யஜுர் வேதத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன, அவை, கிருஷ்ண யஜுர் வேதம் மற்றும் சுக்ல யஜுர் வேதம் என்று தங்களுக்கு தெரிவித்திருந்தேன்.. அவை பற்றி இப்போது நான் விவரிக்கிறேன்.
இந்த இரண்டு பகுதிகளுமே செயல்முறைகள் (கிரியைகள்) மற்றும் அதற்கான ஸ்லோகங்களையும் விவரிக்கின்றன.. கிருஷ்ண யஜுர்வேதத்தில் அதிகமாக உரைநடை விளக்கங்களும் விரிவான அறிவுறுத்தல்களும்(instructions) உள்ளன..

கிருஷ்ண யஜுர் வேதத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன.. அவை, 1) தைத்திரீய சம்ஹிதை 2)மைத்ராயனி சம்ஹிதை3) சரக- கதா சம்ஹிதை 4)கபிஸ்தல- கதா சம்ஹிதை. சம்ஹிதைகள், ஒருவகை இந்து சமய நூல்கள் ஆகும்..சம்ஹிதைகளை மந்திரங்கள் என்றும் கூறுவார்கள்.. குறிப்பிட்ட தேவதைகளுக்கான மந்திரங்கள், வழிபாட்டு முறைகள், வேள்வி களுக்கான சூத்திரங்கள் ஆகியவற்றை கொண்ட தொகுப்பாகும்..வேள்விக் காலங்களில், இவை முழுமையாக பயன்படுத்தப்படும்..அதர்வண வேத சம்ஹிதை மட்டும் பில்லி, சூனியம், பிசாசு மந்திரங்களும் என்பனவற்றையும் பற்றி கூறுகிறது.. இவற்றுள், அதிகமாக உபயோகத்தில் உள்ளது தைத்திரீய சம்ஹிதை.. சம்ஹிதை இது ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது..ஒவ்வொரு காண்டத்திலும் அவற்றுடன் இணைந்த பிரமாணம் என்று சொல்லப்படுகிற வேத விளக்கம் கொண்டுள்ளன.. சில காண்டங்கள் அவற்றுடன் இணைந்த சிரௌத சூத்திரங்கள், க்ருஹ்ய சூத்திரங்கள், ஆரண்யகங்கள்,உபநிடதங்கள், பிரதி சாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்கள் கொண்டு விளங்குகின்றன..
இவற்றில் ஆரண்யகங்கள், வேத சடங்குகளில் பின்னாலுள்ள மெய்யியல்(truth) பற்றிக் கூறுபவை.. அமைதியாக காட்டிற்கு சென்று, அங்கு கற்று தெரிந்து கொள்ள வேண்டியவை..அந்த விவரங்களை கொண்டதனால் இதற்கு ஆரண்யகங்கள் என்று பெயர் .. வேள்விகளைச் செய்ய இயலாத முதியவர்கள், துறவிகள், ஓய்வு பெற்று காட்டிற்குச் சென்று பின்னர் கற்பதற்காக உருவாக்கப்பட்டவை.. இவற்றில் வேள்வியை விட அமைதியான தியானமே சிறந்தது,மிகவும் மேலானது என்று வலியுறுத்தப்படுகிறது.. உபநிடதங்கள் பற்றி தனியே காண்போம்..
சுக்ல யஜுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீஸ்வர யாக்ஞவல்கீயரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதனை யாக்ஞவல்கீயர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று, நேரடியாகப் பெற்றதாகவும் கூறப்படுகிறது

..இந்த வேதம் 15 சாகைகள்(உட்பிரிவு) கொண்டது.. ஆனால் தற்போது இரண்டு சாகைகள் மட்டுமே உள்ளன என்று நம்பப்படுகிறது.. அவை 1)வஜசனேயி மாத்தியந்தினீயம் 2)வஜசனேயி காண்வம்
இவற்றில் வஜசனேயி மாத்தியந்தினியம், வட இந்தியாவிலும் குஜராத்திலும், நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது.. அதனை பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் முதலிடத்தில் உள்ளது..காண்வ சாகை நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராஷ்டிரா, ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது..ஜகத்குரு ஆதிசங்கரர் காண்வ சாகையை பின்பற்றுபவர் என்று கூறப்படுகிறது.. ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது..
மிகச்சிறந்த உபநிடதங்கள் ஆன ஈசாவாஸ்யம், பிரகதாரண்யம் ஆகியவை சுக்கில யஜுர் வேதத்துக்கு உரியவை.. பிரகதாரண்யமா எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்றும் மிகவும் செம்மையானது என்றும் கூறப்படுகிறது.. மாத்தியந்தினியம், காண்வம் இரண்டிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாக தொகுப்பு உள்ளது..
சதபத பிரமானம்
சதபத பிரமானம் என்பது வேத கிரியைகள்,சுக்ல யஜுர் வேதத் தோடு தொடர்புடைய வரலாறுகள் ஆகியவற்றை விளக்கும் உரைநடை நூல்களாகும்.. இது 100 பகுதிகளை கொண்டது.. இதில் பலிபீடங்களை உருவாக்குதல், சடங்குகளுக்கான மந்திரங்கள், சோமபானம் என்பவற்றோடு சடங்குகளின் ஒவ்வொரு அம்சம் தொடர்பில் உள்ள குறியீடுகள், பற்றி விரிவாக விளக்குகிறது,,இது, இந்தியாவின் இரும்பு காலத்தில், எட்டாவது முதல் ஆறாவது நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றியது.. இந்த பிரமாணம் வாஜசனேயி மாந்தியம் மற்றும் காண்வ ஆகிய இரு வடிவங்களில் உள்ளது.. வாஜசனேயி மாந்தியம் 100 அத்தியாயங்கள், 14 காண்டங்கள், 7624 காண்டிகங்ளும், காண்வ வடிவம், 104அத்தியாயங்கள், 17 காண்டங்கள்,6806 காண்டீகங்கள் கொண்டவை ஆகும்..
மாத்தியந்தியன வடிவத்தின் 14 காண்டங்களையும், இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம்.. முதல் 9 காண்டங்களும், பிரமாணத்திற்கு இணையான யஜுர் வேதத்தின் சம்ஹிதையின் முதல் 18 காண்டங்களுக்கு உரை விளக்கங்கள் தரும்.. ஏனைய ஐந்து கண்டங்களில் 14வது காண்டத்தின் பெரும்பகுதியாகக் காணப்படும் பிரகதாரண்ய உபநிடதம் தவிர மேலதிக விவரங்களும், சடங்கு சார்ந்த புதிய விவரங்களும் உள்ளன.. இந்த நூலின் சிறப்பு எதுவென்றால் இதன் பகுதிகள் மனுவின் பெருவெள்ளம், படைப்பு என்பன குறித்து விவரிக்கின்றது..இதுதவிர, நீர்மூல பயன்பாடு, ஒளி, இருள் தொடர்பான விளக்கம், நல்வினை, தீவினை பிரிவுகள், காலம் குறித்த விளக்கம் ஆகியன உள்ளன..
அத்தியாயம் 8
சாம வேதம்

சாம வேதம் என்றால் பாடலுடன் கூடிய அறிவு என்று பொருள்.. சாமன் என்றால் பாடல்.. இது நான்கு வேதங்களில் மூன்றாவது ஆகும்.. இது 1549 செய்யுள்களால் உருவாக்கப்பட்டது ..அவற்றுள் 75 செய்யுள்கள், ரிக் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். இந்த வேதம் ரிக் வேத காலத்தில் இறுதிப்பகுதி கிமு 1200 அல்லது 1000 ஆண்டுகளில் தோன்றி, யஜுர் மற்றும் அதர்வண வேத காலத்தில் முழுமை அடைந்ததாக கருதலாம்.. இந்த வேதம் உள்ளடக்கி இருக்கும்.. சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் கேன உபநிடதம், மெய்யியலின், அதாவது தத்துவத்தினை குறிப்பாக, வேதத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.. இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் ஆகியவை சாம வேதத்தில் இருந்து தோன்றியதாக கருதப்படுகின்றன.. அதனால்தான் பரமேஸ்வரனின் ஒரு அம்சமான நடராஜருக்கு சாமகானம் பிரியம் உள்ளதாக கருதப்படுகிறது..
அதர்வண வேதம்

அதர்வண வேதம்,பிரம்ம வேதம் எனப்படும் இந்த வேதம், 731 செய்யுள்களை கொண்டு, 20 பகுதிகளாக உள்ளது.. இதன் உச்சாடனம் மாந்திரீகம் போன்றவற்றால், தீய சக்திகளையும், எதிரிகளையும் வெற்றி பெறும் வழிகளை கூறுகிறது எனலாம்.. சிற்ப வேதம், அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகும்.. இது கட்டிடக்கலை பற்றி விவரிக்கிறது..

இந்த வேதங்களுக்கு உப வேதங்கள் உள்ளன.. அவைகளை பற்றி நாம் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்…