கண்ணாடி தாத்தா கதை சொல்றார்

இரண்டு பாட்டிகள்

“எல்லா குழந்தைகளும் வந்தாச்சா? சரி! அவங்க, அவங்க இடம் பார்த்து ஒக்காந்துக்கங்க.. தள்ளி தள்ளி உட்காரணும்.. புரிஞ்சுதா?”

“குட் ஈவினிங் தாத்தா!!”

“குட் ஈவினிங்.. சென்ற வாரம் நான் என்ன கதை சொன்னேன்? எல்லோருக்கும் ஞாபகம் இருக்கா?”

“இருக்கு தாத்தா..! 3 வாரமா ஃப்ரண்ஷிப் பத்தி சொல்லி இருக்கீங்க”

“வெரி குட் !!நல்லா ஞாபகம் வச்சு இருக்கீங்க.. இந்த வாரம், பிரெண்ட்ஷிப் பத்தி சொல்ல போறது இல்ல.. அதுக்கு பதிலா, நாம God கிட்ட எப்படி faithful ஆ இருக்கணும்னு சொல்லப் போறேன்.. அதுக்காக உங்களுக்கு ரெண்டு கதை வச்சிருக்கேன்.. கதைக்கு போலாமா?”

“ஓ.. கேரிஆன் தாத்தா!!”

“உங்களுக்கெல்லாம் அவ்வைப் பாட்டி தெரியுமா? அந்த பாட்டி ஒரு போயட்… தமிழ்ல நிறைய பாட்டெல்லாம் எழுதி இருக்காங்க.. அந்த பாட்டிக்கு, முருகன் ஒம்மாச்சிகிட்ட  ரொம்ப பக்தி.. ஒரு நாள், ஒரு ஊரிலிருந்து, இன்னொரு ஊருக்கு போயிட்டு இருந்தாங்க..அப்போ வழியில ஒரு நாவல் மரம் பார்த்தாங்க.. நாவல் பழம்  தெரியுமா? இங்கிலீஷ்ல ஜம்புஃப்ளம்  அப்படின்னு சொல்லுவாங்க.. அந்த பழம் வயலட் கலரில் இருக்கும்.. ரொம்ப டேஸ்டியா இருக்கும்..அந்த மரத்தை பார்த்ததும் பாட்டிக்கு பழத்தை சாப்பிடணும் அப்படின்னு ஆசை.. மரக்கிளை நிறைய பழம் பழுத்திருந்தது.. ஆனால் பாட்டிக்கு அது எட்டவில்லை.. குதித்து பழம் பறிக்கவும் முடியாது.. ஏன்னா! பாட்டிக்கு வயசு ஆயிடுத்து.. ஆனா பழம் சாப்பிடணும்னு ஆசையாக இருந்தது.. அப்பத்தான் மரத்து மேல ஒரு  மாடு மேய்க்கிற பையன் உட்கார்ந்து இருந்தான்.. அவன் பாட்டிய பார்த்து,

“என்ன பாட்டி? நாவப்பழம் வேணுமா?”அப்படின்னு கேட்டான்..

பாட்டியும் “ஆமாம்பா பழம் சாப்பிடணும்னு ஆசையாத்தான் இருக்கு.. ஆனா எட்ட மாட்டேங்குது..” அப்படின்னு சொன்னா..

“நான் வேணும்னா பறிச்சு போடவா?” அப்படின்னு கேட்டான்..

ரொம்ப சந்தோஷமா” பறிச்சு போடு” அப்படின்னு பாட்டி சொன்னாள்..

“சரி பாட்டி! நான் பறிச்சு போடறேன்..ஆனா! உனக்கு சுட்ட பழம் வேண்டுமா ?சுடாத பழம் வேண்டுமா?” அப்படின்னு கேட்டான்..

பாட்டி புரியாமல்” ஏம்பா?பழத்துல சுட்டது, சுடாதது ,அப்படின்னு இருக்கா?” என்று கேட்டு “பரவாயில்லை சுடாத பழமா போடு” அப்படின்னு சொன்னார்..

அந்தப் பையன் மரக்கிளையை ஆட்டினான்.. பழங்களெல்லாம் கீழே விழுந்தது.. பாட்டி பழங்களை பொறுக்கினா.. அந்த பழங்களில் மண்ணு ஒட்டியிருந்தது.. பாட்டி கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பழமா” ஃ பூ..ஃபூ” அப்படின்னு ஊதி சாப்பிட வாயருகே கொண்டு போனாள்..

மரத்து மேல இருந்த அந்த பையன் பாட்டியைப் பார்த்து” ஏன் பாட்டி பழம் சுடுதா? என்று கேட்டான்..

பாட்டி “அடடா! நாமதான் தமிழ்ல ரொம்ப பெரிய ஆளு அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா என்னையும் ஒரு  சின்ன பையன் மடக்கிட்டானே ” அப்படி என்று அவனை பார்த்து” யாரப்பா நீ? என்னோட தமிழோடு விளையாடறே” அப்படின்னு கேட்டார்..

அந்தப் பையன் மரத்துல இருந்து குதிச்சான்..” திடீர்னு பாட்டி என்ன தெரியலையா? இப்ப பாரு!!”

அப்படின்னு சொல்லி கையில வேலோட முருகப் பெருமான் காட்சி கொடுத்தார்..பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம்.. “ஆஹா! முருகா! நீயா? என்னோடு விளையாட வந்தியா? என்னோட தமிழ் உன்னோடது.. உனக்கு மிஞ்சி நான் ஒன்னும் பெரிய ஆளு இல்ல” அப்படின்னு சொல்லிட்டு முருகனை வணங்கினாள்..

இப்போ அடுத்த கதைக்கு போவோம்..

“நம்ம தமிழ்நாட்டுல மதுரைன்னூ ஒரு ஊர் இருக்கு உங்களுக்கு தெரியுமில்லையா?”

“தெரியும் தாத்தா…எங்க பாட்டி தாத்தா கூட அங்க தான் இருக்காங்க”

“சரி !அந்த ஊர்ல எது ஃபேமஸ்? தெரியுமில்லையா? மதுரை மீனாட்சி அம்மன் கோயில்..”

அந்த கோயில் வாசல்ல வந்தி அப்படின்னு ஒரு பாட்டி இருந்தாள்.. அந்த பாட்டி தினமும் ஒரு கூடையில புட்டு செஞ்சி வியாபாரம் பண்ணிட்டு இருந்தா.. ஆனா,வியாபாரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி தினமும் கோயில் உள்ள போயி, சொக்க நாதனையும் மீனாட்சியையும் தரிசிக்காமல் வரமாட்டார்.. உங்களுக்கு புட்டு அப்படின்னா என்னன்னு தெரியுமா? இங்கிலீஷ்ல புட்டிங் அப்படின்னு சொல்லுவாங்க.. அரிசிமாவு,வெல்லம் கலந்து, தேங்காய் போட்டு, ஆவியில் வேக வைத்து ஒரு குழாயில் போட்டு புட்டு செய்வாங்க ..அது நீளம் நீளமா உருளையா இருக்கும்.. இப்படி தினமும் அவ வியாபாரம் செஞ்சிண்டிருந்தா..

ஒருநாள்,வைகை ஆத்துல வெள்ளம் அதிகமாகி கரையெல்லாம் ஓடச்சிண்டு ஓட ஆரம்பித்தது.? அதனால, அங்க இருந்த வீடுகள் எல்லாம் தண்ணீர் புகுந்தது.?அங்கே இருந்த மக்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. அந்த ஊரை ஆண்டு வந்த ராஜா ஒரு ஆர்டர் போட்டார்.. என்ன? வீட்டுக்கு ஒரு ஆள் வந்து மண்ணை எடுத்து அந்த வைகைக் கரையை சரி பண்ணனும், அப்படின்னு..

ராஜா உத்தரவு போட்டதும், அதேமாதிரி வீட்டுக்கு ஒருத்தர் கையில கூடை, மண்வெட்டி எடுத்து ஆற்றங்கரைக்குப் போய் மண்ணை வெட்டி கரையில் போட்டாங்க. ஆனா, நம்ம வந்திக் கிழவி, தனி ஆளு, அவளுக்குன்னு யாருமே இல்ல.. நாம போயி எப்படி மண்ணள்ளி போடறது? வயசாறது!! ராஜா உத்தரவ மீறமுடியாது !! அப்படின்னு  ரொம்ப வருத்தப்பட்டு” சொக்கநாதா! என்ன இது சோதனை? நீதான் காப்பாத்தணும்” அப்படின்னு வேண்டினா..

அந்த நேரத்துல, ஒரு ஆளு, சின்ன வயசு, ஒரு மம்முட்டியும், கூடையையும் எடுத்து வந்து பாட்டி கிட்ட “பாட்டி!! உனக்கு பதிலா நான் வேணும்னா மண்ணெடுத்து போடட்டுமா?” அப்படின்னு கேட்டான்..

பாட்டி “ரொம்ப சந்தோஷம்பா; செய்யப்பா” அப்படின்னு சொன்னார்..

“நான் சும்மா செய்ய மாட்டேன்.. எனக்கு என்ன தருவ?” அப்படின்னு அந்த ஆளு கேட்டான்..

“என்கிட்ட என்னப்பா இருக்கு இந்த புட்டும் கொஞ்சம் காசு இருக்கு உனக்கு என்ன வேணும்?” அப்படின்னு பாட்டி கேட்டாள்..

அதுக்கு அவன் “பாட்டி எனக்கு புட்டே குடு.. முழுசு கூட வேண்டாம் உடைஞ்சு போன தூண்டு புட்டுகளே.. எனக்கு கொடு” அப்படின்னு சொன்னான்..

பாட்டியும் சரி அப்படின்னு ஒத்துண்டா..

“சரி! எனக்கு முதல்ல கொஞ்சம் அட்வான்ஸா புட்டுக்கொடு..” அப்படின்னு கேட்டு கொஞ்சம் வாங்கி சாப்பிட்டுட்டு, கூடை எடுத்துண்டு, மண் வெட்டியோட,ஆத்தங்கரைக்கு போனான்.. அங்க போய், அவன் வேலை எதுவும் செய்யல..

சும்மா அங்கே இங்கே ஓடி ஆடி பாடி கிட்டு இருந்தான்.. வேலை செய்யறவங்களை எல்லாரையும் சூப்பர்வைஸ் பண்ணிகிட்டு இருந்த காவலாளிகள் எல்லாம் இவன் இப்படி ஏமாத்துறானேன்னு கோவப்பட்டு அவ முதுகுல பெரம்பாலா ஓங்கி அடிச்சா..பெரம்புன்னா என்ன தெரியுமா? ஸ்டிக்..”

அடுத்த நிமிஷம் அந்த அடி அந்த ஊரில் இருந்த எல்லார் முதுகிலும் பளீர் அப்படின்னு விழுந்து, வலிச்சது,. அந்த அடி ராஜா முதுகிலும் விழுந்தது.. எல்லோருக்கும், யாருக்கும் ஒன்றும் புரியல.. மறுபடியும் அந்த காவலாளி அந்த ஆளு முதுகில பெரம்பால் அடிச்சான்.. இப்பவும் அதே மாதிரி எல்லோரும் முதுகிலயும் அடி விழுந்தது.. ராஜா உடனே அங்கே வந்து” என்ன நடந்தது?” அப்படின்னு கேட்டார்.. காவலாளி, எல்லாம் நடந்த விஷயத்தை அவர் கிட்ட சொன்னாங்க..

இந்த ஆளு யாருன்னு தெரியலையே அப்படின்னு ராஜா ரொம்ப குழம்பி” நீ…. நீங்க யாரு?” அப்படின்னு கேட்டார்..

உடனே அந்த ஆளு மறஞ்சி, அவருக்கு பதிலா அந்த ஊர்ல கோயில்ல இருக்கிற சொக்கநாதர் நின்றார்.. பின்னர் ராஜாவுக்கு ஒன்றும் புரியலை..

“ஐயோ சொக்கநாதா!! சொக்கநாதரையா நாம அடிச்சோம் “அப்படின்னு அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் ராஜா..

சொக்கநாதரும் ” ராஜா!! இது உன் தப்பு இல்ல!! சும்மா, அந்த வந்திக் கிழவி தினமும் என்ன வந்து பார்க்கிறாளே, அவளுக்காக நாம போய் ஏன் வேலை செய்யக் கூடாது ?அப்படின்னு சொல்லி, இந்த வேலையை செய்ய வந்தேன்” அப்படின்னு சொல்லிட்டு, வைகைக் கரையை தன்னோட சக்தியாலேயே சரிபண்ணிட்டார்..

வந்திக் கிழவியும்” சொக்கநாதா!! இந்த ஏழைக் கிழவிக்காகவா இவ்வளவு தூரம் நீ வந்து கஷ்டப்படணும்” அப்படின்னு சொல்லி, கண்கலங்கி, சாமி கால்ல விழுந்தார்..

இந்த கதையிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது? அதாவது, நாம God கிட்ட ரொம்ப அன்பா, faithful ஆ இருந்தா, அவர், நம்மளோட எல்லா கஷ்டத்தையும் சரி செய்வார்; நம்ம கூடவே இருப்பார், அப்படின்னு சொல்லத்தான் இந்த கதையை உங்களுக்கு சொன்னேன்..

நீங்களும், இனிமே தினமும், காலையிலும் ,இரவு படுக்கப் போகும் முன்பும், கடவுளை வேண்டி “என்னுடனேயே எப்போதும் இருக்கணும் கடவுளே!” அப்படின்னு வேண்டிண்டா, அவர் உங்களோடு இருப்பார்.. உங்களுக்கு நல்ல படிப்பை கொடுப்பார்; நல்ல ஆரோக்கியமான உடம்பு கொடுப்பார்; எந்தவிதமான வியாதியும் வராது..வராது…”

“என்ன செய்யறீங்களா?”

“ஓஓஓஓ… தாத்தா! நீங்க சொன்ன மாதிரியே செய்கிறோம்!!”

“ஓகே! குட்நைட்! எல்லாரும் போய் நல்லா தூங்குங்க.. ஆல் தி பெஸ்ட்!!”

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: