நல்ல நட்பு

“வாங்க குழந்தைகளை எல்லோரும் வந்துட்டீங்களா? சந்தோஷம் இன்னிக்கு யார் யார் புதுசா வந்து இருக்கீங்க? சொல்லுங்க சொல்லுங்க… ஒவ்வொருத்தரா.. வெரி குட் வெரி குட்.. எல்லோரும் தள்ளி தள்ளி ஒக்காருங்க.. you should keep up social distancing”
“எல்லாரும் சாப்பிட்டுட்டு வந்துட்டீங்களா? என்ன சாப்டீங்க?
” இட்லி…தோசை… சப்பாத்தி.. ரசம் சாதம்.. பால் சாதம்….”
அப்படியா!! ஓகே ஓகே!! நீங்க வரும்போது வாசலில் இருந்த சேனிடைசர் வச்சிருந்தேனே..அதுல கைய கிளீன் பண்ணி இருக்கீங்களா? சந்தோஷம் “
வர வர எனக்கு நிறைய ஃபேன்ஸ் கிடைச்சிருக்காங்க.. பரவாயில்லை.. இந்த வீடு போதாது போல இருக்கே?! வேற இடம் தேடணும் போல இருக்கே..ஊம்.. என்ன செய்யலாம்?”
” தாத்தா.. நம்ம ஃப்ளாட்ஸ் ப்ளே ஏரியா இருக்கே…அங்க போகலாம்..”
” நோ..நோ..அங்க ராத்திரி நேரத்தில பூச்சி ஏதாவது இருக்கும்…”
நான் ஒண்ணு செய்கிறேன்.. நம்ம ஃப்ளாட்ஸ் அசோசியேஷன் செகரெட்டரி கிட்ட சொல்லி நம்மளுடைய அசோசியேஷன் மீட்டிங் ஹாலை தர சொல்றேன்… அடுத்த வாரத்தில் இருந்து நாம எல்லோரும் அங்க போய், கதை கேட்கலாம்.. என்ன சரியா?”
“போனவாரம் நான் என்ன கதை சொன்னேன்? யாருக்காவது ஞாபகம் இருக்கா?”
“ஆமாம் தாத்தா!!பேட்பிரெண்ட்ஷிப் பத்தி சொன்னிங்க.. ஞாபகம் இருக்கு.. நாங்க, நீங்க சொன்ன படியே நடந்துக்கறோம்..”
“இந்த வாரம், நான் உங்களுக்கு குட் பிரெண்ட்ஷிப் பத்தி சொல்ல போறேன். அதுக்கு முன்னால ஒரு குட்டி கதை..”
“ஒரு ஊர்ல… ஒரு வயல்.. நீங்களெல்லாம் வயல் பாத்து இருக்கீங்களா? Paddy fields.. நீங்க ஊருக்கு கார்ல், பஸ்ல, ட்ரெயின்ல போகச்சே பச்சை பசேலென இரூக்குமே. இதோ இந்த படத்துல இருக்கு பாருங்க..”

. அந்த வயலுக்கு பக்கத்துல, ஒரு சின்ன ஓடை இருந்தது..ஓடை தெரியுமா? Small canal.. அந்த ஓடையின் பக்கத்துல மண் மேல ஒரு கட்டெறும்பு போயிட்டு இருந்தது.. கட்டெறும்பு தெரியுமா? Big ant.. திடீர்னு, அந்த கட்டெறும்பு மண்ணில் இருந்து சறுக்கி தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு.அதுக்கு நீச்சல் தெரியாது.. உசுருக்கு போராடி கிட்டு இருந்தது..அப்போ, பக்கத்துல, மரத்து மேல ஒரு புறா இருந்தது. அது, இந்த கட்டெறும்பு பார்த்தது.. அதை காப்பாத்தனும், அப்படின்னு சொல்லி, ஒரு இலையை எடுத்து அந்த எறும்புக்கு பக்கத்துல போட்டுது.. அந்த எறும்பு அந்த இலை மேலே ஏறி, பக்கத்துல மரத்தோட வேரு இருந்தது..அதுல ஏறி கரைக்கு வந்தது.. நிமிர்ந்து பார்த்து புறாவுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லித்து.. அப்புறம் கட்டெறும்பு திரும்பி பார்த்தா.. அங்கே, ஒரு வேடன் கையில் வில்லு அம்பு வச்சுக்கிட்டு அந்த புறாவை குறி பார்த்துகிட்டு இருந்தான்.. இந்த எறும்பு, அந்த புறாவை எப்படியாவது காப்பாத்தணும்னு, அப்படின்னு சொல்லி அந்த வேடன் கிட்ட போச்சு.. சரியா… சரியா அந்த வேடன் புறாவை குறி வச்சு அம்பு விட பாத்தப்ப, இந்த கட்டெறும்பு அவன் காலை கடிச்சது..

வேடன் வலி தாங்காம அம்பை வேறு திசைல திருப்பி விட்டு விட்டான்.. அந்த புறா தப்பிச்சு பறந்து போச்சு.. அதிலிருந்து ரெண்டும் ரொம்ப பிரண்ட்ஷிப்பா இருந்தது..இது குட் பிரண்ட்ஷிப்!! இல்லையா? இதே மாதிரி ராமாயணத்துல வர ஒரு குட் பிரெண்ட்ஷிப் பத்தி இப்ப நான் உங்களுக்கு சொல்லப் போறேன்.. கேக்குறீங்களா?”
“உங்க எல்லாருக்கும் ராமாயணம் தெரியுமா?”
“கொஞ்சம் கொஞ்சம் தெரியும்..”
“அதுல இருந்து இப்ப ஒரு சம்பவத்தை சொல்லப்போறேன். ராமர், தசரதர் சொன்னமாதிரி சீதா,லக்ஷ்மணன், இரண்டு பேரோட காட்டுக்கு போக நாட்டைவிட்டு வெளியே வந்தார்.. அப்போ, கங்கை கரைக்கு வந்தார்.. அந்த கங்கை கரையில், ஒரு வேடன் இருந்தான்..அவன் பெயர் குகன்.. அவன், ராமரைப் பற்றி ரொம்ப உயர்வா கேள்வி பட்டு அவரையே நினைச்சு கிட்டு இருந்தான். ராமனைப் பார்த்ததும், அவனுக்கு ரொம்ப சந்தோஷம்..தன்னோட மந்திரிகள், மக்கள் எல்லோருடனும் அவர்கிட்ட வந்து ராமரை பார்த்து” நீங்க!! இங்க வந்தது ரொம்ப சந்தோசம்.. எங்களுக்கு இதைவிட என்ன பாக்கியம் கிடைக்கும்?” அப்படின்னு சொல்லி, அவருக்கு சாப்பிட ,பழம் மற்றும் பல சாப்பிடற பொருளை எல்லாம் தட்டில் வச்சு கொண்டு வந்து கொடுத்தான்
ராமர் அதை பார்த்து,ரொம்ப சந்தோஷப்பட்டு,” குகா!! நீ எங்களுக்கு செய்யற உபச்சாரம் ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆனா, இப்போ காட்டுல வாசம் செய்யறதற்காக, சன்னியாசியா நான் வந்து இருக்கேன்… அதனால இந்த பொருளெல்லாம் ஏத்துக்க முடியாது.. பழங்களை மட்டும் சாப்பிடறேன்” அப்படின்னு சொல்லி அவர் பழத்தை மட்டும் எடுத்துகிட்டார்.. அதற்கப்புறம், குகன், ராமர் கிட்ட ” சாமீ..!!நீங்க காட்டுல எங்கயும் போயி கஷ்டப்பட வேண்டாம்.. இங்கேயே ராஜாவா இருந்து, எங்களுக்கு தலைவரா இருங்க” அப்படின்னு வேண்டி சொன்னான்..
ஆனால், ராமர்,” நீ சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. ஆனா, நானே ராஜ்யம் வேண்டாம் அப்படின்னு சொல்லித்தான் காட்டுக்கு வந்து இருக்கேன்… அப்படி இருக்க.. நான் எப்படி உங்களுக்கு ராஜாவா இருக்க முடியும்?.. நீங்க எப்பவும் போல சந்தோஷமா இருங்க.. நீங்க சொன்ன வரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோசம், உன்ன மாதிரி ஒரு நண்பன் கிடைச்சதற்கு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. ஏன்? இன்னும் சொல்லப்போனால், நான் உன்ன நண்பனா ஏத்துகிட்டு இருக்கறதுக்கு பதிலா உன்னை என்னுடைய சகோதரனா ஏத்துக்கறேன்.. எனக்கு முன்னால மூன்று தம்பிகள் உண்டு.. உன்னோடு சேர்த்து நான்கு தம்பிகள் ஆச்சு.. நாம மொத்தம் அஞ்சு பேரு..” அப்படின்னு சொல்லி,குகனை கட்டி தழுவி ஆலிங்கனம் பண்ணிக்கிட்டார்.. குகனுக்கு ரொம்பவும் சந்தோஷமாகி கண்ணில இருந்து கண்ணீர் வந்துச்சு.. “நான் வந்து ரொம்ப தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன்.. அப்படி இருக்க.. என்ன உங்களோட தம்பியா ஏத்துகிட்டது எனக்கு ரொம்பவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கு.. இதற்காக நான் உங்களுக்கு என்ன செய்யப் போறேன்..” அப்படின்னு உணர்ச்சிவசப்பட்டு அழுதான்.. ராமர், அவனை சமாதானம் செய்து, “நீ இதற்காக ரொம்பவும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்” அப்படின்னு சொல்லி “பஞ்சவடி செல்லும் வழி எது சொல்லு” அப்படின்னு கேட்டார்

அவன் அவர்களை தன்னுடைய படகில் ஏத்திகிட்டு கங்கைக்கு அந்தப்புறம் கொண்டுவிட்டான்.. ராமர் அவன் கிட்டேயிருந்து விடை பெற்றுக் கொண்டார்..
இந்த கதையில, உங்களுக்கு இவங்க பிரெண்ட்ஷிப் எப்படி இருந்துச்சு..? அப்படிங்கறத நீங்க புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க இல்லையா? நீங்களும் உங்க பிரெண்ட்ஸ, நல்லவனா, குட் ஹேபிட்ஸ் உள்ளவனா, அப்படின்னு பார்த்து செலக்ட் பண்ணி, பிரெண்ட்ஷிப் வெச்சுக்கணும் புரிஞ்சுதா?
நீங்க எல்லாரும், இப்ப போயி நல்லா தூங்குங்க.. நாளை பிரஷ்ஷாக .. இருக்கும்..அடுத்த வாரம் இதே மாதிரி இன்னொரு கதை சொல்லறேன்.. என்ன ஓகேவா?சரி.? நம்முடைய சாகேத்தும், வ்ருந்தாவும் இந்த வாரம் வந்துட்டாங்க போல இருக்கே? அவங்களுக்கு நான் போன வாரம் சொன்ன கதையை சொன்னீர்களா?
ஓஓஓஓ சொன்னோமே..”
ஓகே..! குட்நைட்..
குட்நைட் தாத்தா..