சென்ற பதிவில், அடுத்த வாரம், உப வேதங்கள் பற்றி சொல்வதாக பதிவு செய்திருந்தேன்.. அந்த உப வேதங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்..
உபவேதங்களுக்கும், உபநிஷத்துக்களுக்கும், வித்தியாசம் உண்டு.. உபநிஷத்துகள், வேதத்தின் முடிவில், அந்த வேதத்தின் சாரம் கொண்டு தொகுக்கப்பட்டவை.. ஆனால், உபவேதங்கள், முதல் வேதாந்தங்களுக்கும், இதற்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை..
உபவேதங்கள், பல்வேறு துறையை சார்ந்த தொழில்நுட்ப தகவல்களால் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.. இவை வழிவழியாக, தலைமுறைகளாக, வேதகால முனிவர்களால் ,அந்தக் காலம் முதல், கைமாற்றி வந்துள்ளன. ரிக், சாம மற்றும் அதர்வண வேதத்தின் ஆதாரங்கள் மூலம் நான்கு உப வேதங்கள் தோன்றின.. இவை வேதாகமங்களின் பின்னிணைப்பாக கருதப்படுகிறது.. அவைகள்:-
1) ஆயுர்வேதம்

வாழ்க்கை குறித்த அறிவியல் இது.. அதர்வண வேதத்தை சார்ந்தது.. இது இந்திய துணைக்கண்டத்தின் மரபுவழி மருத்துவ முறையாகும்.. நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்று பொருள் தருவது.. தெற்காசிய நாடுகளில், மிகவும் பிரசித்தி பெற்ற துறையாகும்.. இந்திய மருத்துவத் துறையில் நடைமுறைகள் குறித்த மிகப் பழமையான நூல்கள் வேதகாலத்தில் தோன்றின.. சுஸ்ருத சம்ஹிதை, சரக சம்ஹிதை என்பன அக்காலத்து மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த மருத்துவர்கள், பல்வேறு நோய்களை குணமாக்கும் மருந்து களையும், அறுவை சிகிச்சை முறைகளையும், கண்டறிந்தனர்..
திருமாலின் அவதாரமான தன்வந்திரி மருந்துகளுக்கும் உடல் மற்றும் மன நலத்திற்கும் இறைவனாக கருதப்படுகிறார்.. ருத்ரன் தேவர்களின் மருத்துவராகவும், தேக ஆரோக்கியத்திற்கு அஸ்வினி களுக்கும் பங்கு உள்ளது.. சரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள், ஆயுர் வேதத்தில் சிறந்தவர்கள்.. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்கிய குணங்களுக்கு இணையாக, ஆயுர்வேதத்தில் வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று குணங்கள் கூறப்படுகின்றன.. வாதம், உடல் நலத்தை சீர்படுத்துவதுடன் மற்ற இரண்டிற்கும் உந்து விசையாக உள்ளது.. பித்தம், உடலுக்கு வெம்மை அளித்து இயக்குகிறது.. கபம், ஜடத் தன்மை கொண்டது..
ஆயுர்வேதத்தின் அங்கங்களாக, கீழ்க்கண்ட வகைகள் உள்ளன:-
1 கற்பம்:. அறுவை சிகிச்சை மகப்பேறு..(surgery)
2. சாலக்யம்.: கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளை சரி செய்தல்..(E.N.T)
3. காய சிகிச்சை:. உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்..(General physician)
4. பூத வித்தை:. மன நலம் பேணுதல்..(Psychiatry)
5. குமார பிரியா: . குழந்தை வளர்ப்பு..(Pediatric)
6. அக்தம்: முறி மருந்துகள் அளித்தல்.(Anti venom)
7. ரசாயன தந்திரம்:. ஆயுள் நீட்டிப்பிற்கான மருந்துகளைப் பயன்படுத்துதல்..( General vitamins)
8. வாஜீ கரணம்:. புத்துயிர்ப்பு மருத்துவம்(Rejunuvation).
அடுத்து நாம் பார்க்க இருப்பது சில்ப வேதம்( Architecture)

இது அதர்வண வேதத்தின் உபவேதம்.. சிற்பக் கலை மற்றும் கட்டிடக் கலையை விவரிக்கின்றது..
அடுத்து தனுர் வேதம்(Defence)
இது ரிக் வேதத்தை சார்ந்தது.. இது போர்க் கலைகள் மற்றும் ஆயுதங்கள், குறித்த அறிவியல் ஆகும்..
உப வேதங்களின் இறுதியாக பார்க்க இருப்பது காந்தர்வ வேதம்..(culture)..
இது சாம வேதத்தின் உபவேதம் ஆகும்.. இது,இசை மற்றும் நாட்டிய கலை சார்ந்த அறிவியல் ஆகும்.. பரதமுனிவர், நாட்டிய சாஸ்திரம் எனும் காந்தர்வ வேதத்தினை இயற்றியவர் ஆக கருதப்படுகிறார்..இதன் அடிப்படையில் தோன்றியதே பரதநாட்டியம் ஆகும்.

. இந்த கலை கிமு 500 முதல் கிபி 500 வரை வளர்ச்சி அடைந்ததாக கருதப்படுகிறது.. காந்தர்வ சாஸ்திரம் முப்பத்தாறு அதிகாரங்களில், 6000 ஸ்லோகங்களை கொண்டதாக உள்ளது..
அடுத்து நாம் பார்க்க இருப்பது உபநிஷத்துக்கள் அல்லதுஉபநிடதங்கள்
பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் உபநிடதங்கள் ஆகும்.. இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது.. வேதங்களில், இவை அந்தமாக (இறுதியாக) வந்தவையாகும்.. எனவே இவை வேதாந்தம் என்று அழைக்கப்பட்டன..
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவைகள் இலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும், குருவும் அவரது சீடர்களும் விவாதிக்கப்பட்ட வகைகளிலே இதனை அமைத்துள்ளனர்.. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை..
நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன.. எல்லா சாகைகளும் தற்காலத்தில் காணப்படவில்லை.. ஒவ்வொரு வேத சாகை முடிவிலும் ஒரு உபநிஷத்து இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.. பற்பல சாகைகள், இன்று இல்லாமல் போனாலும், நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் நமக்கு கிடைத்துள்ளன.. வேதங்களில் உள்ள சடங்குகளை பற்றிய விபரங்களும், அவற்றில் எங்கும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் தெய்வ ,அசுரர்கள் உடைய பரிமாற்றல்களும், இன்றைய விஞ்ஞான உலகத்திற்கும் ஏற்புடையதா என்று ஆராயாமல், அதனை ஒருபுறம் ஒதுக்கி தள்ளிவிட்டு ,வேதப் பொருளை பலத்தை அறிய முயலும் யாரும் உபநிஷத்துக்களில் உள்ள தத்துவங்களினால் கவரப்படாமல் இருக்க முடியாது.. அதனாலேயே இந்துசமயத்தின் தத்துவ செறிவுகள், உபநிஷத்துக்களில் தான் இருப்பதாக மெய்யியலாளர்கள் எண்ணுகிறார்கள்..
இந்த உபநிஷத்துக்கள் பற்றி விரிவாக அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்..
மீண்டும் சந்திப்போம்