மனம் குளிர்விக்கும் மணக்குள விநாயகர் மற்றும் மராத்திய மோர்கவோன் ஆலயம்

மூஷிக வாஹன மோதக ஹஸ்த ஸ்யாமள கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே!!

சென்ற ஜனவரி மாதத்தில் புதுச்சேரியில் உள்ள அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலில் அந்த சுக்ல சதுர்த்தி சுந்தர நாயகனைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.!

இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பே அதாவது கி.பி 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள மிகவும் பழமையான கோயில்..மணல் குளம் என்பது மருவி மணக்குளம் என்று ஆயிற்று.. புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று.. புகழ் பெற்ற விநாயகர் கோயிலில் இதுவும் ஒன்று.. கோயிலின் உட்புறத்தில் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ண படங்கள் வரையப்பட்டு காண்பவர்கள் அளவில்லா ஆனந்தம் அடையச் செய்யும்.. அதேபோல் சுற்றுப்புற சுவர்களிலும் பல வண்ண படங்கள் வரையப்பட்டு உள்ளன..

இந்த கோயிலுக்கு தொடர்புடைய ஒரு சித்தர் உள்ளார்.. அவர் பெயர் தொள்ளைக்காது சித்தர்.. அவர் அம்மன் அருளால் ஞானியானார்..முரட்டாண்டி என்ற ஊரிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுச்சேரி வந்தார். கடற்கரை அருகில் இருந்த மணல் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து அந்த விநாயகரை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் ஐந்து மைல் நடந்து வந்து விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டு திரும்பவும் நடந்தே சென்று முரட்டாண்டி அம்மனை வழிபட்டு வருவது அவரது தினசரி வாடிக்கையாகும்.! தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து அவர்களின் குறைகளைக் கேட்டு தீர்த்து வைத்தார்!! அவரது குடிசையை மக்கள்” சித்தன் குடிசை” என்று அழைத்து வந்தனர்.. இன்றளவும் அப்பெயரிலேயே அப்பகுதி அழைக்கப்படுகிறது.! அவரது காதில் பெரிய துளை இருந்ததால் அவர் ” தொள்ளைக் காது சித்தர்” என்று அழைக்கப் பெற்றார்.!

கோயிலின் தரிசனம் நேரம்: காலை 5.45 முதல் 12?30 வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 வரை

விழா நாட்கள் மற்ற விடுமுறை நாட்களில் மாற்றம் உண்டு..

வாசகர்களே!! நாம் அங்கிருந்து மணக்குளத்தில் இருந்து மராட்டியத்திற்குப் பயணப்பட்டு பாரதத்தின் வடமேற்கு திசையில் புனே நகரத்துக்கு அருகில் உள்ள அஷ்ட கணபதி கோயில்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

மகாராட்டிர மாநிலம் அஷ்ட கணபதி கோயில்கள்

இந்த அஷ்ட என்று சொல்லப் படுகிற இந்த எட்டு விநாயகர்கள் தடைகளை நீக்கி ஒற்றுமை, செல்வம், கல்வி, அறிவு ஆகியவற்றை அருள்பவர்கள் ஆவர்.! இந்த எட்டு கோயில்களும் மகாராட்டிர மாநிலத்தில் புனே, ராய் கட், மற்றும் அகமது நகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.. இந்த எட்டு கோயில்களுக்கும் மராத்திய பக்தர்கள் கால்நடையாகவே சென்று வழிபடுவது வழக்கமாகும்.. இந்த அஷ்ட மூர்த்திகளும் சுயம்பு மூர்த்திகளாகும்..

இவற்றில் மோரேஷ்வர் எனும் கோயிலில் துவங்கி, சித்தி விநாயக், பல்லாலேஷ்வர், வரத விநாயகர், சிந்தாமணி விநாயகர், லெண்யாத்ரி கணபதி குடைவரைக் கோயில், விக்னேஸ்வரன் கோயில் மற்றும் ரஞ்சன் கோண் கணபதி கோயிலை தரிசித்து மீண்டும் மோரேஷ்வர் கோயிலில் தங்களது பாதயாத்திரை பயணத்தை முடிப்பது வழக்கம்.

நாம் முதலில் மோர்கவான் கணேஸ்வரரை தரிசிக்கலாம்.. பின்னர் ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் ஒவ்வொரு கோயிலாகப் பதிவு செய்கிறேன்..

மோர்கவோன் கணேசர் ஆலயம் அல்லது ஸ்ரீ மயூரேஸ்வரர் மந்திர்

இந்த கோயில் புனே நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. இது மிகவும் பிரசித்தமான ஆலயம் ஆகும்.. விநாயகரின் புராணக் கதைகள் கூறும் முத்கல புராணத்தில் மோர்கவோன் கணேசர் கோவில் பற்றிய 22 பகுதிகள் காணப்படுகின்றன..கணேசரைத் தரிசிக்க கூடிய பூலோகத்தில் உள்ள முக்கிய மூன்று ஆலயங்களில் கைலாயத்தையும், பாதாளத்தையும் அடுத்து மோர்கவோன் ஆலயமும் ஒன்றாகும் என்று கணேச புராணத்தில் கூறப்பட்டுள்ளது.! இவ்வாலயத்தின் மூலவரான மயூரேஸ்வரரின் வாகனம் மயில் ஆகும்.!

சிந்து எனும் அரக்கனைக் கொல்வதற்காக ஆறு கரங்களையும் வெண்ணிற மேனியும் கொண்ட உருவம் அதாவது மயூரேஸ்வரர் அவதாரத்தினை விநாயகர் இந்த ஆலயத்தில் எடுத்தார் என்று ஐதீகம்..

மோர்ய கோசவி அல்லது மொரோபா எனவும் அழைக்கப்படும் விநாயக பக்தர் சினச்வார்ட் எனும் இடத்தில் புதிய ஆலயம் அமைப்பதற்கு முன்பு இந்த ஆலயத்தில் தான் வழிபட்டு வந்தார்..18 ஆம் நூற்றாண்டில் மராட்டிய பேரரசை ஆட்சி செய்த பிராமண பேஷ்வாக்குகளால் இந்த ஆலயங்கள் யாவும் பராமரிக்கப்பட்டு வந்தன. அவர்களின் குலதெய்வம் விநாயகர் ஆவார்..

சமர்த்த ராமதாஸரினால் இக்கோயில் மூலவரான மயூரேஸ்வரர் மீது பிரபல மராத்திய பஜனைப் பாடலான ‘ சுகக்கிர துகக்கிர’ எனும் ஆரத்திப் பாடல் பாடப்பட்டது..

வாசகர்களே!! மற்ற ஏழு கோவில்கள் பற்றி ஒவ்வொரு சதுர்த்தி நாளன்று பதிவு செய்கிறேன்.!அடுத்த பதிவில் அகமது நகர் மாவட்டம் சித்தேடெக் எனும் இடத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயில் பார்ப்போம்

ஜெய் கணேஸா!!!! ஸ்ரீ கணேஸா!!!!!

Dear Readers

The first write up is about the temple called Sri Manskula Vinayagar temple situated in Pondicherry town near the sea shore.. The temple is an ancient one and it’s time was before the French rule over there,. i.e., before 1866AD..

I visited this temple last January and had a good dharshan..There are good paintings on the inner roof as well as the side walls depicting the pictures of Lord Vinayagar..

The second write up is about the eight temples of Lord Ganesha called Ashta Ganapathy temples situated in Pune, Rai ghat, and Ahmed nagar district of Maharashtra..The first one is Morgovon temple. The main deity is named Mayureswarar..It’s vahan is peacock..

Lord Ganesha took his Avatar with six hands and white complexion to kill the Asura called Sindhu.. Pilgrimagers usually travel on foot to all the eight temples, starting from this temple and end here after visiting siddhi vinayak, Balkeshwar, Varadha Vinayagar, Chintamani Vinayagar, Lenyadhri, Vigneswarar and Ranjan kon ganapathy..

Poet Ramadasar has sung Arthi song in the name of the main deity Sri Mayureswarar..

I shall post the details of other seven temples on every chaturthi one after another.

Jai Ganesa!!!! Sri

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: