சுதாமாவின் கதை

“வெல்கம் டு தி நியூ வென்யூ ஆல் மை ஆல் சில்ரன்.. இந்த புது இடத்திற்கு நீங்கள் எல்லாம் வந்தது ரொம்ப சந்தோசம்.. போன வாரம் சொன்ன மாதிரியே இந்த வாரம் நாம இந்த அசோசியேசன் மீட்டிங் ஹாலுக்கு வந்திருக்கோம்.. இந்த ஹாலை ஒதுக்கி தந்த நம்ம ஃபிளாட் அசோசியேஷன் செகரட்டரிக்கு எல்லோரும் தேங்க்ஸ் சொல்வோமா?”
“தேங்க்யூ சார்…”
“இந்த இடத்தில் நீங்கள், எதையும் தொடக்கூடாது..சுவற்றில் ஏதும் கிறுக்கக்கூடாது.. சுத்தமா வச்சிக்கணும்.. குறும்புத்தனம் செஞ்சு எதையும் உடைக்காமல் இருக்கணும்… என்ன?? புரிஞ்சுதா?”
“ஓகே தாத்தா!”
“ஒரு நிமிடம் எல்லோரும் வெயிட் பண்ணனும்.. உங்க தாத்தா டேபிளட்ஸ் போட்டுக்கிட்டு வந்துடறேன் .. நீங்க வர்ற டைம் ஆச்சு;மீட்டிங் ஹாலை திறந்து வைக்கணுமேன்னு வந்தேன், டேபிளட்ஸ் போட மறந்துட்டேன்.. ஒன்லி பியூ மினிட்ஸ்…”
“ஏன் தாத்தா? உடம்பு ஏதும் சரியில்லையா? நாங்க வேணும்னா. அடுத்த வாரம் வரவா?”
“நோ..நோ.. உடம்புக்கு ஒன்றுமில்லை.. இது நார்மலா சாப்பிடறதுதான்.. வயசு ஆகிறது இல்லையா.. இதெல்லாம் போட்டா தான் இந்த வண்டி ஓடும்..”
“நீங்க என்ன வண்டி வச்சிருக்கீங்க தாத்தா? உங்ககிட்ட ஒன்றுமில்லையே?நீங்க நடந்தே தானே போறீங்க?”
“கொஞ்சம் பொறுமையா இருங்க, நான் வந்து பதில் சொல்றேன்..”
(கொஞ்ச நேரம் போனது….)
“ஆங்…நீ என்ன கேட்ட ?என்ன வண்டின்னா ?இந்த உடம்பே வண்டிதான்.. வாழ்க்கை ஓடற சைக்கிள் சக்கரம் மாதிரி,கீழே இருந்து மேலே; மேலே இருந்து கீழே ;ஆனால்,நான் இப்ப சொல்லப் போற கதையில கீழே இருந்த ஒருவர் எப்படி மேலே போனார்? அவர் திரும்ப கீழே வரவே இல்லை.. என்பதைப் பற்றி சொல்ல போறேன் கேட்கிறீர்களா?”
“ஓ ஓ!!!கேட்கிறோம் தாத்தா!_
“போனவாரம் கண்ணன் ஒம்மாச்சியோட பேட் பிரெண்ட்ஷிப் பத்தி சொன்னேன் இல்லையா? இந்த வாரம் அவரோட குட் பிரெண்ட்ஷிப் பத்தி சொல்றேன்”
கண்ணன் குரு குலத்தில் (ஸ்கூல்) படிச்சிட்டு இருந்தப்போ, அவருக்கு சுதாமா அப்படின்னு ஒரு பிரெண்ட்..இரண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.. என்ன ஒண்ணு!! கண்ணன் பணக்காரன்..

ஆனா! சுதாமா ஏழை..ரெண்டு பேரும் படிப்பை முடிச்சு பெரியவங்க ஆயிட்டாங்க.. சுதாமாவுக்கு கல்யாணம் ஆச்சு.. நிறைய குழந்தைகள்….. கண்ணனுக்கும், ருக்மிணியோட கல்யாணம் ஆச்சு.. சுதாமா ரொம்ப ஏழை இல்லையா? காசு கிடையாது..குழந்தைங்க வேற நிறைய பேர்.. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அப்ப, ஒருநாள் சுதாமாவோட பொண்டாட்டி,” உங்களுக்கு தான் கண்ணன்னு ஒரு பணக்கார ஃப்ரண்ட் இருக்காரு; அவரைப் போய் பார்த்து நம்ம கஷ்டத்தை எல்லாம் சொன்னா…அவர் ஏதும் ஹெல்ப் பண்ண மாட்டாரா?” அப்டின்னு கேட்டா.. சுதாமாவுக்கு ரொம்ப தயக்கமா இருந்துச்சு.. ஆனா குழந்தைங்க சாப்பாட்டுக்ககே கஷ்டப்படும் அப்படின்னு ரொம்ப கவலை.. அதை நினைச்சு,” சரி நான் போய் வருகிறேன்.. ஆனால், முதல் முதலா ரொம்ப நாள் கழிச்சி பிரண்டை பார்க்கப் போகிறேன்.. வெறும் கையோட எப்படி போறது? ஏதாவது பழம் பட்சணங்கள் கொண்டு போகலாம், அப்படின்னா, நம்ம கிட்ட காசு கூட கிடையாது” என்று ரொம்ப வருத்தப்பட்டார்.. அப்ப சுதாமாவோட பொண்டாட்டி “இருங்க…ஒரு பிடி அரிசி இருக்கு, அதை உரலில் குத்தி அவல் ஆக்கி தருகிறேன்” அப்படின்னு சொன்னா..உங்களுக்கு தெரியுமா அவல்.. ரைஸ் பிளேக்ஸ்…கார்ன் ப்ளேக்ஸ் மாதிரி “
அவர் அவலை தமது கிழிந்த மேல் துண்டின் ஒரு மூலையில் வைத்து முடிஞ்சி எடுத்துக் கொண்டு, கண்ணனைப் பார்க்க போனார்.. கண்ணனின் அரண்மனை மிகவும் பெரியது…பார்த்ததும் மலைச்சு நின்னார்..ஆனால் ,கண்ணன் இவரை பாத்ததும் வரவேத்து, காலை எல்லாம் அலம்பிவிட்டு, ஒரு சேரில் உட்கார வச்சார்..

இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டித்தழுவி க்ஷேம லாபங்களை எல்லாம் பேசிண்டு இருந்தா.. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தா..

கண்ணனுக்கு, சுதாமா ஏதோ கொண்டு வந்து இருக்கார் அப்படின்னு தெரியும்.. ஆனா, சுதாமாவுக்கு அந்த ஒரு பிடி அவலை இவ்வளவு பெரிய பணக்காரனுக்கு எப்படி கொடுப்பது அப்படின்னு ரொம்ப யோசிச்சு கூச்சப்பட்டார்.. கண்ணன் அதை புரிந்து கொண்டு சுதாமாவின் தோளில் இருந்த அந்த சிறிய மூட்டை என்னது? என்று கேட்டார்.. சுதாமா, தயங்கி தயங்கி, கொஞ்சமா அவல் கொண்டு வந்தேன்.. அப்படின்னார்.. கண்ணனுக்கு ஒரே சந்தோஷம்..”.சுதாமா, எனக்கு பிடிச்ச அவலை வச்சிண்டு இவ்வளவு நேரம் கொடுக்காமல் இருந்தியா?” அப்படின்னு செல்லமா கோவிச்சிண்டார்..சுதாமா கொண்டு வந்த அவலை வாங்கி ஒரு பிடி வாயில் போட்டுக் கொண்டார்..
அதன்பின் இருவரும் சாப்பிட்டனர்.. சுதாமாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு வயிறார சாப்பாடு கிடைச்சது..சாப்பிட்டு முடிந்சதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு ,சுதாமா வீட்டுக்கு புறப்பட்டார்.. கண்ணனிடம் தன் கஷ்டத்தை பற்றி கூறவில்லை..கண்ணனும் சுதாமா வந்த விஷயம் பத்தி ஒன்றும் கேட்கவில்லையே? கண்ணனிடம் ஒன்றும் கேட்க முடியவில்லையே, என்று வருத்தத்துடன் வீடு திரும்பினார்.. வீட்டின் அருகே வந்ததும் பார்த்தால் அவரது குடிசை வீடு அரண்மனையாக மாறி இருந்தது.. குழந்தைகள் எல்லாம், பட்டு டிரஸ் போட்டுட்டு இருந்தா.. சுதாமாவோட பொண்டாட்டியும் புது புடவை கட்டி, கழுத்து நிறைய நகைகள் போட்டுண்டு இருந்தா.. வீடு முழுக்க செல்வம் செழிப்பாக இருந்தது..
“கண்ணன்… சாப்பிட்ட ஒரு பிடி அவலுக்கே, தான் கேட்காமலேயே இவ்வளவு செல்வத்தை வாரி கொடுத்து இருக்கான் கண்ணன்.. அப்படின்னு ரொம்ப ஆச்சரியப்பட்டார்.. ஆனால், அவருக்கு தலைகனம் ஏறல.. அதுக்கு பதிலா, கண்ணனிடத்தில் பக்தியும் பாசமும் அதிகமாச்சு..”
“என்ன குழந்தைகளே!! நீங்களும் கண்ணன் உம்மாச்சி கிட்ட தினமும் வேண்டிக் கொண்டால் உங்களுக்கும் படிப்பு நன்னா வரும் ..அதுக்கப்புறம் நல்ல வேலை கிடைக்கும்.. நல்லா சம்பாதிக்கலாம்.. என்ன புரிஞ்சுதா?”
“சரி எல்லோரும் வீட்டுக்கு போய் நல்லா தூங்குங்க. தினமும் காலையிலும், இரவு படுக்கப் போகும்போதும் கண்ணன் உம்மாச்சிய நெனச்சி ப்ரார்த்தனை பண்ணனும்.. என்ன சரியா? அடுத்த வாரம் வேற ஒரு கதையோடு மீட் பண்ணலாம் ஓகே? குட் நைட்…”
“குட்நைட் …தாத்தா”