அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் சித்தேடெக் மகாராட்டிரம்

சென்ற விநாயகர் சதுர்த்தியன்று மகாராஷ்டிரத்தில் உள்ள எட்டு விநாயகர் கோவில்கள் பற்றி ஒவ்வொரு சதுர்த்தி என்றும், தங்களுக்கு விவரங்கள் பதி விடுவதாக சொல்லி இருந்தேன்,.

.

அன்றைய தினம், மகாராஷ்டிரத்தில் மோர்கோன் என்ற இடத்தில் உள்ள மோரேஷ்வர் என்கின்ற கணபதி கோயில் பற்றி தெரிவித்திருந்தேன்.. இன்றைய தினம் தங்களுக்கு மகாராஷ்டிரத்தில் உள்ள அகமது நகர் மாவட்டம் சித்தேடெக் என்ற இடத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பற்றி பதிவிடுகின்றேன்..

இந்த சித்தி விநாயகர் கோவில், மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம், கர்ஜெட் தாலுகாவில், ஆற்றின் கரையில் சித்தாடெக் கிராமத்தில் உள்ளது..இக்கோயில் அஷ்ட விநாயகர் தலங்களில் ஒன்றாகும்..

கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் குவாலியர் ராணி அகல்யாபாய் என்பவரால் இக்கோயில் சீரமைக்கப்பட்டது..

இந்தக் கோயில் புனேயில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் புனே- சோலாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ளது.. கர்ஜர் தாலுகாவில் “ஸ்ரீ கொண்ட்” என்ற நகரில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் சிறிய மலை மீது அமைந்துள்ளது..

வலஞ்சுழி பிள்ளையார், சித்தியும் புத்தியும் தொடை மீது அமர்ந்து இருக்க, பெரும் புகழோடு விளங்குகிறார்.. முன்பு, மது, கைடபர்களை வதைப்பதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகரின் உதவி கோரினார் என்றும், அதற்கு நன்றியாக இங்கு ஆலயம் கட்டி லம்போதரரை, பிரதிஷ்டை செய்தார் என்றும் தலபுராணம் தெரிவிக்கிறது.. இக்கோயிலை, ஒரு முறை பிரதட்சிணம் செய்ய வேண்டுமானால் மலையைச் சுற்றி அரைமணிநேரம் வலம்வர வேண்டும்.. கோரின வரம் அளிக்கும் விநாயகர் என்பதால், பக்தர்கள் சிரத்தையுடன் கிரி பிரதிட்சணம் செய்கின்றனர்..

இங்கு மூன்றடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள விநாயகமூர்த்தி கவசம் அணிந்து, வடக்கு பார்த்து அமர்ந்து, ஜெய விஜயர்கள் காவலுக்கு இருக்க, காட்சி தருகிறார்.. இந்த தலம் அமைதிக்கு பெயர் போனது.. பீமா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கூட, இந்த ஆலயத்தின் அருகில் சத்தம் செய்யாமல் அமைதி காக்கும் என்பது நியதி..

பேஷ்வா விடம் பணியாற்றி வந்த ஹரி பந்த் படாகே என்பவர் சேனாதிபதி பதவியை இழந்த பின் இந்த ஆலயத்தை சுற்றி இருபத்தொரு பிரதிட்சணங்கள் செய்து வந்தார்.. 21ஆம் நாள், பேஷ்வாவிடமிருந்து இவருக்கு கௌரவ மரியாதையோடு அழைப்பு வந்து, இழந்த பதவி திரும்பக் கிடைத்தது.. அப்போது, அவர் விநாயகரிடம், தான் முதன் முதலில் வெல்லும் கோட்டையின் கற்களை எடுத்து வந்து கோயிலுக்கு பாதை அமைப்பதாக பிரதிக்ஞை செய்தார்.. அதன்படி, ஆலயத்திற்கு செல்லும் பிரதான சாலையை பேஷ்வாவின் சேனாதிபதியார் அதன்படி கட்டியுள்ளார்..

அகல்யா பாய் ஹோல்கர், கர்ப்பகிரகத்தை 15 உயரம் 10 அடி அகலத்திற்கு உயர்த்தியுள்ளார்..

அன்பார்ந்த வாசகர்களே!! தங்களுக்கு அந்த பகுதியில் பிரயாணம் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அவசியம் இந்த கோவிலை தரிசனம் செய்யுங்கள்..

Dear readers

In my Last Post,, I have mentioned that I will post the details of of all the the eight temples of Lord Vinayaka in Maharashtra, one after another,. In my last post, I have detailed about the Moregon Vinayaka called Moreshwar. Now we will see about the Siddhivinayak at siddhatek near Pune..

The history of the temple would goes to say that, Lord Vishnu was engaged in fight with demons Kaitaba and Madhu.. Lord Vinayaga helped him in the fight..To thank him, Lord Vishnu established this temple.. Another idol is found here is made by Ahalyabai Holkar, the Queen of Gwalior.. This is very a silent place, where even the floods caused by river Bhima, don’t make any noise here.. The idol of of Lord Ganesha here is placed in a brass frame.. On both sides of this idols, there are idols of Vijaya and Jaya made out of brass.

This temple is located on the top of a small hill.. going around the temple is itself taking a time of half an hour, but Bakthas have the pride to go around temple..

Dear readers, if you have an opportunity, to go in that area, please make a a visit to the temple without fail..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: