
இந்தத் தலம் வேலூர்-ஆம்பூர் பாதையில்,சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலையில், திருப்பத்தூர் பாதையில், 23 கிலோமீட்டர் பிரியும் குடியாத்தம் பாதையில், ஒரு கிலோமீட்டர் பயணித்தால் வலப்புறம் அமைந்துள்ளது..இந்த தலம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..
நான் சென்ற ஜனவரி மாதம், 12ஆம் தேதி, இந்தத் திருக்கோயிலை தரிசனம் செய்தேன்..
ஒருமுறை லட்சுமிக்கும், சரஸ்வதிக்கும், தம்மில், யார் பெரியவர் என்கிற ஒரு சர்ச்சை எழுந்தது..அதற்கு பிரம்மன் நடுநாயகமாய் நின்றதால், சரஸ்வதி கோபித்துக்கொண்டு, பிரம்மனை விட்டு பிரிந்தாள்.. பிரம்மன் ஒரு யாகம் செய்ய வேண்டி, தம்முடைய துணைவி சரஸ்வதிக்கு பதிலாக, காயத்ரி தேவியின் துணை கொண்டு யாகம் செய்தார்.. அப்போது க்ஷீர நதி (பாலாறு) உருக்கொண்டு சரஸ்வதி, அந்த யாகத்தை அழிக்க முற்பட்டாள்.. பிரம்மன், மகாவிஷ்ணுவை வேண்டினார்.. ஸ்ரீ மஹாவிஷ்ணு பாலாற்றின் குறுக்கே பள்ளிகொண்டு தடுத்ததாகவும், இவ்வாறு அவர் மூன்று தலங்களில் செய்ததாகவும் கூறப்படுகிறது..அவை, இந்த தலம்,திருப்பாற்கடல் மற்றும் காஞ்சி யதோத்தகாரி என்றும் கூறுவர்.. அதில், முதல் தலம், இந்த வடரங்கம் ஆகிய இதுவே ஆகும்..

பிரம்மனின் யாகத்தில், நெருப்பில் வரதராஜர் தோன்றியதால், அவர் முகத்தில் தீக்காயம் தெளிவாக தெரியும்

பிரம்மனுக்காக யாகத்தில், வரதராஜர் தோன்றியதற்கு, பெருமாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பிரம்மன் நிகழ்த்திய வைபோகமே, பிரம்மோற்சவம் ஆக இன்றும் கருதப்படுகிறது..
பெரியாழ்வார் பாசுரமான, திருப்பல்லாண்டு,” உடுத்துக் களைந்த நின் பீதக வாடை…” என்ற பாசுரத்தில் “படுத்த பள்ளிகொண்டா னுக்குப் பல்லாண்டு கூறுதுமே” என்று குறிப்பிடுவது, இந்த தலத்தைப் பற்றியதுதான்.. கல்வி, செல்வம், ஆரோக்கியம் நல்கும் பெருமான்.
.

ஒருமுறை, திரேதாயுகத்தில்இந்திரன் இந்திராணியுடன் உலாவிய போது, கிளி வடிவில், தேவர்களுக்கு அசம்பாவிதம் செய்ததால், பிரம்மஹத்தி தோஷம் பெற்றான்..மரீசியின் புதல்வர் காஷ்யப முனிவரின் ஆலோசனையின் பெயரில், இந்த தலத்தில் உள்ள புஷ்கரணியில் அவன் ஓராண்டு தீர்த்தமாடி, வணங்கி, தோஷம் நீங்கப் பெற்றான் என்று தலவரலாறு கூறுகிறது.. சம்பாதி முனிவரின் விருப்பப்படி,பக்தை செண்பகவல்லியை பெருமாளுக்கு, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் எம்பெருமானுக்கு மணமுடித்த அதே பங்குனி உத்திர நாளன்று இந்த கோயில் அரங்கனுக்கு, செண்பகவல்லியை மணமுடித்தார்.

.குலோத்துங்கச் சோழனின் மகன் விக்கிரம சோழன் (கிபி 1118- 1136) வரையிலும், பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன
அம்பிரிஷி , பிரசித்த பிரம்ம யாக அவதார ஸ்தலம் இது..வடவரங்கன் ஸ்தலமான இதில், ஓர் இரவு தங்கினால், மோக்ஷம்; ஆனால், காஞ்சியில் மூன்று இரவுகள் தங்கினால் தான் மோக்ஷம் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது..
1925 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.. அதில் 22 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. அவற்றில் 18 கல்வெட்டுகள் உத்திர ரங்கநாதர் கோயிலிலும், மூன்று கல்வெட்டுகள் நாகனாதுசுவரர் கோயிலிலும், ஒரு கல்வெட்டு செல்லியம்மன் கோயிலிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. இக்கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் (கிபி 848),முதலாம் பராந்தகன் (கிபி 926) முதலாம் இராஜராஜன் (கி.பி 985), இரண்டாம் ஜடாவர்ம வீரபாண்டியன் (கி.பி 1306) மற்றும் குலசேகர சம்புவராயன் (கி.பி 1307)போன்ற மன்னர்களின், கொடை தந்த விவரங்களை குறிப்பிடுகின்றன..
பாலாற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த திருக்கோயில்.. கோயிலுக்கு இடப்புறம் வியாசர் புஷ்கரணி ;அடுத்து நான்கு கால் ஊஞ்சல் மண்டபம்; அடுத்து ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம்; கோயிலின் உள்ளே கொடிமரம், பலிபீடம் ,மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியன உள்ளன..வெளிப்பிரகாரத்தில், ராமானுஜர்,ராமர்,கண்ணன், ஆண்டாள்,கருடாழ்வார்,அனுமன், நாகர் சிலைகள் ஆகியவைகளுக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. ஸ்தல விருட்சம் பாரிஜாதம்..

மகா மண்டபத்தின் இடது பக்கம் உற்சவ மூர்த்திகளும், 12 ஆழ்வார்களும் உள்ளனர்.. பிள்ளை லோகாச்சாரியார், முதலி ஆண்டார், மணவாள மாமுனிகள், ஆளவந்தார் மற்றும் நவநீத கிருஷ்ணன் ஆகியோரின் திருமேனிகள் பாங்குடன் அமைந்துள்ளன.. மூலவர் பள்ளிகொண்ட பெருமாள் சாளக்கிராமத்தால் ஆனவர்.. திருவரங்கத்தில்” குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டித் ,தென்திசை இலங்கை நோக்கி” பள்ளி கொண்ட கோலம்.. ஆனால், இங்கே “தென்திசையில் முடியை வைத்து, வடதிசையில் திருப்பாதங்கள் நீட்டி “ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார்..மார்பில் திருமகளும், நாபியில் பிரம்மனும், பாதங்களின் பக்கம் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார் எம் பெருமான். திருக்கரம் “வா” என்று பக்தர்களை, அன்போடு அழைக்கும் விதமாக அமைந்துள்ளது..

திருக்கோவில் தரிசன நேரம் காலை 8 முதல் 12 வரை
மாலை 4 முதல் 8 மணி வரை
வாசக அன்பர்களே!! தாங்களும் தவறாது, இத்திருத்தலத்திற்கு விஜயம் செய்து, தரிசனம் பெற்று அரங்கனின் அன்பும் ஆசியும், பெறுவீர்களாக!!
Dear readers
This is the temple of Lord Uttar Ranganathar, situated in pallikonda near Gudiyatham on the Chennai- Bangaluru highway. this temple is 6 kilometres away from Gudiyaththam station.. Lord Ranganathan is in a sleeping posture.. Perumal made of salagrama stone..
Once there was a grudge between Devi Lakshmi and Saraswsthi regarding who is great..Lord Brahma was neutral.. Saraswsthi got wild and left Brahma..Bramha was about to do a Yaga for which Saraswsthi was in need.. Since she left, Bramha started the Yaga with Goddess Gayathri Devi.. Saraswsthi rose with anger, came in a form of Ksheera river to destroy the yaga.. Brahma prayed to Lord Mahavishnu, who came to his rescue and laid down across the river and stopped the floods.. Brahma finished his Yaga..In the yaga flames Lord Varadharajar appeared and hence his face will now have fire scars..
The temple has five storied gopuram, balipeedam, flag mast, Artha mandap and maha mandap..on the outer pragara there are shrines for Ramanuja, Hanuman, Tamar,Kannan, Andal and Nagar..There are also deities of Urchavar, twelve Azhwars, senai mudaliar, pillai logachariar, Manavala mamunigal, Navaneetha Krishna..The sthala viruksham is Parijatham..
Lord is facing South and the Goddess Sridevi and boodevi are sitting at his feet side..
Temple timings: 8 am to 12noon and 4 pm to 8 pm
Dear Readers visit this temple and have blessings of Lord Uththara Ranganathan..