அஸ்தினாபுரத்தின் முடிசூட்டிக் கொண்ட பின்னர் அஸ்வமேத யாகம் செய்தார்..அர்ஜுனன், மேற்கு, வடமேற்கு பகுதிகளில் பயணம் செய்து, தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிரேக்க நாடுகள் ஆகியவற்றை வென்று வந்தான்.. பீமன், தென்மேற்கே உள்ள சௌராஷ்டிரம் வரை சென்று வென்று வந்தான்.. நகுலன், தெற்கே, இலங்கை வரை சென்று, விபீஷணனிடம் பல பரிசுப் பொருட்களை பெற்று வந்தான்.. சகாதேவன், வடகிழக்கு பகுதிகளில் வென்று நிறைய திறை பெற்று வந்தான்.. அதன் பின்பு, யுதிஷ்டிரன் 36 ஆண்டுகள் ஆட்சி செய்து, அபிமன்யுவின் மகன், பரீக்ஷித்துக்கு, அரியணையை அளித்தார்..

பாண்டவர்கள் அனைவரும் திரௌபதியுடன் வனவாசம் சென்று, அங்கிருந்து இறுதி யாத்திரை மேற்கொண்டனர்.. அதன் பின்னர் யுதிஷ்டிரனின் வழித்தோன்றல்கள் எனக் கூறப்படும் 30 மன்னர்கள் சுமார் 1770 ஆண்டுகள் குரு வம்சம் தழைக்க அஸ்தினாபுரத்தினை ஆண்டு வந்துள்ளனர்.. யுதிஷ்டிரனுக்குப் பிறகு பரீட்சித், ஜனமேஜயன் எனத் தொடங்கி இறுதியாக க்ஷேமகனுடன் குருவம்சம் வீழ்ச்சி அடைந்து உள்ளது..

குரு வம்சத்தின் கடைசி மன்னர்கள் பற்றிய பட்டியலும் விவரங்களுடன், அதன் பின்னர், அஸ்தினாபுரம் மற்றும் வட இந்திய ஆட்சியாளர்கள் பற்றிய விவரத்தையும் அடுத்த பதிவில் நான் தெரிவிக்கின்றேன்..

மீண்டும் சந்திப்போம்…

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: