தென்னிந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆட்சி எப்போது துவங்கியது என்று நாம் இப்போது பார்ப்போம்.. தில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜி குஜராத் மீது படையெடுத்து வந்து அங்கிருந்த சோமநாதர் ஆலயத்தை இடித்து தள்ள ஆணையிட்டார்.. பண்டைய பாரதத்தில், வடமேற்கில் இருந்து, இந்தியாவிற்குள் நுழைந்த, இந்த இஸ்லாமியர்கள்,ஒவ்வொரு நாட்டின் மீதும் படையெடுத்து அந்த நாட்டில் உள்ள இந்துக் கோயில்களை எல்லாம் இடித்து தள்ளி, அங்குள்ள செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்து கொண்டு செல்வது மட்டுமின்றி, அந்த அரச குலங்களில் உள்ள பெண்களை மதமாற்றம் செய்து, திருமணம் செய்து கொள்வதும், மறுப்பவர்களை, கற்பழித்து கொல்வதும் தங்களின் வழிமுறைகளாக வைத்திருந்தனர்.. இத்தகைய கொடுமைகளுக்கு பயந்து, பல நாட்டின் அரச குல பெண்கள், தற்கொலை செய்து கொண்டுள்ளனர்..அலாவுதீன் கில்ஜி, குஜராத் மீது படையெடுத்து, அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த வகேலா குல மன்னன் இரண்டாம் கர்ண தேவன் என்பவனைக் கொன்றான்.. கில்ஜியின் படைத்தலைவன் 24. 2.1299 இல் குஜராத்தை கைப்பற்றியதுடன், சோமநாதபுரம் ஆலயத்தை இடித்துத் தள்ளினான்.. மேலும், குஜராத்தின் மன்னரது பட்டத்து அரசி கமலாதேவி மற்றும் அவரது பணிப்பெண் சந்த்ராம் என்கின்ற திருநங்கையையும் கைப்பற்றி, கில்ஜியிடமா ஒப்படைத்தான்.. கில்ஜி அந்த அரசியை மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டான்.. அந்த திருநங்கையை இஸ்லாமியராக மதம் மாற்றி, மாலிக் கபூர் என்று பெயரிட்டான்..
மதகுருக்களின் எதிர்ப்பையும் மீறி கில்ஜி மாலிக்காபூரிடம் உறவும், நட்பும் வைத்திருந்தான்.. மாலிக்காபூருக்கு,முதலில் சிறு படை தலைவனாகபதவி அளித்து இருந்தார் கில்ஜி.. மாலிக்காபூர், விரைவில் வளர்ந்து, பத்தாயிரம் படை வீரர்கள் கொண்ட படை தலைவன் ஆனான்.. மாலிக்காபூர் இரண்டு முறை தென் இந்தியாவின் மீது படையெடுத்தான்.. 1309ல் தேவகிரி மீது படையெடுத்து, மன்னர் ராமச்சந்திரன் ஆட்சி புரிந்த குஜராத் பகுதியை வென்று, அவனது மகள் சேதி என்பவரை கில்ஜிக்குப் பரிசாக பெற்று ஒப்படைத்தான்..கி.பி1311ல் வாரங்கல் நாட்டை ஆண்ட காகதிய குல மன்னர் பிரதாப் ருத்ர தேவனை வென்று சுல்தானுக்கு கப்பம் கட்ட வைத்தான..பிறகு, ஹொய்சளப் பேரரசை கைப்பற்றி ஹம்பி பகுதிகளில் இருந்த ஹொய்சள ஈஸ்வரர் கோவிலையும், கேதாரீஸ்வரர் கோயில் போன்ற போசளக் கட்டிடக் கலை நயம் மிக்க கோயில்களை இடித்தான்..
அதன்பிறகு ,தமிழ்நாட்டின் மீதும் படையெடுத்து,காஞ்சிபுரம், சிதம்பரம், திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய நகரங்களில் இருந்த கோயில்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததோடல்லாமல் கோயில் செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்து சென்றான்.. இஸ்லாமிய வரலாற்று அறிஞரான ஜியாவுதீன் ப்ரூணியின் கூற்றுப்படி, மாலிக்காபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களை மட்டும் 240 டன் தங்கத்தை, 612 யானைகள் மீதும், 20 ஆயிரம் குதிரைகள் மீதும் மேலேற்றி, தில்லிக்கு கொண்டு சென்றான்..
மாலிக் கபூரை, தமிழகத்திற்கு வரவழைத்த பெருமை, அந்தக்கால நம் தமிழ் மன்னர் களையே சாரும்.. நமது பண்டைய பாரதத்தின் சாபக்கேடு, நம்மிடையே ஒற்றுமை இல்லை.. முடியாட்சி மன்னர்களின் பதவி வெறி, அண்டை நாடுகளை கைப்பற்றி தமது ஆட்சிப் பகுதியை விரிவாக்கம் செய்தல், பங்காளி சண்டை, வாரிசு சண்டை, பதவி மோகம், பெண்களின் மீது மோகம், இவைகளே போர்களுக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது.. ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த அரசன் மேலோங்கி இருக்கிறானோ, அவனது ஆட்சி விரிவடைந்து இருக்கும்.. சிலகாலம் பல்லவர்,சில காலம் சோழர்,சில காலம் பாண்டியர்,…. இவ்வாறு இருக்கும்.. அதுபோல, மாலிக்காபூர் தமிழகம் வந்து கொள்ளையடித்து சென்றதற்கு காரணம் வாரிசு சண்டை..
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மரணத்திற்கு பின் அவரது மகன்கள் சுந்தரபாண்டியன் மற்றும் அவனது சகோதரன் வீரபாண்டியன் ஆகிய இருவரிடையே உள்நாட்டுப் போர் மூண்டது.. வீரபாண்டியன், மாலிக்காபூரின் துணையை நாடினான்.. மாலிக்காபூர் படையெடுத்து மதுரையை சூறையாடினான்.. அதற்கு பின்னாலும், பாண்டிய நாட்டில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தது.. மேலும் இருமுறை சுல்தானின் படைகள் குஸராவ்கான் தலைமையிலும், உலூக்கான் தலைமையிலும் வந்து மதுரையை சூறையாடடிச் சென்றன.. உலூக்கானின் இந்த மதுரை தாக்குதலுக்கு முன்னர் அவன், திருவரங்கத்தின் மீதும் படையெடுத்து கொள்ளை அடித்தான்..அவனிடமிருந்து “நம்பெருமாளைக்” காப்பாற்ற ஊர் ஊராக,அவரை கொண்டு சென்ற நிகழ்வை, எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் “திருவரங்கன் உலா” என்ற புதினத்தில் நெஞ்சம் உருக அழகாக சித்தரித்திருப்பார்.. படிப்போர் அனைவரின் கண்களும் குளமாகும்.. நெகிழ்வான தருணங்கள்,அதில் பல இருக்கும்.. வாசகர்கள், அந்த புதினத்தை தவறாமல் படியுங்கள்..
உலூக்கான் மதுரையை, டெல்லி சுல்தானகத்துடன் இணைத்து விட்டான் பாண்டியநாடு, மாபார் என்ற பெயருடன் டெல்லி சுல்தான் அரசுடன் இணைந்து, 5 தென்னிந்திய பிரதேசங்கள்ளுடன்( மாபார், தேவகிரி, டீலிங், கம்பிலி, துவாரசமுத்திரம்) என்று ஒன்றாகியது..கி.பி 1325 இல் உலூக்கான், முகமது-பின்- துக்ளக் என்ற பெயரில் அரசன் ஆனான்.. இவன், பாரசீகம் மற்றும் ப்ரோசான் (தற்கால ஆப்கானிஸ்தான்) ஆகிய நாடுகளில் படையெடுத்தான்.. இவனது கருவூலம் காலியனது.. படைவீரர்களுக்கு, சரிவர ஊதியம் கொடுக்காததால், எல்லையோர பிரதேசங்கள், பிரிந்து செல்ல முற்பட்டனர்.. முதலில், வங்காளம் போர்க்கொடி தூக்கியது. .பின்னர் ஆளுநர் ஜலாலுதீன் ஆசன் கான் மதுரையை தனி நாடாக அறிவித்தார்.. அப்போதுதான் மதுரை சுல்தானகம் உருவானது.. ஜலாலூதீன் 1835 இல் உருவாக்கிய மதுரை சுல்தானகம் 1378ல் சிக்கந்தர் ஷா காலத்தில், விஜயநகரப் பேரரசின், குமார கம்பணனின் தாக்குதலுடன் முடிவுக்கு வந்தது.. கிபி 1378ல் குமார கம்பணன், சிக்கந்தர் ஷாவை நேருக்கு நேர்,மோதி வாளால், அவனது தலையை வெட்டி வீசினார்.. அத்துடன் தென்னகத்தில் கொடுங்கோல் ஆட்சி செய்த இஸ்லாமியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது..
குமார கம்பணனின் வழித்தோன்றலான கிருஷ்ணதேவராயர், பின்னர் தென்னக கோவில்களுக்கு, பல திருப்பணிகள் செய்துள்ளார்
.
. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிருஷ்ணதேவராயரும், நாயக்க மன்னர்களும் ,பிரகாரங்கள் மற்றும் சபை மண்டபங்கள் கட்டி திருப்பணி செய்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.. குமார கம்பணன் காலத்திலேயே பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் போன்ற கோயில்களிலும் திருப்பணிகள் செய்துள்ளனர்..மதுரை மீனாட்சியம்மன் கோயில், செப்பனிடப்பட்டு புதிதாக பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன..
இஸ்லாமியர்கள் ஆட்சி தொடர்ந்திருந்தால், இந்து கோவில்கள், இன்னும் சீரழிந்து இருக்கும்..அந்த இஸ்லாமிய ஆட்சியை ஒழித்ததில், பெரும்பங்கு குமார கம்பணனையே சாரும்.. இக்கட்டுரையின் முதலில், வரலாறுக்கும், ஆன்மீகத்திற்கும் தொடர்பு என்ன? என்பது இறுதியில் தெரியும், என்று பதிவு செய்திருந்தேன்.. இந்த ஆன்மீகம் மீண்டும் தழைக்க, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு அறியப்பட வேண்டி உள்ளது என்பது வாசகர்களுக்கு தற்போது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.. பிற்காலத்தில் கிபி 1800 இல் மீண்டும் அங்கங்கே இஸ்லாமியர்கள் ஆட்சி புரிந்தாலும், அவர்கள், இந்து கோயில்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.. இன்னும் சொல்லப்போனால், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆற்காட்டு நவாப் திருப்பணிகள் செய்துள்ளதாக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன..
மன்னர் குமார கம்பணனின் மனைவி கங்கதேவி, தமது கணவரின் இந்த வீரச் செயல்களை “வீர கம்பராய சரித்திரா”என்கிற மதுரா விஜயம் என்ற காவியத்தை, செய்யுள் நடையில், வடமொழியில் இயற்றியுள்ளார்
.

. 1900 களின் ஆரம்பத்தில், இந்நூல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.. பண்டிதர் ஸ்ரீ ராமசாமி சாஸ்திரியார் என்பவர், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பாரம்பரிய நூலகத்தை ஆய்வு செய்தபோது இதனை கண்டெடுத்தார்.. அவருக்கு 61 ஓலைச்சுவடிகள் தான் கிடைத்தன.. 9 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.. 1924இல் திரு ஹரிஹர சாஸ்திரி மற்றும் திரு சீனிவாச சாஸ்திரி ஆகியோர், இந்நூலை திருவனந்தபுரத்தில் வெளியிட்டனர்.. மதுரையை மீட்ட பெருமை குமார கம்பணனையே சாரும்..
இந்தப்பதிவு மேற்காணும் நூலின் சாரத்தில் இருந்தும், இஸ்லாமிய படையெடுப்பு பற்றி ஆய்ந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் எழுதப்பட்டது.. இது குறித்து ஆய்வு செய்த அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்..
முற்றும்…
Very useful post. Thank you
LikeLike