அழகான நங்கைநல்லாள் அவள் தம் ஊரிலே
ஆலயம் தான் கொண்டாரே அழகாக சிங்கன் அவன்
அவருடனே கோயில் கொண்ட கோபாலன் நவநீதன்
அய்யிரண்டு நாட்களில் அழகான உற்சவம்
அதுவே மாசி பிரம்மோற்சவம்
ஆறாம் நாள் இரவினிலே ஆனை மீதமர்ந்து தான்
அகன்றிருந்த தெருவினிலே ஆர்பரித்தார் ஏசலில்
அடுத்த நாள் காலையில் ஆடி வந்தார் தேரினில்
அடியேன் அதை கண்டுள்ளம்தனில் ஆனந்தம் கொண்டேன்
அன்புமிகு வாசகர்க்கு அதனையே தந்தேன்