
பண்டைய தமிழகத்தில் கொங்கு நாட்டில் கருவூரில் எறிபத்தர் என்ற சிவபக்தர் அவதரித்தார்.. அந்த ஊரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபட்டு சிவனடியார்களுக்குத் தொண்டு ஆற்றி வந்தார்.. இவர் சிவனடியார்களுக்கு ஏதேனும் இடர் வந்தால் அந்த இடத்திலேயே அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்டவர்.. அப்படி எந்த சிவனடியாருக்காகிலும் இடர் வந்தால் தீங்கு செய்தவர்களை பரசு எனும் தனது மழுபடை(கோடாரி) எறிந்து தண்டிப்பார்.. அதற்காக தன் கையில் எப்போதும் கோடாரி வைத்திருப்பார்..
அந்த ஊரில் திருநிலைக் கோயிலில் இறைவனுக்கு பள்ளிப் பூமாலை சேவைக்கு பணிசெய்யும் பணியை சிவகாமி ஆண்டார் என்ற ஒரு முதியவர் அடியார் செயது வந்நதார்.. அவர் ஒருநாள், வைகறையில் எழுந்து நீராடி, தூய்மை உடையவராய், அங்கு இருந்த நந்தவனம் சென்று மலர்களை பறித்து கூடையில் நிரப்பி ஒரு தண்டில் மேல் வைத்து உயரத்தில் தூக்கிக் கொண்டு திருக்கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார்.. அன்று மகா நவமி முதல் நாள்.. அந்த நகரில் ஆட்சி செய்து வந்த புகழ் சோழர் என்ற அரசனின் பட்டத்து யானை ஆற்றில் நீராடி, அலங்காரம் செய்துகொண்டு ,மதம் பிடித்து பாகனுக்கு அடங்காமல் விரைந்து சென்று கொண்டிருந்தது..சிவகாமி ஆண்டார் கையில் இருந்த கூடையை, அது பறித்து வீசி எறிந்தது.. அதனால் வெகுண்ட அந்த முதியவர், தன் கையில் இருந்த தண்டினால் அதனை அடிக்க பின்தொடர்ந்தார்.. ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக, இடறி கீழே விழுந்தார் கைகளை நிலத்தில் அறைந்து மோதி அழுதார்..”சிவதா, சிவதா “என்று ஓலமிட்டார்.. அவரது ஒலத்தைக் கேட்ட எறிபத்தர், சிவகாமி ஆண்டார் இடம், விவரம் கேட்டு, அறிந்து, வெகு கோபத்துடன் அந்த யானையை பின்தொடர்ந்து சென்று ,அதன் துதிக்கையை கோடாரியால் வெட்டி எறிந்தார்.. மேலும்,யானைக்கு முன்பாகவும் பின்பாகவும் சென்ற காவலர்களை வெட்டி வீசினார்.. யானை பாகர்களையும் வெட்டி எறிந்தார்.

.தமது பட்டத்து யானையையும், பாகனையும் கொன்ற செய்தியை கேட்ட புகழ் சோழர் வெகுண்டார்..இது பகைவர்கள் செயலாகும் என கருதி, நால்வகை சேனைகளுடன் அந்த இடத்திற்கு விரைந்தார்… அங்கே, கோடாரியுடன் நின்றிருந்த எறிபத்தரைக் கண்டார்.. யானையையும், பாகனையும் வெட்டி வீழ்த்தியது அவரே என்று அறிந்து கொண்டார்.. ஆனால், சிவபெருமானுக்கு அன்பராய், பண்புடைய சிவனடியார் ஏதேனும் தவறு நடந்திருந்தால் அல்லாது இவ்வாறான குற்றச் செயலை செய்யமாட்டார் என்று கருதினார்.. எனவே, தமது யானையும் அவர்களும் ஏதோ தவறு செய்துள்ளனர் என்று முடிவுக்கு வந்து, அவரை வணங்கி, அவரிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டார்.புகழ் சோழரும் சிறந்த சிவபக்தர்.. “சிவனடியாருக்கு செய்த பெரும் குற்றத்திற்காக இந்த தண்டனை போதாது.. இந்த குற்றத்திற்கு காரணமான என்னையும் கொல்லுதல் வேண்டும்” என்று சொன்னார் ..ஆனால் மங்கலம் அடங்கிய அந்த கோடாலரியால் கொல்வது மரபு இல்லை; என்று தமது வாளை எடுத்து எறிபத்தர் இடம் நீட்டி , அவ்வாளால், தன்னை கொல்லுமாறு வேண்டினார்

அதனை கண்ட எறிபத்தர, அந்த வாளை வாங்கவிடில் எங்கே அந்த சிவபக்தரான சோழ மன்னர் தம்மை அவ்வாளால் வெட்டி கொள்வாரோ என்று அஞ்சி அந்த வாழளை பெற்றுக்கொண்டார்.. ஆனால், எறிபத்தரோ, யானையும் பாகர்களையும் கொன்ற நான் தான் தண்டனைக்கு உரியவன் என்று வாதாடினார்.. தமது கருத்தினை புகழ் சோழர் அறிந்து கொள்ள தலைப்பட்டார்..
புகழ் சோழர், உடனே அவரது கரத்தை பிடித்து தடுத்து “பெரியோர் செய்கை இருந்தவாறு கெட்டேன்” என்று பரிதவித்தார்.. அப்போது, அங்கே அசரீரியாக சிவபெருமான், “யாராலும், எவராலும் தொழத்தகும் பேரன்பு உடையவர்களே!! உங்கள் திருத்தொண்டினை, உலகத்தாருக்கு உணர்த்தவே இந்த நிகழ்வுகள் யாவும் இறைவன் அருளால் நிகழ்ந்தது” என்று அருளினார்.
யானையும் பாகர்களும்,உயிர் பெற்று எழுந்தனர்.. எறிபத்தரும், புகழ் சோழரும் ஒருவரை ஒருவர் நிலத்தில் விழுந்து வணங்கினர்.. சிவகாமி ஆண்டாரின் பூக்கூடையுமா மலர்களால் நிரம்பியது..பின்னர்,புகழ் சோழன் யானை மீது அமர்ந்து அரண்மனை திரும்பினார்..
எறிபத்தர் தொடர்ந்து சிவத்தொண்டு புரிந்து திருக்கயிலை ஏகி சிவகணங்களுக்கு தலைவராக விளங்கினார்..இவர் “எறிபத்த நாயனார்” என்று அழைக்கப்பட்டு 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தார்..

அதேபோல புகழ்ச்சோழரும் சிறந்த சிவ தொண்டு ஆற்றி 63 நாயன்மார்களில் ஒருவராக “புகழ்ச்சோழ நாயனார்‘ என்று பெயர் பெற்றார்..அவரது வரலாற்றை,தனியே பதிவு செய்கிறேன்..
எறிபத்த நாயனாரும், புகழ் சோழ நாயனாரும் தற்போதைய கரூர் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் சிவத்தொண்டு ஆற்றி வந்தவர்கள்.

“இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் இந்த நாயனாரைப் பாடியுள்ளார்..
ஓம் நமச்சிவாய
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க