
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!
பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் நான்காவது அவதாரம்!!நாளை என்பது இல்லை நரசிம்மருக்கு என்று சொல்வார்கள்.! பக்தர்கள் குறை தீர்க்க எங்கே எப்போது என்று காத்திருக்கும் கருணாமூர்த்தி அவர்..இரண்யகசிபு தன் மகன் பிரஹலாதனிடம் ஆவேசத்துடன் எங்கே உன் ஸ்ரீஹரி? என்று கேட்க , அந்த குழந்தை என் ஸ்ரீ ஹரி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று வாஞ்சையுடன் சொன்னான்.. ஒவ்வொரு தூணாகத் கட்டிக் கேட்க ஒரு தூணிலிருந்தே ஆக்ரோஷமாக அவதரித்தார் இந்த பரந்தாமன்..முகமோ சிம்மம், உடலோ மனிதன் என்ற மானுட மிருக கலப்பு தோற்றத்தில் அவதரித்த ந்ருசிம்ஹனைக் கண்ட பிரகலாதன் அஞ்சவில்லை..மாறாக துதித்தான். அந்த ஆக்ரோஷமான ந்ருசிம்ஹனை இந்த திருக்கோயிலில் லக்ஷ்மி தாயாரை மடிமேல் கிடத்தி கருணையுடன் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்..

இந்த திருக்கேயிலுக்கு நான் பலமுறை சென்று இருக்கிறேன்.. ஒவ்வொரு முறையும் தரிசிக்கும் போதும் புதிதாக பார்ப்பது போலவே தோன்றும்.. இந்த திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்னேரி என்ற கிராமத்திற்கு பக்கத்தில் கட்டவாக்கம் எனும் கிராமத்தில் உள்ளது.. இந்த தலம் செல்லும் வழிகள்:
பேருந்து வழி: ஆலந்தூரிலிருந்து பேருந்து எண் 79
தாம்பரத்தில் இருந்து பேருந்து எண் 579, 579ஏ
காரில் செல்லும் வழி:
1) தாம்பரம்- கட்டவாக்கம் ( வாலாஜாபாத்- சுங்குவார் சத்திரம் சாலை)
2) ஸ்ரீ பெரும்பூதுர்- ஒரகடம் சந்தி- வாலாஜாபாத்- கட்டவாக்கம்
இவ்விடம் செல்பவர்கள் உணவு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்.. அருகில் கடைகள் ஏதும் இல்லை..
இந்த திருக்கோயில் 2007ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்டது.!
ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அனந்த பீடம், யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக சேவை சாதிக்கிறார்.. பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பு தாங்கி மற்றும் அபயவரத ஹஸ்தத்துடன் கண் குளிர சேவை சாதிக்கிறார்!! மடியில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி தாயார் தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் அழகான தோற்றத்துடன் சேவை சாதிக்கிறார்.. இவர்கள் இருவருமே திவ்ய தம்பதிகள் என்பதில் ஐயமில்லை..
இந்த நரசிம்ம மூர்த்திக்கு 12 பற்கள் அமைந்துள்ளது..இது 12 ராசிகளைக் குறிக்கும்.. கிழக்கு திருமுக மண்டலம்.. அதில் அவரது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நெற்றிக் கண் செவ்வாய், நாசி சுக்கிரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆகிய நவக்ரஹங்களும் பெருமாளிடத்தில் ஐக்கியமாகி உள்ளன.! பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களை நினைவு படுத்தும். கூர்ம பீடம் கூர்மாவதாரம், வஜ்ரதம் வராக அவதாரம், வில் அம்பு பரசுராமர், ராம அவதாரம், சக்ரம் கிருஷ்ணர் அவதாரத்தையும் குறிக்கிறது..
ஸஸ பெருமாளின் உயரம் 16 அடி, பீடத்தையும் சேர்த்து 25 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார்!!
வாசகர்களே!! இந்த விசேஷமான திவ்ய தம்பதிகளின் தரிசனத்தை கண் குளிர கண்டு சகல சௌபாக்கியங்களும் பெற வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் அருளாலும் வாசகர்களாகிய உங்கள் அனைவரின் ஆதரவினாலும் இந்த 75 வது பதிவினை இத்தளத்தில் பதிவு செய்கிறேன்..
Dear Readers
This is the temple of Lord Lakshmi Narasimhan in a Vishwaroopam holding Mahalakshmi Thayar on his left lap..The Lord has been made to sit on five peetas called Koorma peeta,Adhara peeta, Padma Peeta, Anantha Peeta and Yoga peeta..The Lord has 12 teeth denoting 12 Rasis..His left eye is Chandran, and right eye is Surya..the third eye in the forehead is Sevvay…Nose is Sukra, top lip is Guru, bottom lip is Buthan, right ear Kethu, left ear Ragu.. Tongue is Saneeswar..So the Navagrahas are merged with the Lord..The Lord also hold Chakra , bow and arrow on his hands..So, he represents Six Avathars..Koorma, Varaha, Narasimha, Parasurama,Rama and Krishna..
The height of the Lord is 18feet with the base 25 feet..This temple is situated in a village called Kattavakkam, near Walajabad of Kancheepuram district..
There are no shops available nearby and the Readers who wants to visit the temple are requested to make their own arrangements..
Please go and have a Marvelous and remarkable dharshan of the Lord Vishwaroopa Lakshmi Narasimhan and get his blessings..